Saturday, September 27, 2008

இராச்(RAJ) தொ.கா. செய்தி சேகரிக்கும் தன்மை

இன்று சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி கிடைத்ததும். தொ.கா. செய்திகளை பார்ப்பதற்காக SUN NEWS & RAJ NEWS போன்ற செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதில் SUN NEWS இல் செய்திகளை தெளிவாக தெரிவித்தனர்.

ஆனால் RAJ செய்தியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திராவிடர்கழகம் என்றும் அதன் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்தது : பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் : கொளத்தூர் தா.செ மணி.

இந்த உண்மைகள் ராச் செய்தியாளர்களுக்கு தெரியவில்லையா?

அல்லது

தோழர் கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் பெரியார் திராவிடர்கழகம்தான் உண்மையான திராவிடர்கழகம் சென்று சொல்லவருகின்றனரா?

எனக்குப்புரியவில்லை என்ன சொல்லுகின்றார்கள் என்று. உங்களுக்குத்தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் தி.க. வின் செயல்பாடுகளை தி.க செயல்பாடு என்று திரித்து இங்குள்ள வியாபார நோக்கிலான பல தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

No comments: