இவ்வுலகம் சொல்லக்கூடிய அழகற்றவர்கள் என்று ஒதுக்கக்கூடிய மக்கள் அறிவில் சிறந்தவர்களாகவும் படைப்பாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் இருப்பார்கள் என்பதை மெய்ப்பித்தவர்களில் ஒருவர்தான் ஆன்டர்சென். இவர் கி.பி. 1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள ஒதென்சி எனும் சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தையார் செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆன்டர்சென் அருவருக்கத்தக்க தோற்றமுள்ளவர் என்று அவரை உலகம் ஒதுக்கியது. ஆன் டர்செனின் 11-ஆம் அகவையில் அவரது தந்தையார் இறந்து போனார். மகனைக்காப்பற்றவும் பசியைப் போக்கவும் இவருடைய தாய் துணி துவைக்கும் தொழிலை மேற்கொண்டார்.
ஆன்டர்சென் வறுமையில் வாடினாலும் அறிவு வளர்ச்சியில் குன்றிவிடாமல் இருக்க பலரிடம் பல புத்தகங்களைக் கடன் வாங்கிப் படித்தார்.பள்ளியில் சேர்ந்து படிக்கும் பலரும் அவரது தோற்றத்தைப் பகடி செய்தனர். அதனைக் கண்டுகொள்ளாமல் எழுத்துப்பணியில் ஆர்வம் கொண்டார். தனிமையில் இருக்கும் நேரத்தில் தனது சிறிய அறை வீட்டையே நாடக அரங்கமாக்கி நடிப்புக் கலையைக் கற்றார். கதைகளை எழுதிப்பார்த்தார். இவருடைய ஆர்வத்தையும், செயல்பாட்டையும் கண்டு நான்காம் பிரெட்ரிக் இலக்கணம் படிக்க அனுப்பி வைத்தார். இளம் அகவையிலேயே முதல் இலக்கியப்படைப்பாக "THE GHOAST AT PALNATOKES GRAVE" என்ற நூலை வெளியிட்டார். இதனால் பல இடையூறுகளுக்கு ஆளானார். நாடகங்களை எழுத முயற்சி எடுத்த நேரங்களில் தோல்வியே தொடர்ந்தது. இருப்பினும் துவண்டுவிடாமல் தொடர்ந்து எழுதினார். அதில் "முன் சிந்தனை அற்றவன்",
"தேவதைக் கதைகள்" போன்ற நூலகள் அவருக்குப் புகழையும், பாராட்டுக்களையும் தேடித்தந்தன. இறுதிக்காலக்கட்டத்தில் மிகப்பெரிய புகழ்பெற்ற நாடகக்கலைஞராகவும் திகழ்ந்தார்.
தோற்றத்தால் பகடி செய்யப்பட்டு எழுத்தால் புகழ்பெற்ற ஆன்டர்சென் ஆகத்து நான்காம் நாள் இறந்தார். இவரது இறுதிச் சொற்கள் "அருவருப்பான வடிவமுடையவனானாலும் இந்த அழகான உலகத்தில் இறக்கின்றேன்" என்பதுதான், ஒரு மாந்தரின் வாழ்வு புற அழகுத்தோற்றத்தைப் பொறுத்தது அல்ல; மாறாக ஈடுபாடான செயல்களைப் பொறுத்தது என்பதற்கு இவரது வாழ்வு ஒரு நற்சான்று.
2 comments:
முழுப்பெயர்: Hans Christian Andersen
பிறந்த நாள் :02.04.1805
இறந்த நாள் :04.08.1875
//"அருவருப்பான வடிவமுடையவனானாலும் இந்த அழகான உலகத்தில் இறக்கின்றேன்" என்பதுதான், ஒரு மாந்தரின் வாழ்வு புற அழகுத்தோற்றத்தைப் பொறுத்தது அல்ல; மாறாக ஈடுபாடான செயல்களைப் பொறுத்தது என்பதற்கு இவரது வாழ்வு ஒரு நற்சான்று.//
நல்ல பதிவு. அவரின் கடசி வர்த்தைகள் நெஞ்சை சுடச் செய்கின்றது.
நன்றிகள்
Post a Comment