Monday, November 24, 2008

இலவச விளம்பர இணையதளம்

வலையில் உலாவும் பொழுது ஒரு விளம்பர தளத்தினை காண நேர்ந்தது. அது தமிழரால் நடத்தப்படும் தமிழர்களுக்கான இலவச விளம்பர தளம். இத்தளத்தில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பினையும் இலவசமாக கொடுத்துள்ளனர். மற்றும் பொழுதுபோக்குக்கு அரட்டை , விவாதத்துக்கு விவாதக்களம் , பொது அறிவு களஞ்சியம் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

பல தளங்களில் தொலைக்காட்சியினை இணையத்தில் காண கட்டணம் உண்டு. ஆனால் இத்தளத்தில் கட்டணமின்றி பல வகை பயனுள்ள தகவல்களை நமக்கு அளிக்கின்றனர்.

அத்தளத்தின் பெயர் www.addboxsl.com

இத்தளமானது நாம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று நான் எண்ணுகிறேன். நீங்களும் பார்த்துவிட்டு கருத்தினை சொல்லுங்கள்.

Saturday, November 8, 2008

ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தீக்கதிர்-துக்ளக்-தினமலர்-தி இந்து

தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் சாக்கடை எதுவென்றும் அதில் ஊறிய மட்டை எதுவென்றும்.

மேற்கண்ட மூன்று இதழ்களும் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமானவை என்று உங்களுக்குத்தெரிந்திருக்கும். மேற்கண்ட கழிசடைகளில் ஒரு நாளும் தமிழ் , தமிழர் , தமிழக நலன் பற்றிய செய்திகள் வந்தது இல்லை. தமிழகம்தான் வந்தேறிகளின் வேட்டைக்காடாகிற்றே. இப்பார்ப்பன பத்திரிக்கைகளில் உண்மைக்குப்புறம்பான தமிழர் நலனுக்கு எதிரானசெய்திகள் மட்டுமே வரும்.

பார்ப்பான் அனைத்து முகமூடிகளையும் அணிவான். எம்முகமூடி அணிந்தாலும் அவனது பார்ப்பனிய தமிழர் விரோத தன்மை மாறாது என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே சொன்னதை உண்மை என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

ஓட்டுப்பொறுக்கிகள் சாக்கடையில் இறங்காமல் தன்னலம் கருதாமல் தங்களால் முடிந்த மக்கள் நல செயல்களை பல பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் பொது நலத்தோடு செயல்படும் பெரியார் திராவிடர்கழகத்தினர் காட்டுமிராண்டிகளாம் சமூக விரோதிகளாம்.. இதை யார் கூறுகிறார் என்று பாருங்கள் உண்மை என்னவென்று தெரியும் :


இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம் சென்னை, அக். 19 -

இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.


துக்ளக் சோ :

கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?

ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.


கூறிவிட்டார்கள் சமூகத்துக்காக உழைப்பவர்கள்(!?)

தமிழ்நாட்டுக்கு கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டுமென்று தமிழக அமைச்சர்கள் முயற்சித்த பொழுது,
வேண்டாம் வேண்டாம் தமிழ்நாட்டுக்கு
கடல்சார் பலகலைக்கழகம்
வேண்டாம் வேண்டாம்

இதைக் கூறியவர்கள் வேறு மாநிலத்தவர்கள் யாருமில்லை மதுரையைச் சேர்ந்த மக்களுக்காக பாடுபடும்(!?)
CPI(M) கட்சியின் MP.
மேலும் தகவலுக்கு என் முந்திய பதிவைக்காணவும்...

தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு

சோவை பற்றிக்கூறத்தேவையில்லை. உங்களுக்குத்தெரியும்........



Saturday, November 1, 2008

நடிகர் சரத் தின் ஈழத்தமிழர் ஆதரவு உரை

இன்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட ஒளிக்காட்சியை கூகிளில் தேடிய பொழுது கிடைத்த வீடியோக்கள் :

காண சொடுக்கவும்

நடிகர் சரத் குமார் உரை