Saturday, September 20, 2008

ஈழத்துப்பெண்ணின் வாழ்க்கை

பிறப்பு முதல் இறப்பு வரை குறுந்தொடர், மனித உரிமைகள் மறந்து கிடக்கும் இலங்கை தீவினிலே மனித உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஈழதேசத்தில் என்றும் அழகுடன் காட்சியளிக்கும் புளியங்குளம் கிராமத்தின் ஆற்று நீரின் சலசல ஓசையும் குருவிகளின் கீச்சிடலும் ஓயாது கானம் இசைக்கும் வன்ப்பகுதியினால் சூழப்பட்ட ஓர் ஓலைக்குடிசையில் பிறந்த ஈழத் தமிழ் பெண்......... தாயின் கருவறையின் சுகத்தினை உணராது உலகத்தின் சுதந்திரத்தை அனுபவிக்க 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளினால் வைத்தியசாலைக்கு போக வழியில்லாது தவிக்கும் என் தாயின் ஏக்கம் சிறிதேனும் புரியாது இவ்உலகைப் பார்ப்பதற்கு தாயை துன்பப்படுத்தி துடிதுடித்தேன்.துன்பம் தங்கமுடியாத தாயும் தை 26ம் திகதி என்னை பிரசவித்தாள். குண்டு மழைக்கும் குருதி வெள்ளத்திற்கும் மத்தியில் ஆண்டுகள் ஓடின வயது மூன்று ஆகியது.கல்வி எனும் கடலின் கரையை அடைவதற்கு என் வீட்டின் பக்கத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலே கல்வியை ஆரம்பித்தேன்.மழலை மாறாத எங்களின் திறமையை திறம்பட சிற்பமாக்க முனைந்த முதல் சிற்பி என் அன்பு ஆசான் இந்திராணி................................தொடரும் இதோ என் வாழ்கை தொடர்கிறது. இந்திராணி ஆசிரியரின் வழிகாட்டலுடன் எனது பாடசாலை கல்வியை முல்லைத்தீவு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பயில தொடங்கினேன்.எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய பாடசாலை. அத்துடன் இன்றைய எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அண்ணா படித்த பாடசாலையும் இது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எனக்கு கஜன் அண்ணாவைத்தான் தெரியும் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு காணவில்லை.எமது பாடசாலையில் கல்விகற்ற தேசப்பற்றுக்கொண்ட மாணவர்களில் நான் மட்டும் விதிவிலக்கில்லை.எனது கல்வி 5ம் ஆண்டு வரை அப் பாடசாலையில் தொடர்ந்தது. தீ்டீரென என் வாழ்க்கை திசை திருப்பப்பட்டது.எனது அப்பா ஈழத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஏன்?...
மேலும் படிக்க
www.eelam.mywebdunia.com

No comments: