Monday, February 9, 2009

தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் மகஇகவினர்

தமிழகத்திலுள்ள மக்களிடத்திலே கருத்துக்களை சொல்ல திராணியற்ற மகஇக வினர் முல்லைத்தீவுக்கு படகு பயணமாம். ஈழத்தமிழர் , தமிழீழம் என்று சொல்லக்கூட தைரியமற்ற தனது கட்சி பேரான CPI-ML(SOC) என்பதனை கூட மக்களிடம் சொல்ல துணிவில்லா ஒட்டுக்குழுவினர் முல்லைத்தீவுக்கு பயணம் என்ற ஒரு காமெடி காதில் கேட்டதும். அப்பகுதியிலுள்ள என் மீனவ உறவினர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கடற்கரையிலிருந்து படகில் ஏறும்பொழுது அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் " சுய நிர்ணயம் வழங்கு " " இலங்கைத் தமிழர்களை கொல்லாதே " " சிங்கள இராசபக்சேவை கண்டிக்கிறோம் " இப்படி வாசகங்கள் இருந்ததாம். ஒரு இடத்தில் கூட ஈழம் என்றோ ஈழத்தமிழர்கள் என்றோ இல்லலயாம் .

அவர்களின் உரையினை கேட்ட மீனவர் ஒருவர் கூறிய வார்த்தை " இவன் யாரப்பா அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுக்க சொல்ல , ஒன்று பட்ட இலங்கையில் சுய நிர்ணய உரிமை கொண்ட ஒரு தமிழ் மாநிலம் எப்படி ? பசிக்கிறவனுக்கு எது வேணுமோ அதை அவன் தின்பான் , ஈழத்துல பசிக்கிற மக்களுக்கு எது திங்கனும்னு அவனுகளுக்கு தெரியும் இவனுக யாரப்பா இப்படி குழப்புறது , ஈழமக்கள் அவங்க விடுதலைக்கு தீர்வு தமிழீழம் , இந்த வக்கீல்மாரு என்ன சொல்ல வராருனு புரியலைங்களே " என்று கூறியதாக நமக்கு தகவல் வந்தது.

கடற்கரையிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் இருந்து கொண்டு செல்பேசியில் பேட்டி கொடுத்தார்களாம் "இன்னும் 2 மணி நேரத்தில் முல்லைத்தீவுக்கு சென்றுவிடுவோம் " என்று. ( BSNL , AIRCEL , AIRTEL , HUTCH TOWER லாம் முல்லைத்தீவுக்கு 2 மணி நேர தொலைவில் எப்ப போட்டாங்கனு மக இக கிட்டதான் கேட்கனும்) மீனவர்கள் மற்றும் கடல்சார்ந்த எம் மக்கள் வயிறு வலிக்க சிரிக்காத குறைதான். ஈழத்திலே வடகிழக்கில் இருப்பது முல்லைத்தீவு இவர்கள் படகில் இருந்ததோ தூத்துக்குடி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் இதுவோ தென்கிழக்கில். இலங்கைத்தீவினை சுற்றி செல்ல வேண்டும் முல்லைத்தீவுக்கு.

மக இகவினர் சரியாக காமெடி விடுறாங்க. நடிகர் வடிவேல் இனி மேல் மக இகவினர் கிட்ட காமெடி கற்றுக்கொள்ளலாம். படகில் இருக்கும் டீசல் டாங்க் அளவோ குறைவானது. மேலும் சர்வதேச கடல் எல்லைக்கே அப்படகு செல்லவில்லை. மகவினரே முதலில் ஈழத்திற்கான உங்கள் தீர்வு என்னவென்று சொல்லுங்கள். மேலும் இந்த போராட்டத்தினை அறிவித்தது தி.மு.கவினை சேர்ந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு என்பவர்தான்.

என்னமோ போங்க CPIMIL-SOC ( மக இக , ம.உ.பா) காமெடி தாங்க முடியலை. சிங்கள கைக்கூலி இராயகரன் என்னங்க சொன்னாரு இந்த பிரச்சினைக்கு ......?

4 comments:

குமரன் said...

//"தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் ம.க.இ.கவினர்"//

கடற்பயணச் செய்திகள் ஒருபுறம் இருக்கட்டும்.

போராட்டங்களை ஒடுக்க முயலும் - என்பதற்கு என்ன அர்த்தம்? புரியவில்லையே!

புரட்சிக்கவி said...

நண்பரே !

மக இக என்றும் விடுதலைப்புலிகளை எதிர்த்தது இல்லை !, விமர்சித்து இருக்கிறார்கள் - தனிமனித கொலைகள், சகோதர கொலைகள், தனிமனித வழிபாடு, இராணுவ சாகச வாதம் இவைகளைதான் விமர்சிக்கிறார்களே தவிர, புலிகளை என்றும் எதிர்த்து இல்லை. சுயநிர்ணய உரிமை என்பதற்கு, இந்திய போலி கம்பியினிஸ்டுகளின் வரையறையில் பார்க்காதீர்கள். பிரிந்து போகும் உரிமையை - லெனின் பார்வையில், சுயநிர்ணய உரிமை எனச் சொல்கிறார்கள்.

- அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

ஆழிக்கரைமுத்து said...

நொந்தகுமாரன் நண்பரே தமிழ் மக்களது போராட்டங்களை ஒரு தவறான வழிக்கு திருப்பி எழுச்சியை கெடுப்பதுதானே இப்படிப்பட்ட போராட்டம். ஏற்கெனவே பழ.நெடுமாறன் செய்ததன் பலன் என்னவென்று தெரியாதா?

நீங்கள் கேட்ட கேள்வியில் மக இகவினரின் படகு பயணம் என்பது நான் சொல்லியவை உண்மைகள்தான் என்று நீங்கள் soc யினர் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. நன்றி பி.ராயகரன் குழுவினரே.

ஆழிக்கரைமுத்து said...

அறிவு அய்யா அவர்களே

விமர்சனம் என்பது என்ன எதிர்ப்பது என்பது என்ன என்று விளங்கவில்லை. கையாலகாததனத்தின் வெளிப்பாடுதான் இவை. செயலலிதா கருணாநிதி பற்றி சொல்வது விமர்சனமா அல்லது எதிப்பதா?

கருணாநிதியும் , செயலலிதாவும் இப்பொழுது சொல்வதைத்தான் நீங்கள் நெடுங்காலமாக சொல்லிவருகிறீர்கள். கடற்கொள்ளைக்காரர்கள் , அமெரிக்காவின் கைக்கூலிகள் , பாசிசுடுகள் சிறுவர்களை படையில் வைத்துள்ளார்கள் என்று ஆதாரமில்லாமல் சிந்திக்காமல் கூறுவது விமர்சனமா எதிர்ப்பதா?

சரி சரி அங்கே உங்களைப்போல ஒரு அய்யங்கார் தலைமையேற்று போராடினால் நீங்கள் ஆதரிப்பீர்கள்.

எனக்கு புரியவில்லை. அங்குள்ள தமிழர்களால் செய்த தவறுக்கு தண்டிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு பிரான்ஸ் லிருக்கும் இராயகரன் அங்குள்ள உயர்சாதி வேளாளர் என்பதால்தானோ நீங்கள் தூக்கிப்பிடிக்கிறீர்கள்.

உடம்பிலுள்ள பூணூலை மறைக்க சட்டை , மனதிலுள்ள பூணுலான CPI(ML) SOC யினை மறைக்க மக இக.....

சரி சரி உங்களைக்கூறி தவறில்லை. எல்லாம் பாழாய் போன எம் தமிழ்மக்களின் தவறு. என்று எழுவார்களோ எம்மக்கள் பார்ப்பனிய மாயையிலிருந்து வெளியே...... காத்திருக்கிறேன்