Sunday, October 26, 2008

தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு

நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அரசியல்வாதி என்பவன் குண்டர் படை வைத்துக்கொண்டோ அல்லது ஒரு நபரின் பிச்சைக்காசுக்காக தன்னை ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களை கண்டுகொள்ளாமல் அந்த ஒரு சில முதலாளித்துவ நபருக்கு நாயாக கிடப்பார்கள் என்று பல படங்களில் வரும்.

தன்னை நம்பி ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்த மக்களுக்கு எதிராக செயல்படும் சுயநலவாதிகள் இங்கு மார்க்சிச போர்வையில் பதுங்கி உள்ளனர் என்பது அவ்வப்பொழுது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதுரையிலே மதுரை மக்கள் தங்களுக்கு இவர் நன்மை செய்வார் என்று நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மார்க்சிய வேடத்தில் இருக்கும் ஒரு தமிழின விரோதி தமிழ்நாட்டில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக செயல்பட்டுள்ளான்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள் நாங்கள் என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்கள் அந்த கட்சியினர்.
எந்த ஒரு நாட்டிலோ இப்படிப்பட்ட ஒரு தேசபக்தனை பார்க்க இயலுமா?

இவர்கள் பேசும் தேசியம் இதுதானா?

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருக்கும் ஒரு நபரே இப்படியென்றால் அவர் தலைமைகள் எப்படி இருக்கும் என்று சொல்லவே கூசுகிறது.

பெட் ரோல் விலையை எதிர்த்து போராட்டம் அந்த விலைவாசி உயர்வைக்கண்டித்து போராட்டம் ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் என்று அப்பாவி உழைக்கும் மக்களே ஏமாற்றும் மார்க்சிசுடுகளே...

உங்களுக்கு சிறு கேள்விகள் அல்லது எனது வேண்டுகோள்:

தேர்தலின் பொழுது நீங்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில்தானே
இருந்தீர்கள்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கும் பொழுது உங்கள் கட்சிக்கு எந்த துறை வேண்டும் என்று கேட்டு வாங்கவேண்டியதுதானே?

பெட் ரோல் விலையேற்றம் போராட்டம் சொல்லும் மார்க்சிசுடுகளே அந்த துறையினை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்ரோல் விலையைக்குறைக்கபாருங்களேன்...?

....................ஏன் மவுனம்?

கலைஞர் அவர்கள் உங்களிடம் கேட்டார்தானே உங்களுக்கு எந்த துறை வேண்டுமென்று அப்பொழுதே எனக்கு இந்த துறை தாருங்கள் நாங்கள் சிறப்பாக செய்கிறோ என்று சொல்லலாமல்லவா?

எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லமாட்டீர்கள். பார்ப்பனர்கள் அலுங்காமல் குலுங்காமல் மக்களை ஏமாற்றுபவன் தமிழினத்தை ஒழிக்க வேண்டுமென்பது உங்கள் கொள்கை எனபது எங்களுக்கு தெரியும்.

நீங்கள் தமிழ்தாய்தந்தைக்கு பிறக்கவில்லை என்பது.

அதனால்தான் நீங்கள் தொடர்ந்து தமிழின விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் என்பது. தமிழருக்கு பிறந்தவன் தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கமாட்டான்.

உங்களுக்கு மேற்கு வங்காளம் வளர்ந்தால் போதும். அதனால்தான் கடல்சார் பல்கலைக்கழகத்தை மேற்கு வங்காளத்தில் அமைக்க கூறுகிறீர்கள். பின்பு எதுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். உங்கள் மூட்டைமுடிச்சுகளை கட்டிக்கொண்டு நிம்மதியாக மே.வ. போய்ச்சேருங்கள்.

நீங்கள் தமிழ்நாட்டில் செய்வதை கருநாடகத்தில் செய்திருந்தால் என்ன நடந்திருக்குமென்று எண்ணிப்பாருங்கள்....

என்ன உடம்பில் உதறல் எடுக்கிறதா....?

இங்குள்ள தமிழ்நாய்களுக்கு சூடும் இல்லை சுரணையும் இல்லை. உங்களை சொல்லி எந்த தவறும் இல்லை. எல்லாம் சூடு சுரணையற்ற எச்சில் துண்டுகளுக்கு அலையும் இந்த தமிழ்நாய்களை சொல்லவேண்டும்.

திரையிலே இயக்குநர்களிடம் சாவி இயக்கத்துக்கு செயல்படும் பொம்மைகளை தல , தலைவன், வாழும் கடவுள் என்கிறான்.

தான் வாழ்வதற்கு தமிழனின் பணம் வேண்டும் ஆனால் தமிழன் வாழ நான் ஏன் வரவேண்டும் என்று கேட்கிறான் ஒரு மலையாள பார்ப்பான்.

தமிழ்நாட்டில் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தமிழ்நாட்டிற்கு பயன்படக்கூடாதென்று மற்ற இடங்களில் தொழில் நிறுவனங்கள் கட்டுகிறான். சரி அது உன் தாய்நாட்டுப்பற்று. ஆனால் உணட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது நியாயம்தானா?

சரி சரி அவர்கள் படத்தில்தான் நடிகர்கள் ஆனால் இங்குள்ள மார்க்சிசுகள் உண்மையான நடிகர்கள் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.

என் தமிழ் உறவுகளே என்றுதான் நீங்கள் தாய்நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று கொள்ளப்போகிறீர்கள்......?

அதற்குண்டான விடைதான் எனக்கு இன்னும் தெரியவில்லை...........

அவ்விடைக்காக காத்திருக்கும் ஒரு கடைக்கோடி நெய்தல் நில தமிழன்................................................



என்றுதான் தலைநிமிர்வானோ இந்த தமிழன்......?

நன்றி :

ஆதாரம் : www.thatstamil.com

மே.வங்கத்துக்கு கொடி பிடித்த தமிழக எம்பி!

No comments: