Saturday, September 20, 2008
இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!-தமிழச்சி
பாரீஸ்,
16.09.2008
27.07.2008 - அன்று ஈழத்தில் நடைப்பெற்ற ஜீலை படுகொலைகள் நினைவாகப் பிரான்சில் நடத்தப்பட்ட 'நெடுங்குருதி' நிகழ்வின் ஏற்பாட்டாளர் திரு. குகன் அவர்கள் நிகழ்வு நடைப்பெறுவதற்கு முன்தினம் பிரான்ஸ் நாட்டு போலீசாரால் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை அனுபவித்தவர். மேலும் இவர் மீது பிரான்ஸ் போலீசில் பல வழக்குகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் குற்றப்பிரிவில் இவர் பெயர் நிரந்தரமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுங்குருதி நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மார்க்ஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். திரு. குகன் கைதுக்கு பிறகும் திரு. சோபா சக்தி அவர்கள் பொறுப்பேற்று நிகழ்த்தினார். பெரும்பான்மை மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர்களில் சிலரும் நிகழ்ச்சியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்றார்.
08.09.2008 அன்று கனடாவில் நடைப்பெற்ற 27 - ஆம் வருட பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இலக்கியவாதிகள் (நாகரீகம் கருதி பிரசுகரிப்பது தவீர்க்கப்படுகின்றது) அரசியல் சூழ்ச்சிக்கு தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றனர்.
பெண்கள் சந்திப்பு, தலீத் மகாநாடு, இலக்கிய சந்திப்பு அல்லது நிகழ்வுகள் என்ற பெயரில் பின்னணியில் இயங்குவது தீவிரவாத ஈழ அரசியல் மட்டுமே. இப்படி திரைமறைவுக்கு பின்னே இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாத அரசியலை இணையத்தில் 'தேசம் நெற்' இணையம் மற்றும் சில தனிநபர்கள் துணிந்து வெளிப்படுத்திய போது மறைமுகமாகவும், பகீரங்கமாகவும் மிரட்டப்படுகிறார்கள்.
ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் வன்முறை காட்டும் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற நெடுங்குருதி நிகழ்வும், பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் சாட்சியங்களுடன் அம்பலப்பட்ட நேரத்தில் கூட்டறிக்கை என்ற பெயரால் 74 பேர்களின் கையெப்பத்தில் ஜனநாயகம் பேசுகிறார்கள். எங்கேயிருந்து வருகிறது பொறுக்கித்தனம்?
தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதற்கு மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது ஏன்? அரசு அங்கீகாரம் பெறாத இவர்களின் அமைப்பும் கூட்டம் வராத மாநாட்டுக்கும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளை வரவழித்து அரசியல் செய்வது ஏன்? வன்முறையாளர்கள் ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் பொய் முகங்களுடன் வன்முறை அரசியல் செய்யும் இவர்கள் கூட்டங்களில் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளையும் திசைதிருப்பும் முயற்சி தமிழ்நாட்டிற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர 'பெரியார் விழிப்புணர்வு' இயக்கத்தினரும், உலக தமிழர்களும் இணையம் வழியாக தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டம் மூலமாக அறிவிக்கின்றோம்.
கருத்துக்ளையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அறிக்கைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
http://thesamnet.co.uk/?p=2630
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3974:2008-09-13-11-46-45&catid=74:2008
http://www.thenee.com/html/130908-2.html
http://inioru.com/?p=911
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2316:-1983-2008-q-&catid=74:2008&Itemid=76
http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html
http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=56
http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf
நன்றி
தொடர்புகளுக்கு: periyar.europe@gmail.com
பெரியார் விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள்.
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா
பிரான்ஸ் நாட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.
பதிவு எண்கள் : 0772014997
*****
பின்குறிப்பு : 01.10.2008 அன்று தமிழக முதல்வர் அவர்களிடம் 'பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின்' இக்கோரிக்கை அறிக்கையின் இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப இருப்பதால் சமூக ஆவலர்களும், தோழர்களும், பொது மக்களும் தங்களுடைய கருத்துக்களை பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா வலைப்பூவின் அறிக்கையில் பின்னூட்டம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வறிக்கையை சமூகவாதிகளும், தோழர்களும், இணையத்தளங்களும், நாளிதழ்களும், விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment