இன்று திருச்சியில் நடைபெறும் காங்கிரஸ் (கோஷ்டி மோதல்) கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் வரவுள்ளதால்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தமிழர் ஆதரவு அமைப்புகளின் முக்கிய நபர்களும் எதிர்க்கட்சியின் முக்கிய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் அமைப்பு ரீதியாக பார்த்தால் ம.க.இ.க. CPIML SOC யின் தொண்டர்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கது. அடுத்தப்படியாக பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் நாம் தமிழர் அரசியல் கட்சியினர்.
இவ் அமைப்புகளின் திருச்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளன.
அறிக்கைகளில் அமைப்பு நடத்திவரும் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையை படிக்க நேர்ந்தது. அறிக்கையினை படிப்பவர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியவரும்
இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் வெளியிட்ட அறிக்கை என்று ஆனால் வெளியிட்டது பழ.நெடுமாறன் அய்யா அவர்கள்.
இதைப்படித்தப்பொழுது எனக்கு தோன்றியது பழ.நெடுமாறன் அவர்கள் "இந்து மக்கள் கட்சி"யில் இணைந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ் அறிக்கையினை கீழே கொடுத்துள்ளேன். எனது சந்தேகத்தினை இந்து மக்கள் கட்சியினரோ பழ.நெடுமாறன் விசுவாசிகளோ தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
பழ.நெடுமாறனை ஈழத்தமிழர்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று நெடுமாறன் விசுவாசிகள் கூறிவருகின்றனர்.
தமிழகத்தில் தமிழீழ ஆதரவு போராட்டம் நடத்தாமல் மு.கருணாநிதி எதிர்ப்பு போராட்டம் நடத்திய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைவாதியான பழ.நெடுமாறனின் செயலாடுகள் அனைவரும் அறிந்ததே.
திருச்சியில் திக வினர் வைத்த பெரியார் சிலையினை உடைத்தவர்கள் அர்ஜீன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர். உடைத்தமைக்கு எதிர்வினை ஆற்றியவர்கள் மக இக வினரும், பெரியார் திகவினரும்....
நெடுமாறன் அய்யா மற்றவர்களை புறக்கணித்து ஒரு மதவாத அமைப்பினை தூக்கிப்பிடிப்பது தனது சாதிப்பற்றினாலா மதவாதப்பற்றினாலா????
தமிழர் என்று கூறிக்க்கொண்டு உள்ளுக்குள் சாதி மதத்தினை வைத்திருந்தாரா?
இப்பொழுது அது வெளிவந்துவிட்டதா....? தான் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை நிரூபித்துவிட்டாரா...?
பழ,.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:
From Thenseide
to
date Sat, Oct 9, 2010 at 5:44 PM
subject சோனியா வருகை - கைது - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை
சோனியா வருகை!
நூற்றுக்கணக்கானவர்கள் கைது
பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி திருச்சி வருவதையொட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட தமிழ்நாடெங்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைதுசெய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி வற்புறுத்துகிறேன்.
1 comment:
achchariyamaana visayam. pakirvukku nanri.
Post a Comment