Saturday, March 7, 2009

மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்? -ஈரோட்டுக்கண்ணாடி



மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?

http://erottukannadi.blogspot.com/

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? மற்றும் சீமானை சிறையில் சந்தித்தேன் போன்ற பதிவுகளுக்கான தவிர்க்க முடியாத எதிர்வினை
//என்னுடைய ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள்.///

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? என்ற பதிவை 28/02 அன்று கடந்த சனிக்கிழமை பதிவு செய்து இருக்கீறீர்கள்.
05 /03/ வியாழனன்று,புதுவையில், நீங்கள் சந்தித்த புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பனிடம்....... கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டீருக்கலாமே?
* நீங்கள் சார்ந்திருக்கும் பெரியார் தி.க., ஞானியை தோழமை சக்தியாகவே கருதுவதேன்?
* உங்கள் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணியும், பொதுச் செயலாளர் விடுதலை .ராசேந்திரனும் ஏன் பார்ப்பன ஞானியை விமர்சிப்பதை தவிர்த்தார்கள்?
* கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ ஞானியைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை?
‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டைப் பற்றி அவரிடம் பேசினீர்களா?
* உங்களின் இந்தப் பதிவினைத் தொடர்ந்து, /////ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. /////////
///////பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்/////////
இதனைச் சொல்வது, மருதையன் அய்யங்காரின் தலைமையேற்று, தமிழ்நாட்டில் புர்ச்சி செய்யும் soc ம.க.இ.கவினர். பல பின்னூட்டங்கள், ம.க.இ.க வின் பெரியார்.தி.க மீதான அவதூறு குறித்து தங்களின் கருத்தென்ன? என்று வினவின.
ஆனால், நீங்களோ பார்ப்பனத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ம.க.இ.க வின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு மவுன சாட்சியாகவே இருந்தீர்கள்.
ஒரு பக்கம் விடுதலைப்புலிகளை திவிரமாக ஆதரிக்கிற, புலிகளின் தலைவரை மேடைக்கு மேடை அண்ணன் என்றே அழைக்கின்ற சீமானை சிறையில் சந்திக்க செல்கிறீர்கள்!
மறுபக்கம், விடுதலைப்புலிகளை எதிர்க்கிற ம.க.இ.க மற்றும் ராயகரன் கும்பலோடும் தோழமை !!
பார்பபானஞானியை விமர்சனம் செய்யவில்லை என பெரியார் தி.க வைப் பார்த்து "கொளுகைக் கண்ணீர்" வடிக்கும் நீங்கள், பார்ப்பனீயத்தை தலைமைப்பீடமாக கொண்ட ம.க.இ.க வோடு தான் உங்களின் கொள்கைக் கூட்டணியா?
இது தான் உங்கள் பெரியாரியல் பார்வையா??

அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது?

சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது ! சொல்வது பெரியார் !
பெரியார் தி.க - ஞானியை விமர்சனம் செய்யவில்லை என்று விழுந்து பிராண்டுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும். மருதையன் அய்யங்காரின் தலைமையில் புரட்சி செய்யும் ம.க.இ.க பிராண்டுவது தான் கொடுமை.
.க.இ..க மண்டையுடைப்பு புரட்சியில் சூத்திரபசங்களுக்குத் தான் மண்டை உடைகிறது. அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது? சூத்திரர்களை ” வானரசேனை” ஆக்கி சூட்சமமாக மேலே உட்கார்ந்திருப்பது தான் பார்ப்பனீயம். அது தான் ராமாயணம். புத்தமதத்தை ஹீனயானம், மகாயானம் என செரிமானம் செய்தது பார்ப்பனீயம்.
மார்க்சீயத்தை பாரதப்புண்ணிய பூமியில் நேரடியாக சனாதானப்படுத்தியது மார்க்ஸிஸ்ட் குழுமம். மறைமுகமாக இதே வேலையை செய்கிறது ம.க.இ.க.
மருதையன் அய்யங்காரிடம் பார்ப்பனீய தாத்பாரியங்கள் அவரது பிறவியில் மட்டுமல்ல, ம.க.இ.க வின் அரசியலிலுமே தெரிகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான கருவியாக தான் இட ஒதுக்கீட்டை அடையாளம் காட்டினார் பெரியார்.பெரியாரை ஏற்றுக்கொள்ளும் மருதய்யங்கார் சேவாக் சங், பல்வேறு பல்டி அடித்தப் பின் தான், தற்போது இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதாக பம்மாத்து செய்கிறது.
மார்க்சீயத்திற்குள்ளும் ஊடுருவிய பார்ப்பனீயத்தின் ஒருமுகம் இது!
பார்ப்பனத்தி ஜெ கூட இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக உறுதி படுத்தியதாக அதிமுக காரன் முதல் அப்போதைய வீ.ரமணி வரை, அவரை போற்றிப் புகழ்ந்து வீராங்கனை பட்டம் தந்தார்கள்.
திராவிட இயக்கத்தின்(அதிமுக) தலைமையை கைப்பற்றிவிட்ட பார்ப்பனீயத்தின் மறுமுகம் இது!!
2 மொழிகள்,2 தேசிய இனங்கள்.....சேர்ந்தே வாழமுடியாது என்ற அளவிற்கு சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விடுத்து தமிழர்களுக்கு மானத்தோடும், கவுரவத்தோடும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. டக்ளஸ், கருணா போன்று எதிரியின் கால் நக்கிப் பிழைப்பதற்கு குண்டு வீச்சிலே செத்து தொலைக்கலாம் இத்தனைக்கு பிறகும் லெனினின் தேசிய இன உரிமையை படித்து தெளிந்த மேதாவிகள், புலிகள் இயக்கத்தை எதிர்ப்பார்களாம்! இலங்கை தமிழனுக்காக அழுவார்களாம் !! தமிழீழத்தை மறுப்பார்களாம் !!!
தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் ஆண்வடிவம்.
இதே போலத் தான் புலிகள் என்றாலே கிலி கொண்டு அலறும் ஜெ, கூட ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறார், நிதி வசூலிக்கிறார்.
தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் பெண்வடிவம்.

பார்ப்பனீயத்தின் வடிவங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது. அவற்றின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது.

வேட்டி/பேண்ட் அணிந்த ஜெயலலிதா தான் மருதய்ய அய்யங்கார்.சேலை அணிந்த மருதய்யன் தான் ஜெயலலிதாஜெயராம் அய்யங்கார்.
மருதய்யனின் பிறவியை பேசுவதாக ராயகரன் கூட கண்ணீர் வடிக்கிறார். உயர் சாதியில் பிறப்பவன்,சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராக போராடமுடியும் என்று சான்றிதழ் தருகிறார். SOC மருதய்யனுக்கும், ராயகரனுக்கும் என்னத் தொடர்பு?
....................
ஆனால், விபி சிங் கை இவர்கள் பிறவி ரீதியாகத் தான் பார்ப்பார் களாம். அவர் காங்கிரஸில் இருந்தாராம். 1925 முன், பெரியார் கூட காங்கிரஸில் தான் இருந்தார்.அதற்காக, செப்டம்பர் 17 அன்று தறி நெய்து "ரகுபதி ராகவ ராஜராம்" பாட சொல்வார்களா ? இந்த மார்க்சீய மண்டூகங்கள்.
இந்த கோளாறு, சூதுகளையெல்லாம் யோசித்தே, பெரியார், திராவிடர் கழகத்தில் எந்தப் புரட்சிப் பார்ப்பானைக் கூட உள்ளே சேர்ப்பதில்லை என அறிவித்தார்.
பெரியார் தி.க, ஞானியின் உழைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். ஞானிக்கு மட்டுமல்ல,எந்தப் பார்ப்பானுக்கும் பெரியார் தி.க பயன்பட்டது கிடையாது. ஒரு பார்ப்பானே, பெரியார் படம் எடுத்தால், அதை மக்களிடம் எடுத்துச் செல்வது சரியான பெரியாரியல் பிரச்சாரம். பார்ப்பானே, பார்ப்பானை செருப்பாலடிப்பதற்கு நிகரான வேலை. அந்த வேலையை பெரியார். தி.க செய்தது.
பார்ப்பானை ஞானகுருவாக ஏற்றுக்கொள்ளவிலை....ம.க.இ.க போல.

பார்ப்பனத்தலைமையை ஏற்றுக் கொண்டு, பெரியாரியல் பேசும் புரட்சியாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீள்ப்பார்வை செய்வது நலம்.

1 comment:

தமிழச்சி said...

வணக்கம் தோழர் ஆழிக்கரை

கலகம் செய்ய முடிவெடுத்து விட்டீர்கள் போலும். நல்லது தான். அதற்காக நம் தோழர்கள் மீதும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதும் சற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். இவை எந்த வகையில் நியாயம் என்பது எமக்கு விளங்கவில்லை. பெ.தி.க. தலைமையில் உங்களைப் பற்றி விசாரித்தேன். உங்களுடைய தீவிர ஆதரவுத்தளத்தில் இருந்து தோழர் இரயாகரன் நேர்எதிர்மாறான தளத்தில் இயங்குவதால் உங்களுடைய காழ்புணர்ச்சியை வெளிப்படுத்த வேறு கோணத்தில் முற்படுகிறீர்கள் என்று நினைக்கின்றேன்.

தோழர் மருதையனின் நேற்றைய செயல்பாடுகளையும், இன்றைய செயல்பாடுகளையும் கவனிக்கும் போது இதுவரையில் சரியான பாதையில் தான் ம.க.இ.க.
தோழர்களின் செயல்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுவும் சற்று அதிக வீரியத்துடன் செயல்படுகிறது. நாளை தோழர் மருதையன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒருவேளை தில்லுமுல்லுகள் அம்பலப்பட்டால் அங்கும் நானோ தோழர் மதிமாறன் அவர்களோ தோழர் இரயாகரன்
அவர்களோ ம.க.இ.க. தலைமையை விமர்சிக்க தயங்கமாட்டோம்.

நாம் இவை குறித்து விவாதிப்பது நல்லதென்று தோன்றுகின்றது. நீங்கள் தோழர் இரயாகரன் அவர்களை வேறொரு அமைப்புடன் இணைத்து பேசவும் தோழர் மருதையன் அவர்களை குறைத்து மதிப்பிவும் காரணமான செயல்பாடுகள் எவை என்பதை அறிய விரும்புகிறேன்.

தொடர்ந்து விவாதிப்போம்.


தோழமையுடன்
தமிழச்சி