Saturday, September 27, 2008

இராச்(RAJ) தொ.கா. செய்தி சேகரிக்கும் தன்மை

இன்று சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி கிடைத்ததும். தொ.கா. செய்திகளை பார்ப்பதற்காக SUN NEWS & RAJ NEWS போன்ற செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதில் SUN NEWS இல் செய்திகளை தெளிவாக தெரிவித்தனர்.

ஆனால் RAJ செய்தியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திராவிடர்கழகம் என்றும் அதன் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்தது : பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் : கொளத்தூர் தா.செ மணி.

இந்த உண்மைகள் ராச் செய்தியாளர்களுக்கு தெரியவில்லையா?

அல்லது

தோழர் கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் பெரியார் திராவிடர்கழகம்தான் உண்மையான திராவிடர்கழகம் சென்று சொல்லவருகின்றனரா?

எனக்குப்புரியவில்லை என்ன சொல்லுகின்றார்கள் என்று. உங்களுக்குத்தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் தி.க. வின் செயல்பாடுகளை தி.க செயல்பாடு என்று திரித்து இங்குள்ள வியாபார நோக்கிலான பல தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Saturday, September 20, 2008

இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!-தமிழச்சி


பாரீஸ்,
16.09.2008

27.07.2008 - அன்று ஈழத்தில் நடைப்பெற்ற ஜீலை படுகொலைகள் நினைவாகப் பிரான்சில் நடத்தப்பட்ட 'நெடுங்குருதி' நிகழ்வின் ஏற்பாட்டாளர் திரு. குகன் அவர்கள் நிகழ்வு நடைப்பெறுவதற்கு முன்தினம் பிரான்ஸ் நாட்டு போலீசாரால் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை அனுபவித்தவர். மேலும் இவர் மீது பிரான்ஸ் போலீசில் பல வழக்குகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் குற்றப்பிரிவில் இவர் பெயர் நிரந்தரமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுங்குருதி நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மார்க்ஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். திரு. குகன் கைதுக்கு பிறகும் திரு. சோபா சக்தி அவர்கள் பொறுப்பேற்று நிகழ்த்தினார். பெரும்பான்மை மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர்களில் சிலரும் நிகழ்ச்சியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்றார்.

08.09.2008 அன்று கனடாவில் நடைப்பெற்ற 27 - ஆம் வருட பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இலக்கியவாதிகள் (நாகரீகம் கருதி பிரசுகரிப்பது தவீர்க்கப்படுகின்றது) அரசியல் சூழ்ச்சிக்கு தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றனர்.

பெண்கள் சந்திப்பு, தலீத் மகாநாடு, இலக்கிய சந்திப்பு அல்லது நிகழ்வுகள் என்ற பெயரில் பின்னணியில் இயங்குவது தீவிரவாத ஈழ அரசியல் மட்டுமே. இப்படி திரைமறைவுக்கு பின்னே இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாத அரசியலை இணையத்தில் 'தேசம் நெற்' இணையம் மற்றும் சில தனிநபர்கள் துணிந்து வெளிப்படுத்திய போது மறைமுகமாகவும், பகீரங்கமாகவும் மிரட்டப்படுகிறார்கள்.

ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் வன்முறை காட்டும் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற நெடுங்குருதி நிகழ்வும், பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் சாட்சியங்களுடன் அம்பலப்பட்ட நேரத்தில் கூட்டறிக்கை என்ற பெயரால் 74 பேர்களின் கையெப்பத்தில் ஜனநாயகம் பேசுகிறார்கள். எங்கேயிருந்து வருகிறது பொறுக்கித்தனம்?

தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதற்கு மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது ஏன்? அரசு அங்கீகாரம் பெறாத இவர்களின் அமைப்பும் கூட்டம் வராத மாநாட்டுக்கும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளை வரவழித்து அரசியல் செய்வது ஏன்? வன்முறையாளர்கள் ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் பொய் முகங்களுடன் வன்முறை அரசியல் செய்யும் இவர்கள் கூட்டங்களில் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளையும் திசைதிருப்பும் முயற்சி தமிழ்நாட்டிற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர 'பெரியார் விழிப்புணர்வு' இயக்கத்தினரும், உலக தமிழர்களும் இணையம் வழியாக தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டம் மூலமாக அறிவிக்கின்றோம்.

கருத்துக்ளையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அறிக்கைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
http://thesamnet.co.uk/?p=2630
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3974:2008-09-13-11-46-45&catid=74:2008
http://www.thenee.com/html/130908-2.html
http://inioru.com/?p=911
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2316:-1983-2008-q-&catid=74:2008&Itemid=76
http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html
http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=56
http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf


நன்றி

தொடர்புகளுக்கு: periyar.europe@gmail.com

பெரியார் விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள்.
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா
பிரான்ஸ் நாட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.
பதிவு எண்கள் : 0772014997

*****

பின்குறிப்பு : 01.10.2008 அன்று தமிழக முதல்வர் அவர்களிடம் 'பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின்' இக்கோரிக்கை அறிக்கையின் இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப இருப்பதால் சமூக ஆவலர்களும், தோழர்களும், பொது மக்களும் தங்களுடைய கருத்துக்களை பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா வலைப்பூவின் அறிக்கையில் பின்னூட்டம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வறிக்கையை சமூகவாதிகளும், தோழர்களும், இணையத்தளங்களும், நாளிதழ்களும், விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

ஈழத்துப்பெண்ணின் வாழ்க்கை

பிறப்பு முதல் இறப்பு வரை குறுந்தொடர், மனித உரிமைகள் மறந்து கிடக்கும் இலங்கை தீவினிலே மனித உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஈழதேசத்தில் என்றும் அழகுடன் காட்சியளிக்கும் புளியங்குளம் கிராமத்தின் ஆற்று நீரின் சலசல ஓசையும் குருவிகளின் கீச்சிடலும் ஓயாது கானம் இசைக்கும் வன்ப்பகுதியினால் சூழப்பட்ட ஓர் ஓலைக்குடிசையில் பிறந்த ஈழத் தமிழ் பெண்......... தாயின் கருவறையின் சுகத்தினை உணராது உலகத்தின் சுதந்திரத்தை அனுபவிக்க 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளினால் வைத்தியசாலைக்கு போக வழியில்லாது தவிக்கும் என் தாயின் ஏக்கம் சிறிதேனும் புரியாது இவ்உலகைப் பார்ப்பதற்கு தாயை துன்பப்படுத்தி துடிதுடித்தேன்.துன்பம் தங்கமுடியாத தாயும் தை 26ம் திகதி என்னை பிரசவித்தாள். குண்டு மழைக்கும் குருதி வெள்ளத்திற்கும் மத்தியில் ஆண்டுகள் ஓடின வயது மூன்று ஆகியது.கல்வி எனும் கடலின் கரையை அடைவதற்கு என் வீட்டின் பக்கத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலே கல்வியை ஆரம்பித்தேன்.மழலை மாறாத எங்களின் திறமையை திறம்பட சிற்பமாக்க முனைந்த முதல் சிற்பி என் அன்பு ஆசான் இந்திராணி................................தொடரும் இதோ என் வாழ்கை தொடர்கிறது. இந்திராணி ஆசிரியரின் வழிகாட்டலுடன் எனது பாடசாலை கல்வியை முல்லைத்தீவு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பயில தொடங்கினேன்.எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய பாடசாலை. அத்துடன் இன்றைய எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அண்ணா படித்த பாடசாலையும் இது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எனக்கு கஜன் அண்ணாவைத்தான் தெரியும் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு காணவில்லை.எமது பாடசாலையில் கல்விகற்ற தேசப்பற்றுக்கொண்ட மாணவர்களில் நான் மட்டும் விதிவிலக்கில்லை.எனது கல்வி 5ம் ஆண்டு வரை அப் பாடசாலையில் தொடர்ந்தது. தீ்டீரென என் வாழ்க்கை திசை திருப்பப்பட்டது.எனது அப்பா ஈழத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஏன்?...
மேலும் படிக்க
www.eelam.mywebdunia.com

Sunday, September 14, 2008

தமிழர் மீதான பண்பாட்டு போர் (cultural war)

வணக்கம் தோழர்களே

இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தமிழர்களும் உலகவாழ் தமிழர்களும் தங்கள் துணைவற விழாக்களில் ஆரியப் பார்ப்பானை வைத்து ஆரிய வழியில் துணைவற விழாவினை நடத்துகின்றனர்.

ஆரியப்பார்ப்பானை வைத்து துணைவற விழாவினை நடத்துவது தங்கள் குடும்ப கவுரமாக கருதுகின்றனர் இக்கால படித்த முட்டாள்கள். சென்னையில் நான் கண்ட பல விழாக்களில் நடுத்தரவர்க்க மக்களும் ஆரியப்பார்ப்பானை வைத்துதான் அதிகப்படியாக நடத்துகின்றனர். ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களைவிட இருபடி மேலே சென்று பார்ப்பான் இல்லாமல் துணைவற விழா இல்லை என்ற மூடத்தனமான எண்ணத்தில் இருக்கின்றனர்.

பார்ப்பான் வைத்து நடைபெறும் விழாக்களில் அவன் சொல்லும் நமக்கு புரியாத மொழி வார்த்தைகளை கேட்டுக்கொண்டு நாம் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம். அதன் தமிழாக்கத்தை அப்பார்ப்பானால் சொல்ல இயலாது. மீறி அவன் அதன் தமிழாக்கத்தினை சொன்னால் அங்கேயே அவன் உயிர் அவன் உடலை விட்டு நீக்கப்படும் சூடு சுரணையுள்ள தமிழர்களால்.

பார்ப்பானிம் துணைவற விழாவில் சொல்லப்படும் வேற்றுமொழி வார்த்தைகளில் பார்ப்பான் சொல்ல கேட்டு மணமகன் மணமகளிடம் சொல்லும் ஒரு கேவலமான வார்த்தைகள்...

ஸோமஹ: ப்ரதமோ
விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ;
த்ருதீயோ அக்னிஷ்டே
பதிஸதுரீயஸ்தே
மநுஷ்யஜாஹ..


இதன் தமிழாக்கம்:

தேவனாகிய சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்:

கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான் ;

அக்னிதேவன் உன்னை மூன்றவதாக அடைந்தான்;

மனித வகுப்பைச்சார்ந்த நான் உனக்கு நான்காவது நாயகன்

தமிழர்களே இப்படிப்பட்ட ஒரு கேவலமான வார்த்தைகளால் உங்கள் வருங்கால துணைவியை சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா...?

ஈழத்துத்தமிழர்களே தமிழர்களுக்கு எதிரான போர் வகைகள் பல்வகை உண்டு
அவற்றில் ஒன்று பண்பாட்டு போர். ஆய்தப்போர் மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகாது உங்களை அறியாமலே நீங்கள் பண்பாட்டுச்சீரழிவில் அடிமைப்பட்டுள்ளீர்கள். தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க ஆரியப்பார்ப்பனர்களுக்கு எதிரான பண்பாட்டுப்போரையும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து விழாக்களையும் சுயமைரியாதையுடன் தமிழர்பண்பாட்டு முறையில் நடத்துவோம்.

ஆரிய விழாக்கள் அனைத்தும் தமிழர்களின் கருப்பு நாள். புறக்கணிப்போம் ஆரியர்களின் கேவலமான விழாக்களை.

தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம். ஆரியப்பார்ப்பன பண்பாட்டுப்போரை அழித்தொழிப்போம்.

Thursday, September 11, 2008

விரைவில் பழைய விடுதலை இதழ்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-டம்லர் டலைவர்


தோழர்களே இந்த தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் பழைய பச்சை அட்டை குடியரசை விடுதலையில் விளம்பரபடுத்தி அனைத்தையும்தான் எப்பொழுதோ வாங்கிவிட்டார் டம்லர் டலைவர்.
பார்ப்பன நடிகையின் ஆட்சியில் உண்மைக்குப்புறம்பாகவும் பெரியாரியத்துக்கு எதிராகவும் அவர் எழுதிய இரட்டை நாவுடன் பேசிய செயல்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பழைய விடுதலையில் உள்ளன.

"சமூக நீதி காத்த வீராங்கனை"
"பெரியாரை பெண் உருவில் காண்கிறேன்" - டம்ளர் டலைவர் ( பார்ப்பன நடிகையின் ஆட்சியில் பார்ப்பன நடிகையை புகழ்ந்தார்)

தி.க. கொடியினை வடிவமைத்தது கலைஞர் அல்ல ஈரோடை சேர்ந்த ஒருவர்தான் வடிவமைத்தார்- டம்ளர் டலைவர் (பார்ப்பன நடிகையின் ஆட்சியில்)

இதைப்போன்று டம்லர் டலைவரின் பல புரட்டல்களை பார்ப்பன நடிகையின் ஆட்சியில் வந்த விடுதலை நாளிதழில் காணலாம்.

திராவிடர்கழக கொடியினை வடிவமைத்தது கலைஞர்தான் - டம்ளர் டலைவர் ( உலகப்பெரியார் என்ற நூலில்) (கலைஞர் ஆட்சியில்)

கலைஞரை ஆதரிப்பது மிகப்பெரிய குற்றம் என்றால் அதை நான் திரும்ப திரும்ப செய்வேன் - டம்லர் டலைவர் ( கலைஞர் ஆட்சியில்)

ஆனால் கலைஞரை இரவில் பார்ப்பன ஆட்சியில் கைது செய்தபொழுது படு கேவலமாக பேட்டி கொடுத்தார் இதழ்களுக்கு 2001 ஆம் ஆண்டில் ( நந்தன் இதழில் விரிவாக காணலாம் )

கலைஞரை கைது செய்தபொழுது தமிழக மக்களின் நெஞ்சம் கொதித்தபொழுது மனதில் ஈரமில்லா அறிக்கைகள் டம்லர் டலைவரிடமிருந்து.

இந்த இரட்டை நாக்கு கருப்புச்சட்டை அணிந்த பார்ப்பானின் புரட்டல்களை உலகத்தமிழர்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக www.viduthalai.com என்ற இணையதளத்தில் இருந்த பழைய விடுதலை இதழ்கள் நீக்கப்பட்டுவிட்டன.

யாருக்கேனும் விடுதலை இதழ்கள் தேவைப்பட்டால் தேவைப்படுபவர் டம்லர் டலிவரை புகழ வேண்டும் வேண்டுபவர் டம்லர் டலைவரின் அடிமையாக இருக்க வேண்டும் அதிகப்படியான கையூட்டுகளை கொடுக்க வேண்டும்.

இவற்றை செய்யாத பொது மக்களுக்கும் மற்ற உண்மையான பெரியாரிய அமைப்புகளுக்கும் விடுதலை இதழ்கள் தரப்படமாட்டாது.

இந்த உண்மைகளை டம்லர் டலிவரால் வெளிப்படையாக கூற இயலாது என்பதால்தான்

இந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான மேற்கண்ட அறிக்கை.

தி.க.வின் இணையதளங்களை(www.periyar.org.in , www.viduthalai.com,...) mobilevedha என்ற நிறுவன்ம்தான் நிர்வகித்து வருகிறது. உண்மைகளை அறிய அந்த நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம்.

Contact Us
Mobile Veda Solutions,
Technology Business Incubator,
VIT University Campus,
Vellore - 632014.
Email Id: info@mobileveda.com

Personal Contact
K.R. Ganesh Ram,
Mobile Veda Solutions,
Mobile: +91 93622 11117.
Email Id: ganesh@mobileveda.com

இனி பழைய விடுதலை இதழ்களை நாம் படிக்க தளத்தில் வைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

பழைய இதழ்களை இணையத்தில் வெளியிட்டு(வெளியிடுவார்களா?!) எனது இந்த கட்டுரையை பொய்யாக்கினால் எனக்கும் உலகத்தமிழர்களுக்கும் மகிழ்ச்சிதான் என்பதை இறுதியாகக்கூறிக்கொள்கிறேன்.

Saturday, September 6, 2008

கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழனின் ஒரு மனம் திறந்த மடல்

தமிழகத்தமிழரின் கடைசி கையிருப்பாகிய கலைஞர் அய்யா அவர்களே..

பார்ப்பன நடிகையின் ஆட்சியில் நடிகையுடன் திரிந்த ஒரு துணை அரசியல்வாதியும் பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனக்குத்தானே தமிழர்தலைவர் என்று பெயர் சூட்டிக்கொண்டு தமிழின எதிரி பார்ப்பன நடிகைக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டத்தை அளித்து தந்தை பெரியாரை பெண் உருவில் காண்கிறேன் என்று பார்ப்பனத்தியின் காலில் கிடந்த ஒரு இரட்டை நாக்கு தமிழின துரோகியிடம் இருந்து அந்த துரோகியின் பெயரிலான பட்டத்தினை விருதினை தாங்கள் வாங்குவது தமிழர்களாகிய எங்களின் கண்களில் அரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.

பார்ப்பன ஆட்சியில் உங்கள் படுக்கையறையில் புகுந்து உங்களை கைது செய்தபொழுது....

"கலைஞருக்கு 24 அகவை தயாளு அம்மையாருக்கு 18 அகவை...." என்று உங்களை கிண்டல் செய்ததை நீங்கள் மறந்துவிட்டீரா?...

தமிழர் வரலாற்றில் தமிழின துரோகியாக பதிவு செய்த பல புதிர்களை தனது புன்சிரிப்பின் பின்னால் வைத்திருக்கும் ஒரு வியாபாரியிடமிருந்து நீங்கள் விருது வாங்குவது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்கள் அனைவருக்கும் இழுக்குதான்.

தமிழரின் கடைசி கையிருப்பாகிய உங்களிடம் கடைக்கோடித்தமிழனின் அன்பு வேண்டுகோள் இது.

பெரியாரிய துரோகிகளையும் தோற்கடிப்போம் பெரியாரியம் வெல்வோம்

Tuesday, September 2, 2008

விரைவில் கருப்புச்சட்டை அணிய தடை

பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் இருட்டில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்த கருப்புச்சட்டை அணிவதை தந்தை பெரியார் அவர்கள் அறிமுகம் செய்தார். பெரியாரின் புத்தகங்களும் , பேச்சுகளும், ஒலிநாடாக்களும் ஏற்கனவே தனியார் ஒருவருக்கு உடைமையானது என்று ஒருவர் உரிமை கொண்டாடி நெறியாளுகை மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

விரைவில் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட கருப்புச்சட்டை அணிவதும் இனிமேல் தனியாருக்கு உடைமையானது மற்றவர்கள் அணிய வேண்டுமென்றால் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று அறிக்கை வந்தாலும் அதிர்ச்சியடைவதற்கில்லை.
(ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் கருப்புச்சட்டை அணிந்துவிட்டதால் தடை செய்ய இயலாது.)