தமிழ்நாட்டிலே தமிழ் தமிழ் தமிழ் என்று வாய் நிறைய மேடையேறி சொல்லுபவர்கள் இதுவரை நடைமுறையில் எதுவும் செய்தது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
வெட்டி தம்பட்டம் அடிப்பதால் யாருக்கும் எவ்வித பயனும். அப்படி வெட்டி தம்பட்டம் அடிப்பவர்கள் தங்கள் சுய புராணத்தின் பொழுது வரலாற்றையே மாற்றிவிடுகிறார்கள்.
அப்படி வரலாறு தெரியாமல் தம்பட்டம் அடித்த ஒரு தமிழ் கம்பெனியாரின் சுயபுராணத்தினை கேட்க நேர்ந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் வழகுரைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழ ஆதரவு மாநாட்டின் குறுந்தகடு கிடைத்தது. அந்நிகழ்வில் 3 ஆம் முறையாக சிறை சென்ற இயக்குநரும் , பொடா வில் உள்ளே சென்றவன் நான் என்று மேடை தோறும் கொக்கரிக்கும் நியூகோட்டையூராரும் கலந்துகொண்டார்.
அந்த கோட்டையாரின் பேச்சை நாம் இதுவரை கேட்டதில்லை என்பதால். ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம் என்று போட்டுப்பார்த்தால். அந்நபர் பேசிய 1 மணி நேரத்தில் 55 நிமிடங்கள் சுயபுராணம் மட்டுமே இருந்தது.
அதில் சில " என்னை அந்த ஊரிலுள்ள பள்ளியில் அழைத்திருந்தார்கள் அங்கே பேசும் பொழுது திப்புச்ல்தானின் பெயர் புலி என்றேன் , மற்றொரு இடத்தில் பேசும்பொழுது சிறந்த விலங்கு புலி என்றேன் , மற்றொரு இடத்தில் மூவேந்தர்களின் கொடிகளில் ஒன்று புலிக்கொடி என்றேன் ,...... இப்படியே பழைய சுயபுராணம்தான் வந்தது நடுவில் ஒன்று சொன்னதைக்கேட்டு அந்நிகழ்வில் இருந்த இசுலாமிய பொதுமக்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எதற்கு சிரித்தார்கள் என்று சுயபுராணம் தலைக்கேறிய அவருக்கு புரியவில்லை.
அவர் சொல்லியது ... ' லிபியா நாட்டு போராளிகளின் தலைவரை பாலைவனப்புலி என்பார்கள் ' என்றார். இதைக்கேட்ட நமக்கும் சிரிப்புதான் வந்தது. பாலைவனத்து சிங்கம் உமார் முக்தாரை பாலைவனப்புலி என்று மாற்றிவிட்டார் தனது சுயபுராணத்திற்காக.
"LION of THE DESERT " எப்பொழுது " TIGER OF THE DESERT" ஆக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. பொடாவில் சென்று வந்தவன் என்று கூறிக்கொள்ளும் அந்நபருக்கு இச்சிறுதகவல் கூட தெரியவில்லையா அல்லது தெரிந்தே கூடி இருக்கும் மக்களிடம் தன் சுயபுராணத்திற்காக வரலாற்றினை மாற்றினாரா என்று தெரியவில்லை.
ஆனால் என்ன ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது , தமிழ் கம்பெனிகளுக்கு இதுதான் வியாபாரம் என்று.
கோட்டையூரை சேர்ந்தவர் கடைசி வரை சுயபுராணம் பாடியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமே அளித்திருக்கும்.
No comments:
Post a Comment