Tuesday, September 22, 2009

ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி


ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி

மா_தவி


2009 ஜூலை 6 ஆம் தேதியன்று திரு.கி.வீரமணி அவர்கள் தஞ்சையில் உள்ள பெரியார் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகி விட்டது. விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் போர் புரிகிறோம். மக்களுக்க்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார். விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாகச் சொல்லும் ராஜபக்சே தங்களின் சொந்த இடங்களுக்குத் தமிழர்களைச் செல்ல விடாமல் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாகப் பிரித்து வைத்து இருப்பது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. தமிழகப் பெண்களை சிங்கள ராணுவம் விபச்சாரம் செய்ய வற்புறுத்துகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் ச்சுதந்திரமாக செயல்படவிடாமல் அப்படியே 10,15 ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது” என்றார் .

இந்தப் பேட்டி வெளியான ஒரு வாரத்தில் - ஜூலை 15 ஆம் தேதியன்று - திரு.கி.வீரமணி அவர்கள் வேந்தராக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் (Construction Industry Development Council – CIDC) தலைமை இயக்குனரான திரு.பி.ஆர்.ஸ்வரூப் அவர்களை வரவேற்க அது காத்திருந்தது. சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டிப்ளமோ படிப்பினைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடங்குவதற்கான ஒப்பந்ததத்தை CIDC அமைப்பு அன்றைய தினம் செய்து கொண்டது.

இதனை அடுத்த ஒரு வாரத்தில் - அதாவது ஜூலை 22 ஆம் தேதியன்று - வெளியான செய்தியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது. தஞ்சையில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் டிப்ளமோ படிப்பை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அதே CIDC அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது என்ற செய்தியே அந்த அதிர்ச்சிக்கான காரணம். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான “வட்டக்கின் வசந்தம்” திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருந்தது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் படும் துன்பங்களை நினைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வருகிறது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் வேந்தருமான திரு.வீரமணி, ஏனோ இலங்கை அரசுடன் தங்கள் பங்காளியான CIDC அமைப்பு கூட்டு சேர்ந்து கொண்டதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

CIDC என்ற இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் மெய்க்காப்பாளனும் அதன் சதியும் :

மத்தியத் திட்டக் கமிஷனானது இந்தியக் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து CIDC என்ற அமைப்பினை 1996 ஆம் ஆண்டில் உருவாக்கியது. உலகமயமாதல் கோட்பாட்டின் செயல்பாடுகளால் 1990 -களில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருந்த இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களைக் காப்பாற்றுவதே CIDC அமைப்பினை மத்தியத் திட்டக் கமிஷன் உருவாக்கியதற்கான முதண்மைக் காரணமாகும். இந்தியக் கட்டுமானத் துறையின் திறனை மேலை நாடுகளின் திறனுக்கு இணையாக மேம்படுத்துவதே CIDC யின் அடிப்படை நோக்கம். இந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் அளிப்பதே CIDC யின் பணி.

இந்தியாவின் கட்டமைப்புத் துறை தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும் தீட்ட மத்திய அரசுக்கு அது உதவுகிறது.உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டுமான ஒப்பந்தங்களையும், வழிமுறைகளையும் நெறிமுறைப் படுத்துவதிலும் அது ஈடுபடுகின்றது. அந்த நிறுவனங்களுக்கு அவசியமான பணிநயம் மிக்கத் தொழிலாளர்களையும், இடைப்பட்ட தளத்தில் செயல்படுகின்ற நிர்வாகிகளையும் உருவாக்கும் பணியையும் அது மேற்கொள்கிறது. தொழிலாளர்களின் நலத்தைப் பேணும் திட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அனைத்து ஒப்பந்தகாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஒப்பந்தங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் பணியையும் அது மேற்கொள்கிறது. கட்டுமானத் துறைக்கான நிதி தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது. கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் அனைத்துக் க்ருத்து வேறுபாடுகளையும் சமபந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேசித் தீர்க்கும் மத்தியஸ்தப் பணியையும் அது மேற்கொள்கிறது. இந்தியக் கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் கட்டுமான எந்திரங்களின் வங்கி ஒன்றினை அமைக்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும் அறிந்துகொண்டு அவற்றை இந்தியக் கட்டுமானத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்தியக் கட்டமைப்புத்துறையின் மெய்க்காப்ப்பாளனாக செயல்படுகின்ற CIDC தன் கல்விப் பணிகளை மேற்கொள்வதற்காக Construction Industry Professional Training Council (CIPTC) என்ற கல்வி அமைப்பை 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் ”இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழக்த்துடன்” இணைந்து ரூர்கி , புனே மற்றும் பெங்களூரு-வில் உள்ள இராணுவ மையங்களில் உள்ள இராணுவப் பணியாளர்களுக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெகானிக்கல் துறைகளில் டிப்ளமோ பட்டப் படிப்புகளை அளிக்கும் பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தியது. அடுத்து ஹரியானா மாநிலத்தின் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதற்காக ஹரியானா மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி மையத்துடன் இணைந்து அந்த மாநிலத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் உயர் டிப்ளமோ படிப்புகளை அது ஏற்படுத்தியது. தற்போது சர்வதேச அளவில் இந்த டிப்ளமோ படிப்புகளைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக்த்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பட்டயப் படிப்புகளை அது உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டயப் படிப்புகளை இந்தியா முழுவதும் வழங்குவதற்காக பலநூறு பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி மையங்களை CIDC யானது பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகை செய்துள்ளது.

இந்தப் பட்டயப் படிப்புகளை இந்திய அளவில் எடுத்துச் செல்வது மட்டுமே CIDC யின் நோக்கம் அல்ல. சர்வதேச அளவில் இதனை உடனடியாக எடுத்துச் செல்வதுவே அதன் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. .

இந்தக் குறிக்கோளின் முதல் கட்டமாக இந்தப் பட்டயப் படிப்புகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் CIDC இன்று ஈடுபட்டுள்ளது. 2009 ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று இலங்கை அரசின் கட்டுமானத்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற நிறுவனத்துடன் CIDC நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இலங்கையின் கட்டுமான நிறுவனங்களுக்கு அதிநவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களை வழங்க வழி செய்யும். இந்தக் கூட்டுறவு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அதில் இரண்டுபேர் ICTAD நிறுவனத்தில் இருந்தும், இருவர் CIDC நிறுவனத்தில் இருந்தும் நியமிக்கப் படுவர். இந்தக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்தின் தலைமை அதிகாரியான நிசங்கா என்.விஜரெத்னெ இருப்பார்.

இந்த ஒப்பந்தமானது யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் வெள்ளவத்தை ஆகிய நகரங்களில் கட்டுமானத் துறையில் பங்கெடுப்பதற்குத் தேவையான நவீனப் பயிற்சிகளை வழங்கிடும் மையங்களை அமைத்திட CIDC-க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களின் மூலமாக சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வன்னிப் பகுதியில் எடுக்கப்படவிருக்கின்ற கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மேஸ்திரி, சோதனைக்கூட ஆய்வாளர், கொத்தனார், தச்சர், குழாய்ப் பணியாளர், வெல்டர்களாக உருவாக்கப் படுவார்கள்.

ஆக, வன்னி நிலத்திறகான சிங்கள அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்குத் தேவையான கூலிப் பட்டாளம் ஒன்றை வன்னியைத் தவிர்த்த ஈழத் தமிழ் மக்களில் இருந்து உருவாக்கிடும் முயற்சியில் CIDC ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்துடன் CIDC ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்திற்கான நிகழ்வில் பல்கலைக்கழக்த்தின் வேந்தரான திரு.கி.வீரமணி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்: “சிந்தனை செய்! கண்டுபிடி! மாற்று! என்பதே பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் குறிக்கோள்களாகும். சிந்தனை செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துவதற்கும், இதன் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் கட்டுமானப் பொறியியல் துறையானது நிறைய வாய்ப்பைக் கொடுக்கிறது”. அவர் கூறிய கருத்துக்களையே CIDC அமைப்பானது ராஜபக்சா அரசுடன் சேர்ந்து கொண்டு வன்னி நிலத்தில் இன்று செயல்படுத்தப் பார்க்கிறது என்பதுதான் வேடிக்கை!
CIDC யின் பாடங்களைத் தமிழில் தரும் இந்தியாவின் ஒரே பல்கலைக் கழகமாக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இந்த சதியில், தெரிந்தோ தெரியாமலோ, CIDC -யின் பின்னால் செல்லத் தொடங்கியிருக்கிறது.

CIDC இலங்கை அரசியலலுக்குள் நுழைந்த கதை :

சிங்கள இராணுவம் கிளிநொச்சியை 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று ஆக்கிரமித்தது. கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் உள்ள சாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது அதன் பிறகு எறிகணை மழையை அது பெய்யத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கானோர் இந்தத் தாக்குதலுக்குப் பலியாயினர். இப்படிப்பட்ட தாக்குதல் அதிக அளவில் தொடர்ந்து கொண்டிருந்த பிப்ரவரி மாத இறுதியில் போருக்குப் பிந்தைய இலங்கையில் முதலீடு செய்வதை ஆராய்வதற்காக உயர்மட்டத் தொழில்துறைக் குழு ஒன்று சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தது. சீனாவிடம் இருந்து மன்மோகன் சிங் அரசின் எதிர்ப்பை மீறி 2007 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ராஜபக்சா அரசால் வெற்றிகரமாக வாங்கப்பட்ட JY-11 என்ற சீன ராடார் சீனர்களாலேயே இயக்கப்படப்பட்டு வந்த மிரிகாமா நகரத்தை அந்தக் குழு பார்வையிட்டது. அந்த நகரமே தமது நிறுவனங்களை எதிர்காலத்தில் அமைப்பதற்கு உகந்த இடமாக இருக்கும் என்று அது அறிவித்தது.

அந்தக்குழு இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குள்ளாகவே - அதாவது மார்ச் 5 ஆம் தேதியன்று- இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் தனக்கு 190 கோடி டாலர் கடன் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்திய அரசை உஷார் படுத்தின. இலங்கையில் போர் முடிவுக்கு வரப்போவதையே அவை கட்டியம் கூறுவதாக இருந்தன. போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்தியா எப்படிப்பட்ட பணிகளை எடுக்க வேண்டும் என்ற விவாதங்கள் இந்திய அரசினால் இதன் பின்னரே முன்னெடுக்கப் பட்டன. அவ்வாறு முன்னெடுக்கப் பட்ட விவாதங்களில் CIDC முக்கியப் பங்கை ஆற்றத் தொடங்கியது.

”விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுதுமாக அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளின் பின்னால் உறுதியுடன் நிற்கும்” என்று ஏப்ரல் 22 ஆம் தேதியன்று சீன அரசு அறிவித்தது. அடுத்த நாளே இலங்கையின் நிலவரம் என்ன என்பதை அறிந்து வர எம்.கே.நாராயணனையும், சிவ சங்கர மேனனையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. ”குழம்பிய இலங்கையில் ஆதாயம் தேடப் பார்ப்பதாக”ச் சீனாவின் மீது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குற்றம் சாட்டினார். அதே தேதியன்று இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.

போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.

சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின. இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.

ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார். சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.

ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.

இப்படிப்பட்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த CIDC அமைப்பே கூடுதலாகப் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தைத் தன் 90 ஆவது உறுப்பினராக சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடு பட்டு வந்தது. ஜூலை 15 ஆம் தேதியன்று அதில் வெற்றியும் அடைந்தது.

கி.வீரமணி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ?

சமூக நீதியின் காவலரான பெரியார் அவர்களின் பெயரைத் தாங்கிய ஒரு நிறுவனமானது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருப்பதை சுய மரியாதை உணர்வு கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை அரசு முன்வைத்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக ஜூன் மாதத்தில் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் தடபுடலாகப் பேசினார். ஆனால் தமிழர்களுக்கு எதிராக அங்கு நிலவும் அநீதியான சூழ்நிலையை ”நாம் தமிழர் இயக்கம்” அவரிடம் எடுத்துரைத்த போது, , அதனை எவ்விதத் தன்முனைப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட அவர் “இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை தமிழர்களை மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை முன் வைக்கும் இந்தியத் தொழில்நுட்பக் குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று ஆகஸ்டு 6 ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.

வேளாண் துறையில் வன்னிப் பெண்டிரைப் பயிற்றுவிப்பதே இந்திய அரசு அமைத்திருக்கும் வேளாண் தொழில்நுட்பக் குழுவின் நோக்கமாகும். கட்டுமானத் துறையில் 70 ஆயிரம் இளைஞர்களைப் பயிற்றுவிக்க ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று CIDC அமைப்பு இலங்கையின் ICTAD அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மேற்கூறிய வேளாண் தொழில்நுட்பக் குழுவைப் போன்றதொரு அமைப்பையே கட்டுமானத் துறையில் அமைக்கவிருக்கிறது. அந்த அமைப்பின் ஒரு அங்கமாகவே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உள்ளது .

இந்த சூழ்நிலையில் தலைவர் கி.வீரமணி அவர்களும் , பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் :

  • போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். வன்னி மக்களுக்காகப் போரின்போது தன்னலம் பாராது உழைத்த மருத்துவர்கள் இன்று இலங்கை அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
  • முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்குக் காரண்ம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. தமிழர் இல்லை.
  • ஆயிரக்கனக்கான ஆண்டுகளாகத் தமிழர் பூமியாக இருந்த வன்னிப் பெருநிலத்தில் 87 விழுக்காடு நிலம் அரசுக்கு சொந்தமானது என்று ராஜபக்சா அரசு தடாலடியாக அறிவித்துள்ளது. எனவே, அந்த நிலங்களில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது.
  • வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய எந்தவொரு திட்டத்தையும் மேலிருந்து திணிக்கக் கூடாது. இன்று CIDC மேற்கொண்டிருக்கும் திட்டம் வன்னி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் எதேச்சதிகார சிங்கள அரசால் மேலிருந்து திணிக்கப்படும் திட்டமேயன்றி வேறல்ல.


கி.வீரமணி அவர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனால் எடுக்கப்பட்ட முடிவைப் போலவே வன்னி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை அரசின் திட்டங்கள் எதிலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்து கொள்ளக்கூடாது. மேலும் அதே முடிவினை CIDC யும் எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் வற்புறுத்த வேண்டும்.

நீதிக்கான அந்த முடிவை ஏற்க CIDC அமைப்பு தவறினால் அந்த அமைப்பில் இருந்து (டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் வேளாண் தொழில்நுட்பக் குழுவில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்டது போல) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் விலகுவதாகப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

கூடுதலாக, CIDC யில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரிடமும் தமிழர்களுக்கெதிரான CIDC யின் தவறான செயல்பாட்டினை எடுத்துரைக்கக் கி.வீரமணி அவர்களும், அவர்தம் பல்கலைக் கழகமும் முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் CIDCயின் உறுப்பினர்களாக உள்ளன. எடுத்துக் காட்டாக: L&T, Hindustan Construction Company, GVR Infrastructure Ltd., Maytas Infra Ltd., Afcons Infrastructure Ltd., Lanco Infra Ltd., DLF Universal Ltd, Shapoorji Pallonji Ltd., Som Dutt Builders Ltd., ACC Cements, Unitech, Tarapore&Co, SMS Infrastructures Ltd, Saint Gobain Glass India Ltd., SEW Construction Ltd., Umak Investment Ltd., IL&FS, HDFC, Builders Association of India (BAI) போன்ற கட்டுமானத்துறை சார்ந்த CIDC உறுப்பினர்கள் பலகாலமாக தொழில் செய்து வருகின்றனர்.

”தயை கூர்ந்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதீர்கள்” என்பதை அவர்களிடம் வலியுறுத்தி, ”CIDC அமைப்பானது இலங்கை அரசுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தினைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை செயல்படுத்தக் கூடாது” என்ற கோரிக்கைக்குத் தோள் கொடுக்க அவர்களிடம் கி.வீரமணி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

தமிழ் இனத்தின் சமூக நீதிக்கான இந்த முடிவுகளைத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் உடனடியாகக் கைகொள்ள வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் இனத்தை எதிரியின் அநீதிக்கான சதியில் மூழ்கடிக்கும் காலம் என்பதை அவர் உணர வேண்டும்.

source: http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html

Friday, May 29, 2009

(காணொளி) 20,000 பொதுமக்கள் கொலை: சானல்4

Report of 20,000 civilians killed is 'very credible'

E-mail Print PDF

Twenty thousand civilians were killed in Sri Lanka's final push against Tamil Tiger rebels, claims a UN confidential report.

Monday, May 18, 2009

பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ..>>>>



IBCtamil.net: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்

meenagam.com:தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.

pathivu.com: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்

tamilnet.com: Sri Lanka lost confidence of Tamils: Pathmanathan



tamilnational.com:Pirabakaran alive; SL lost trust & confidence of Tamils; India has a crucial role to play

tamilwin.comவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

தமிழ் நெட்ற்கு திரு பத்மநாதன் செவ்வி





Friday, March 13, 2009

கருணாநிதியும், இரண்டு கருப்புச்சட்டைகளும். - ஈரோட்டுக்கண்ணாடி

கருணாநிதியும், இரண்டு கருப்புச்சட்டைகளும்.......

கருப்புச்சட்டை :1
"ராஜீவ் கொலை" என்ற ஒரு சம்பவத்தை, வஞ்சமாகவே மனதில் நிறுத்தி, புலிகளை ஒடுக்குதல் என்றப் பெயரில் ராஜபக் சே நடத்தும் தமிழினப் படுகொலைக்கு சோனியாவின் வழிக்காட்டுதலில் நடைபெறும் மன்மோகன் அரசு அனைத்து வழிகளிலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவுகிறது.
இந்தியத்துணைக்கண்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியே, ஈழத்தமிழர் மீதான போரை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் காங்கிரஸ் அரசுக்கெதிராக போராட்டம் வெடித்துள்ளது.இந்நிலையில், கடந்த பிப்-26 ந் தேதி திண்டுக்கல்லில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி தமிழினத்தின் மீது புரையோடிய சம்பவமான ராஜீவ் கொலை என்ற புண்ணைக் கீறிப் பார்த்திருக்கிறார். தமிழினத்திற்கு காங்கிரஸ் செய்த துரோகங்களையும்,பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஆற்றிய "அரும் பெரும் தொண்டுகளை" பட்டியலிட்டிருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் பற்றியும், சோனியா பற்றியும் பேசியதற்காக, கொளத்தூர்.மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக இத்தாலிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்படாமல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விட்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தாராளமாக நன்றித் தெரிவிக்கலாம்.
கடந்த 2000 ஆம் ஆண்டில், கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டப் போது,கருநாடகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையே கேள்விக்குள்ளானது. வழக்கம் போலவே, கலைஞர் தனது ஆட்சிக்கான ஆபத்து வந்துவிட்டதாகவேப் பார்த்தார். கொளத்தூர். மணி அவர்களின் முயற்சியினாலேயே கன்னட நடிகர் மீட்கப்பட்டார். கலைஞரின் ஆட்சியும் தொடர்ந்தது.
வள்ளுவத்திற்கு குறளோவியம் தீட்டிய கலைஞர்,செய்ந்நன்றி மறப்பவரா, என்ன?வரும் மே-13 ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.கொளத்தூர். மணி வெளியிருந்தால் சும்மா இருக்கமாட்டார். காங்கிரசுக்கெதிராகப் பேசுவார்.காங்கிரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவார்.
கோடையில் தகிக்கும் வெயிலில், கொளத்தூர்.மணி, அவ்வளவு சிரமப்பட்டு பிரச்சாரம் செய்வதை கலைஞரின் நன்றி மறவா நன் நெஞ்சால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதனாலேயே, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாம், மதுரை மத்திய சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்.
பெரியாரின் சுண்டுவிரல் பிடித்து, பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த கலைஞரின் அரசு, பெரியார் தொண்டன். கொளத்தூர். மணியை அரசு விருந்தினராக்கி, தேர்தல் கூட்டுக்காக...இன உணர்வுக் கொள்கைக்கு வேட்டு வைத்துள்ளது.
கலைஞரைத் தவிர,பெரியாருக்கும், பெரியார் கொள்கைகளுக்கும் இதை விட யாராலும் சிறப்புச் செய்யமுடியாது.

கருப்புச்சட்டை :2 (சாயம் வெளுத்தது)
முதல்வர்.கருணாநிதி மீது மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கூட அவரின் நினைவாற்றல் குறித்து வியப்பதுண்டு. இந்த நினைவாற்றலினால், சிக்கி சின்னாபின்னாமாகிக்கொண்டிருப்பவர் - தமிழர் தலைவர் தான்!
தான் நடத்தும் "விடுதலை" நாளிதழில் மட்டுமே தன்னை "தமிழர் தலைவர்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வீரமணியே அவர்!
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30 ந் தேதி நள்ளிரவு - சென்னை சி.அய்.டி நகர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலைஞர், மேம்பால ஊழல் வழக்கிற்காக,தமிழக காவல் துறையினரால், அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அய்யோ, கொல்றங்கப்பா ! கொல்றங்கப்பா !! என்ற ஓலம் தமிழகத்தையே திகிலில் உறையச் செய்தது.
ஆனால், வீரமணி மட்டும் அ.தி.மு.க காரனையே மிஞ்சும் அளவிற்கு, கலைஞர் "சண்டித்தனம்" செய்கிறார் என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனை யார் மறந்தாலும் கலைஞர் மறக்கவில்லை. காலம் பார்த்து காத்திருந்தார்.
வீரமணியும் அணி மாறி கலைஞரிடமே வந்துச் சேர்ந்தார் என்பதை விட கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீரமணி காங்கிரசை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தே தீரவேண்டும்.இந்த கருப்புச் சட்டைக்காரர், கதர்சட்டைகளுக்கு வால் பிடித்துத் திரிய வேண்டும்.தமிழகமே, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொதித்துக் கிடக்க வீரமணியோ "தேசியத் தலைவர்"களான சுதர்சனம்,தங்கபாலு, சின்னப்பண்ணையார் வாசன் மற்றும் காங்கிரசின் பல குழுத்தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
வீரமணியின் சொந்தப்புத்திக்கும்,பெரியார் தந்த புத்திக்கும் ஈழப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றுத் தெரியும்.ஆனால், அவரால் வாய் திறக்கமுடியாது.
பழைய ஞாபகத்தில்...காங்கிரஸ் தவிர்த்த திராவிட பார்முலா பற்றியெல்லாம் உளறிக் கொட்ட முடியாது.கலைஞருக்கு, அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தால், தனது இத்தனை கொள்கை சமரசத்திற்கு பிறகு பெற்ற"வேந்தர்" பதவிக்கு வேட்டுத் தான்! தன்னைப் பற்றி வனவாசம் என்ற நூலை எழுதிய நண்பன் கண்ணதாசன், திராவிட இயக்க எதிர்ப்பாளன் - பார்ப்பனசுந்தர ராமசாமி ஆகியோர் நூல்களையே நாட்டுடைமையாக்கிய கலைஞர் பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கிவிடுவார்.
அத்தோடு விட்டால் பரவாயில்லை. பெரியார் சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கிவிட்டால்......... நெஞ்சம் பதறுகிறது வீரமணிக்கு !

அதனால் தான், வக்கீல்கள் போராட்டத்தின்போது சோனியாகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படங்கள் எரிக்கப்பட்ட பிறகும், தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வக்கீல்கள் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீரமணியார் கொக்கரிக்கிறார்.
தி.மு.க., காங்கிரஸ் வக்கீல்களே, இதற்குப்பிறகும் உங்கள் கடமை என்ன? இதுகண்டு ஆத்திரம் வரவேண்டாமா? வழக்கம் போல் கோஷ்டி பாடுவதுதானா? என்று கொம்பு சீவி விடுகிறார்.
சோனியா படத்தை எரித்தால் காங்கிரஸ்காரன் சும்மாயிருந்தாலும், டமிலர் தலைவரால் இருக்கமுடியவில்லை.
பெரியார் திராவிடர் கழகம், சத்யமூர்த்தி பவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தால்,வீரமணி வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கராத்தே.தியாகராஜனோடு கைகோர்த்து நின்று சத்யமூர்த்தி பவனை காவல் காப்பார் போலும்.
கல்வி நிறுவனங்களின் " வேந்தர்" பட்டம் மற்றும் பெரியார் சொத்துக்கள் ஒரு பக்கம் !
இன உணர்வு, இயக்க லட்சியம் மற்றும் சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழர் மறுபக்கம்!!
வீரமணி எந்த பக்கம் நிற்பார் என்று தெரிந்தே, வீரமணியின் சண்டித்தனமான வார்த்தைகளுக்கு பழி வாங்குகிறார் கலைஞர்.
நம் தொப்புள் கொடி உறவுகள் உண்ண உணவின்றி,காயத்திற்கு மருந்தின்றி பிஞ்சு குழந்தைகள் பாலுக்கு துடிக்கும் நேரத்தில், தங்கபாலுவோடு "கை" சின்னத்திற்கு ஓட்டு பொறுக்கும் அவமானத்தை விட "கை" விலங்கு சுமந்து சிறையில் கிடப்பதே கருப்பு சட்டைக்கு அழகு!

Saturday, March 7, 2009

மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்? -ஈரோட்டுக்கண்ணாடி



மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?

http://erottukannadi.blogspot.com/

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? மற்றும் சீமானை சிறையில் சந்தித்தேன் போன்ற பதிவுகளுக்கான தவிர்க்க முடியாத எதிர்வினை
//என்னுடைய ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள்.///

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? என்ற பதிவை 28/02 அன்று கடந்த சனிக்கிழமை பதிவு செய்து இருக்கீறீர்கள்.
05 /03/ வியாழனன்று,புதுவையில், நீங்கள் சந்தித்த புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பனிடம்....... கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டீருக்கலாமே?
* நீங்கள் சார்ந்திருக்கும் பெரியார் தி.க., ஞானியை தோழமை சக்தியாகவே கருதுவதேன்?
* உங்கள் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணியும், பொதுச் செயலாளர் விடுதலை .ராசேந்திரனும் ஏன் பார்ப்பன ஞானியை விமர்சிப்பதை தவிர்த்தார்கள்?
* கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ ஞானியைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை?
‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டைப் பற்றி அவரிடம் பேசினீர்களா?
* உங்களின் இந்தப் பதிவினைத் தொடர்ந்து, /////ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. /////////
///////பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்/////////
இதனைச் சொல்வது, மருதையன் அய்யங்காரின் தலைமையேற்று, தமிழ்நாட்டில் புர்ச்சி செய்யும் soc ம.க.இ.கவினர். பல பின்னூட்டங்கள், ம.க.இ.க வின் பெரியார்.தி.க மீதான அவதூறு குறித்து தங்களின் கருத்தென்ன? என்று வினவின.
ஆனால், நீங்களோ பார்ப்பனத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ம.க.இ.க வின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு மவுன சாட்சியாகவே இருந்தீர்கள்.
ஒரு பக்கம் விடுதலைப்புலிகளை திவிரமாக ஆதரிக்கிற, புலிகளின் தலைவரை மேடைக்கு மேடை அண்ணன் என்றே அழைக்கின்ற சீமானை சிறையில் சந்திக்க செல்கிறீர்கள்!
மறுபக்கம், விடுதலைப்புலிகளை எதிர்க்கிற ம.க.இ.க மற்றும் ராயகரன் கும்பலோடும் தோழமை !!
பார்பபானஞானியை விமர்சனம் செய்யவில்லை என பெரியார் தி.க வைப் பார்த்து "கொளுகைக் கண்ணீர்" வடிக்கும் நீங்கள், பார்ப்பனீயத்தை தலைமைப்பீடமாக கொண்ட ம.க.இ.க வோடு தான் உங்களின் கொள்கைக் கூட்டணியா?
இது தான் உங்கள் பெரியாரியல் பார்வையா??

அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது?

சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது ! சொல்வது பெரியார் !
பெரியார் தி.க - ஞானியை விமர்சனம் செய்யவில்லை என்று விழுந்து பிராண்டுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும். மருதையன் அய்யங்காரின் தலைமையில் புரட்சி செய்யும் ம.க.இ.க பிராண்டுவது தான் கொடுமை.
.க.இ..க மண்டையுடைப்பு புரட்சியில் சூத்திரபசங்களுக்குத் தான் மண்டை உடைகிறது. அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது? சூத்திரர்களை ” வானரசேனை” ஆக்கி சூட்சமமாக மேலே உட்கார்ந்திருப்பது தான் பார்ப்பனீயம். அது தான் ராமாயணம். புத்தமதத்தை ஹீனயானம், மகாயானம் என செரிமானம் செய்தது பார்ப்பனீயம்.
மார்க்சீயத்தை பாரதப்புண்ணிய பூமியில் நேரடியாக சனாதானப்படுத்தியது மார்க்ஸிஸ்ட் குழுமம். மறைமுகமாக இதே வேலையை செய்கிறது ம.க.இ.க.
மருதையன் அய்யங்காரிடம் பார்ப்பனீய தாத்பாரியங்கள் அவரது பிறவியில் மட்டுமல்ல, ம.க.இ.க வின் அரசியலிலுமே தெரிகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான கருவியாக தான் இட ஒதுக்கீட்டை அடையாளம் காட்டினார் பெரியார்.பெரியாரை ஏற்றுக்கொள்ளும் மருதய்யங்கார் சேவாக் சங், பல்வேறு பல்டி அடித்தப் பின் தான், தற்போது இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதாக பம்மாத்து செய்கிறது.
மார்க்சீயத்திற்குள்ளும் ஊடுருவிய பார்ப்பனீயத்தின் ஒருமுகம் இது!
பார்ப்பனத்தி ஜெ கூட இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக உறுதி படுத்தியதாக அதிமுக காரன் முதல் அப்போதைய வீ.ரமணி வரை, அவரை போற்றிப் புகழ்ந்து வீராங்கனை பட்டம் தந்தார்கள்.
திராவிட இயக்கத்தின்(அதிமுக) தலைமையை கைப்பற்றிவிட்ட பார்ப்பனீயத்தின் மறுமுகம் இது!!
2 மொழிகள்,2 தேசிய இனங்கள்.....சேர்ந்தே வாழமுடியாது என்ற அளவிற்கு சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விடுத்து தமிழர்களுக்கு மானத்தோடும், கவுரவத்தோடும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. டக்ளஸ், கருணா போன்று எதிரியின் கால் நக்கிப் பிழைப்பதற்கு குண்டு வீச்சிலே செத்து தொலைக்கலாம் இத்தனைக்கு பிறகும் லெனினின் தேசிய இன உரிமையை படித்து தெளிந்த மேதாவிகள், புலிகள் இயக்கத்தை எதிர்ப்பார்களாம்! இலங்கை தமிழனுக்காக அழுவார்களாம் !! தமிழீழத்தை மறுப்பார்களாம் !!!
தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் ஆண்வடிவம்.
இதே போலத் தான் புலிகள் என்றாலே கிலி கொண்டு அலறும் ஜெ, கூட ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறார், நிதி வசூலிக்கிறார்.
தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் பெண்வடிவம்.

பார்ப்பனீயத்தின் வடிவங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது. அவற்றின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது.

வேட்டி/பேண்ட் அணிந்த ஜெயலலிதா தான் மருதய்ய அய்யங்கார்.சேலை அணிந்த மருதய்யன் தான் ஜெயலலிதாஜெயராம் அய்யங்கார்.
மருதய்யனின் பிறவியை பேசுவதாக ராயகரன் கூட கண்ணீர் வடிக்கிறார். உயர் சாதியில் பிறப்பவன்,சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராக போராடமுடியும் என்று சான்றிதழ் தருகிறார். SOC மருதய்யனுக்கும், ராயகரனுக்கும் என்னத் தொடர்பு?
....................
ஆனால், விபி சிங் கை இவர்கள் பிறவி ரீதியாகத் தான் பார்ப்பார் களாம். அவர் காங்கிரஸில் இருந்தாராம். 1925 முன், பெரியார் கூட காங்கிரஸில் தான் இருந்தார்.அதற்காக, செப்டம்பர் 17 அன்று தறி நெய்து "ரகுபதி ராகவ ராஜராம்" பாட சொல்வார்களா ? இந்த மார்க்சீய மண்டூகங்கள்.
இந்த கோளாறு, சூதுகளையெல்லாம் யோசித்தே, பெரியார், திராவிடர் கழகத்தில் எந்தப் புரட்சிப் பார்ப்பானைக் கூட உள்ளே சேர்ப்பதில்லை என அறிவித்தார்.
பெரியார் தி.க, ஞானியின் உழைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். ஞானிக்கு மட்டுமல்ல,எந்தப் பார்ப்பானுக்கும் பெரியார் தி.க பயன்பட்டது கிடையாது. ஒரு பார்ப்பானே, பெரியார் படம் எடுத்தால், அதை மக்களிடம் எடுத்துச் செல்வது சரியான பெரியாரியல் பிரச்சாரம். பார்ப்பானே, பார்ப்பானை செருப்பாலடிப்பதற்கு நிகரான வேலை. அந்த வேலையை பெரியார். தி.க செய்தது.
பார்ப்பானை ஞானகுருவாக ஏற்றுக்கொள்ளவிலை....ம.க.இ.க போல.

பார்ப்பனத்தலைமையை ஏற்றுக் கொண்டு, பெரியாரியல் பேசும் புரட்சியாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீள்ப்பார்வை செய்வது நலம்.

Wednesday, February 25, 2009

கோவில்களில் பூணூல் அய்யர்வாள் , வலைப்பூக்களில் CPIML SOC மக இக அய்யர்வாள்

என்ன நண்பர்களே

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ?

நான் எப்பொழுதுதாவதுதான் இணையத்துக்கு வர இயலும். நான் மட்டுமல்ல இங்குள்ள பல தமிழுணர்வாளர்களும் அப்படிதான்.

ஆனால் எந்நேரமும் தமிழ்மணத்தில் நாம் CPIML SOC அய்யர்வாள்களைக்காணலாம்.

கோவில்களில் பூணூல் போட்ட அய்யர்வாள் என்றால் வலைப்பூக்களில் பூணூலின் மேல் செஞ்சட்டை போட்ட CPI ML SOC மக இக அய்யர்வாள்களைக்காணலாம்.

புரட்சி மார்க்சியம் என்று எந்நேரமும் வலைபூக்களில் எழுதிக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக வினருக்கு வேலையே குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதுதான் போலும் இல்லையென்றால் பி.இரயாகரனிடம் இருந்து தடசணை வராது அல்லவா.

கோவிலில் தட்டிலே காணிக்கை , இவர்களுக்கு தமிழர்களை குழப்பினால் பிரான்ஸ் இரயாகரனிடமிருந்து தட்சணை.

இங்கு ஆயுதப்புரட்சி என்று குழப்புவார்கள் , மற்ற இடத்தில் நடந்தால் அது பாசிச கொடுங்கோன்மை என்பார்கள். அவர்களின் ஏடான புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் போன்ற இந்து, தினமலம் போன்றவற்றிற்கு நிகரான பொறுத்தருளவும் இந்து , தினமலம் போன்றவற்றைவிட தமிழர்களை வெறிப்பிடிக்க வைத்து குழப்பும் இதழ்களான CPI ML SOC இதழ்களை பல ஆண்டுகளாக படித்து வருபவர்களுக்கு உண்மையில் மண்டை குழம்பி கீழ்பாக்கம் தான் போக வேண்டும்.


1998 இல் இட ஒதுக்கீடு கூடாது. இட ஒதுக்கீடு வேண்டாம் ,

2005 இல் இட ஒதுக்கீடுக்காக போராடும் ஒரே அமைப்பு நாங்கள்தான் என்பார்கள்.

இவர்களின் கட்சி திட்டத்தினை பார்த்தால் 85 இலட்சம் கோடி ஆண்டுகள் புனிதம் மிக்க நம் நாடு என்பார்கள்.

மார்க்சிய மூலக்கூறில் பொருள் முதல்வாதம் , கருத்து முதல்வாதம் ........ என்று பார்த்தால் மார்க்சு புனிதம் என்பதே தவறானது என்றுள்ளார் என்பார்கள்.


நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.

அந்தர் பல்டி என்றால் முறையாக அடிக்க cpi ml soc மக இக யிடம் கற்றுக்கொள்ளலாம்.

இவர்களது வேலை " பசியால் துடிக்கும் ஒருவனிடம் சென்று உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் இவர்கள்தான் உன்னைப்போல் ஆன மற்றவர்களை உன்னுடன் சேர்த்து அமைப்பாகி போராடு என்று அவனை குழப்பிவிட்டுவிட்டு போய்விடுவார்கள் "

தூண்டி விட்டுவிட்டு போய்விடுவார்கள் ஆனால் பசியில் இருக்கும் அவனுக்கு உணவு தரமாட்டார்கள்.

கேட்டால் இப்படி ஆயி அப்படி ஆயி இப்படி வந்து னு... இழுத்துக்கிட்டே போவார்கள்.

அவன் அப்படியே பசியாலும் மூளை குழம்பியதாலும் செத்து சீரழிவான்.

இதுதான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக விலிருக்கும் அடிமட்ட தொண்டனின் நிலை. இப்படிப்பட்ட நிலைதான் குளுகுளு அறையில் இராயகரனின் தட்சணைக்காக எழுதும் ஒருவரின் கருத்துப்படத்தினை வெளியிட்ட அந்த அப்பாவி 5 நபர்களின் நிலை.

மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆயுதமா?
அப்படியென்றால அதை நாம் எடுப்போம் - பார்ப்பனியர்கள்

இணையதளம் உலகம் முழுக்க தமிழர்களின் நிலையை சொல்லுமா அப்படியானால் இணையத்திலே நாம் தமிழால் தமிழர்களை குழப்புவோம் ஒன்று சேரவிடாமல் சிதைப்போம் - நவீன பார்ப்பனியர்கள்.

ஆனால் என்ன மக இக , புமாஇமு வில் உள்ள அடிமட்டத்திலுள்ள அத்தொண்டர்களுக்கு மக இக என்பதும் அரசியல் கட்சிதான் என்பதும் அவ்வளவாக தெரியாது. அவர்கள்தான் CPI ML SOC என்பது என்று அவர்களுக்கு அது தெளிவாக தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் தானாகவே மக இக விலிருந்து விலகுகிறார்கள். இதை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.

என்ன இன்னும் நம் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட பார்ப்பனியர்களின் தந்திரம் தெளிவாக தெரியவில்லை. வலைப்பூக்களின் உலாவும் தமிழர்களே தமிழினத்தினை சிதைக்கும் மக இக CPI ML SOC இடமிருந்து விழிபோடு இருங்கள்.

தமிழ் கம்பெனிக்களுக்கு தெரிந்த சுயபுராணமும் தெரியாத வரலாறும்

தமிழ்நாட்டிலே தமிழ் தமிழ் தமிழ் என்று வாய் நிறைய மேடையேறி சொல்லுபவர்கள் இதுவரை நடைமுறையில் எதுவும் செய்தது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

வெட்டி தம்பட்டம் அடிப்பதால் யாருக்கும் எவ்வித பயனும். அப்படி வெட்டி தம்பட்டம் அடிப்பவர்கள் தங்கள் சுய புராணத்தின் பொழுது வரலாற்றையே மாற்றிவிடுகிறார்கள்.

அப்படி வரலாறு தெரியாமல் தம்பட்டம் அடித்த ஒரு தமிழ் கம்பெனியாரின் சுயபுராணத்தினை கேட்க நேர்ந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் வழகுரைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழ ஆதரவு மாநாட்டின் குறுந்தகடு கிடைத்தது. அந்நிகழ்வில் 3 ஆம் முறையாக சிறை சென்ற இயக்குநரும் , பொடா வில் உள்ளே சென்றவன் நான் என்று மேடை தோறும் கொக்கரிக்கும் நியூகோட்டையூராரும் கலந்துகொண்டார்.

அந்த கோட்டையாரின் பேச்சை நாம் இதுவரை கேட்டதில்லை என்பதால். ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம் என்று போட்டுப்பார்த்தால். அந்நபர் பேசிய 1 மணி நேரத்தில் 55 நிமிடங்கள் சுயபுராணம் மட்டுமே இருந்தது.

அதில் சில " என்னை அந்த ஊரிலுள்ள பள்ளியில் அழைத்திருந்தார்கள் அங்கே பேசும் பொழுது திப்புச்ல்தானின் பெயர் புலி என்றேன் , மற்றொரு இடத்தில் பேசும்பொழுது சிறந்த விலங்கு புலி என்றேன் , மற்றொரு இடத்தில் மூவேந்தர்களின் கொடிகளில் ஒன்று புலிக்கொடி என்றேன் ,...... இப்படியே பழைய சுயபுராணம்தான் வந்தது நடுவில் ஒன்று சொன்னதைக்கேட்டு அந்நிகழ்வில் இருந்த இசுலாமிய பொதுமக்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எதற்கு சிரித்தார்கள் என்று சுயபுராணம் தலைக்கேறிய அவருக்கு புரியவில்லை.

அவர் சொல்லியது ... ' லிபியா நாட்டு போராளிகளின் தலைவரை பாலைவனப்புலி என்பார்கள் ' என்றார். இதைக்கேட்ட நமக்கும் சிரிப்புதான் வந்தது. பாலைவனத்து சிங்கம் உமார் முக்தாரை பாலைவனப்புலி என்று மாற்றிவிட்டார் தனது சுயபுராணத்திற்காக.

"LION of THE DESERT " எப்பொழுது " TIGER OF THE DESERT" ஆக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. பொடாவில் சென்று வந்தவன் என்று கூறிக்கொள்ளும் அந்நபருக்கு இச்சிறுதகவல் கூட தெரியவில்லையா அல்லது தெரிந்தே கூடி இருக்கும் மக்களிடம் தன் சுயபுராணத்திற்காக வரலாற்றினை மாற்றினாரா என்று தெரியவில்லை.

ஆனால் என்ன ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது , தமிழ் கம்பெனிகளுக்கு இதுதான் வியாபாரம் என்று.

கோட்டையூரை சேர்ந்தவர் கடைசி வரை சுயபுராணம் பாடியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமே அளித்திருக்கும்.

Monday, February 9, 2009

தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் மகஇகவினர்

தமிழகத்திலுள்ள மக்களிடத்திலே கருத்துக்களை சொல்ல திராணியற்ற மகஇக வினர் முல்லைத்தீவுக்கு படகு பயணமாம். ஈழத்தமிழர் , தமிழீழம் என்று சொல்லக்கூட தைரியமற்ற தனது கட்சி பேரான CPI-ML(SOC) என்பதனை கூட மக்களிடம் சொல்ல துணிவில்லா ஒட்டுக்குழுவினர் முல்லைத்தீவுக்கு பயணம் என்ற ஒரு காமெடி காதில் கேட்டதும். அப்பகுதியிலுள்ள என் மீனவ உறவினர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கடற்கரையிலிருந்து படகில் ஏறும்பொழுது அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் " சுய நிர்ணயம் வழங்கு " " இலங்கைத் தமிழர்களை கொல்லாதே " " சிங்கள இராசபக்சேவை கண்டிக்கிறோம் " இப்படி வாசகங்கள் இருந்ததாம். ஒரு இடத்தில் கூட ஈழம் என்றோ ஈழத்தமிழர்கள் என்றோ இல்லலயாம் .

அவர்களின் உரையினை கேட்ட மீனவர் ஒருவர் கூறிய வார்த்தை " இவன் யாரப்பா அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுக்க சொல்ல , ஒன்று பட்ட இலங்கையில் சுய நிர்ணய உரிமை கொண்ட ஒரு தமிழ் மாநிலம் எப்படி ? பசிக்கிறவனுக்கு எது வேணுமோ அதை அவன் தின்பான் , ஈழத்துல பசிக்கிற மக்களுக்கு எது திங்கனும்னு அவனுகளுக்கு தெரியும் இவனுக யாரப்பா இப்படி குழப்புறது , ஈழமக்கள் அவங்க விடுதலைக்கு தீர்வு தமிழீழம் , இந்த வக்கீல்மாரு என்ன சொல்ல வராருனு புரியலைங்களே " என்று கூறியதாக நமக்கு தகவல் வந்தது.

கடற்கரையிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் இருந்து கொண்டு செல்பேசியில் பேட்டி கொடுத்தார்களாம் "இன்னும் 2 மணி நேரத்தில் முல்லைத்தீவுக்கு சென்றுவிடுவோம் " என்று. ( BSNL , AIRCEL , AIRTEL , HUTCH TOWER லாம் முல்லைத்தீவுக்கு 2 மணி நேர தொலைவில் எப்ப போட்டாங்கனு மக இக கிட்டதான் கேட்கனும்) மீனவர்கள் மற்றும் கடல்சார்ந்த எம் மக்கள் வயிறு வலிக்க சிரிக்காத குறைதான். ஈழத்திலே வடகிழக்கில் இருப்பது முல்லைத்தீவு இவர்கள் படகில் இருந்ததோ தூத்துக்குடி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் இதுவோ தென்கிழக்கில். இலங்கைத்தீவினை சுற்றி செல்ல வேண்டும் முல்லைத்தீவுக்கு.

மக இகவினர் சரியாக காமெடி விடுறாங்க. நடிகர் வடிவேல் இனி மேல் மக இகவினர் கிட்ட காமெடி கற்றுக்கொள்ளலாம். படகில் இருக்கும் டீசல் டாங்க் அளவோ குறைவானது. மேலும் சர்வதேச கடல் எல்லைக்கே அப்படகு செல்லவில்லை. மகவினரே முதலில் ஈழத்திற்கான உங்கள் தீர்வு என்னவென்று சொல்லுங்கள். மேலும் இந்த போராட்டத்தினை அறிவித்தது தி.மு.கவினை சேர்ந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு என்பவர்தான்.

என்னமோ போங்க CPIMIL-SOC ( மக இக , ம.உ.பா) காமெடி தாங்க முடியலை. சிங்கள கைக்கூலி இராயகரன் என்னங்க சொன்னாரு இந்த பிரச்சினைக்கு ......?

Thursday, January 8, 2009

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடலாமா "சங்கதி"(www.sankathi.com)?

நண்பர்களே

இத்தலைப்பினை கண்டதும் அதிர்ச்சி அடைவீர்கள். உலகம் முழுவதும் தமிழர்களால் அதிக அளவு பார்க்கப்படும் செய்தி தளம் சங்கதி பதிவு போன்ற தளங்கள்.

ஆனால் இப்பொழுது அத்தளங்களின் செய்திகள் நம்பத்தகாத வகையில் உள்ளது.

சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் இணைந்து 01.12.2008 அன்று கோவையிலுள்ள பெரியார் படிப்பகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பில் தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு பெரியார் திராவிடர்கழகத்தினரால் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர்.

அவர்கள் விடுத்த அறிக்கை :

PathivuToolbar ©2009thamizmanam.com

தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு கறுப்பு கொடி காட்டப்படும் - பெரியார் தி.க.

பெரியார் திராவிடர் கழகம்

01.12.2008 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

செய்திக் குறிப்பு :.

சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த

இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.

சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.

மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின்

உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட

முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை

தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும்,

பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு

அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி

தொடரும் என்கிறார்கள் . ஏன் ? இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் இந்த துரோகத்தை எதிர்க்கும் தமிழின உணர்வாளர்கள் இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வருமாறு பெரியார் திராவிடர் கழகம் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது.

இவண்

பெரியார் திராவிடர்கழகம்

நன்றி : பெரியார் பாசறை

இவ்வறிக்கை வெளியிட்டபின்னர் 19.12.2008 அன்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தமிழக காவல்துறையினரால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரசு கட்சியின் மன்மோகன்சிங் சென்னை வரும் தகவல் கிடைத்த பின்னர் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெரியார் திக துணைத்தலைவர் தோழர் ஆனூர் செகதீசன் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஆகியோருடனும் ஆலோசித்துவிட்டு 29.12.2008 அன்று மன்மோகன்சிங் தமிழக வருகையைக்கண்டித்து 08.01.2009 அன்று சென்னையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

அறிக்கை:





நன்றி : பெரியார் பாசறை


கிழமை இதழ் பெரியார் முழக்க செய்தி :
ஜன.8 இல் பிரதமருக்கு கருப்புக்கொடி!
பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு
ஜன. 8 ஆம் தேதி சென்னை வரும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டுவது என பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் ஒருமித்த கண்டனக் குரலை எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இவ்வளவுக்கும் பிறகு சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அணிவகுத்து சிங்கள ராணு வத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உண்மையாக வெளிப் படுத்தினர். பிறகு தமிழக நாடாளுமன்ற குழு - பிரதமரை சந்தித்து வற்புறுத்தியது.
இறுதியாக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும் தடுக்கவில்லை.
ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பிரதமர் எந்த இணக்கமான முடிவும் எடுக்காமல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பிரதமர் தமிழகம் வருவது - தமிழக மக்களைஅவமதிக்கும் செயலே ஆகும்.
எனவே 8.1.2009 அன்று சென்னை வரும் பிரதமருக்கு, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திட, கருப்புக்கொடி காட்டு வது என பெரியார் திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நன்றி : பெரியார் முழக்கம் 01.01.2009


குறுகிய காலப்பகுதியில் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ,விடுதலை க.இராசேந்திரன் அவர்களும் பெரியார் திகவின் சென்னை மாவட்டத்தலைவர் தோழர் அன்பு தனசேகரன் அவர்களும் நேரடியாக தமிழ்நாடு முழுக்க உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு வந்து ஒன்று சேர்வதற்கான ஏற்பாட்டினை துரிதமாக செய்தனர்.
இதில் சென்னை தோழர் தபசி குமரன் முழுநேரம் உழைத்து ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டார்.

இவர்களின் உழைப்பால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பேருந்து சீருந்து பிடித்தும் தொடர்வண்டியிலும் 08.01.2009 அன்று சென்னை வந்து சேர்ந்திருந்தனர். சென்னை தோழர்களின் ஒருங்கிணைப்பில் தோழர்கள் அனைவரும் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவில் காலை 8 மணியளவில் குவிந்தனர்.

இதற்கு முன்னதாக ஒரு சில நாட்களுக்கு முன்பு திராவிடம் என்பதையே தீண்டத்தகாத சொல்லத்தகாத வார்த்தையாக கூறிவரும் ஒருவர் 07.01.2009 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு 08.01.2009 அன்று சென்னை மறைமலையடிகள் பாலம் சென்று அங்கு யாரும் இல்லாததால் கடைசி நேரத்தில் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் திரளாக சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்வதைக்கேள்விப்பட்டுவிட்டு அவசர அவசரமாக பெரியார் திராவிடர் கழத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் புகுந்துகொண்டார்.

திருப்பூரில் 2007 இல் அனைத்து அமைப்புகளும் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் திராவிடத்தையும் பெரியார் திக பொதுச்செயலாளார் கோவை.கு.இராமகிருட்டிணன் மற்றும் ஆதிதமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் அவர்களையும் இழிவுபடுத்திய அந்த நபர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கூட்டத்தில் புகுந்து ஆர்ப்பாட்டத்தின் முன்வரிசையில் நடுவில் போய் நின்றது கண்ட தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெரியார் திக தோழர்கள் நாகரீகம் கருதி அந்நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததன் நோக்கத்தில் கவன செலுத்தினர். அந்நபருடன் 20 க்கு குறைவாகவே அவரது ஆதரவாளர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அந்நபர் தான் நிற்பதை மட்டும் நிழற்படம் எடுத்து முன்கூட்டியே அவர் எழுதிவைத்துக்கொண்ட 2000 பேர் கலந்துகொண்டனர் என்ற ஒரு பொய் செய்தியை செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு முழுக்க முழுக்க வேலை செய்து ஏற்பாடு செய்த பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் பெயர் கூட இல்லாமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு செய்தியினை அந்நபர் முன்கூட்டியே செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.

இவ்வாறு தவறான செய்தி வெளியானதை கேள்விப்பட்ட தோழர் வே.மதிமாறன் தான் எடுத்த நிழற்படங்களையும் உண்மையான செய்திசுருக்கத்தினையும் தனது வலைப்பூவில் வெளியிட்டு உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அவ்வார்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட பெரியார் திகவினரும் மற்ற அமைப்பின் தலைவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மொத்தத்தில் 800 வரை தோழர்கள் வரை கலந்துகொண்டனர்.

இவற்றை எதையும் ஆய்வு செய்யாமல் உலகமக்களால் அதிக அளவு பார்க்கப்படும் சங்கதி , பதிவு மற்றும் சில தளங்கள் ஆய்வு செய்யாமல் செய்தியினை வெளியிட்டதால் தோழர்கள் அனைவரும் அத்தளங்களின் செய்திகளின் மேல் அதிருப்தியில் உள்ளனர்.

சனவரி 2 அன்று அந்நபர் வெளியிட்ட அறிக்கை

Friday, January 2, 2009

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பழ. நெடுமாறன்


எமக்கு இத்தகவல்களை வழங்கி உதவிய தளங்கள்:

1 ) தோழர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூ : http://mathimaran.wordpress.com/2009/01/08/article154/

2) பெரியார்பாசறை

3) பெரியார் முழக்கம் 01.01.2009

4) தென்செய்தி வலைப்பூ



தகவல்களை வழங்கிய நண்பர்களுக்கும் வலைப்பூக்களும் நன்றி

மேலும் இதைப்பற்றிய தகவல்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்.

தோழமையுடன்


ஆழிக்கரையான்