Monday, March 10, 2008

தமிழகத்திலுள்ள இந்திய பொதுவுடைமை அரசியல் கட்சிகள்

1. சி.பி.ஐ.(CPI)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
COMMUNIST PARTY OF INDIA

இளைஞர் அணி : அகில இந்திய இளைஞர் பெருமன்றம்
ALL INDIA YOUTH FEDERATION (AIYF)

மாணவர் அணி : அகில இந்திய மாணவர் பெருமன்றம்
ALL INDIA STUDENTS FEDERATION( AISF)
2. சி.பி.ஐ.(எம்)(CPI(M))
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)
COMMUNIST PARTY OF INDIA ( MARXIST)

இளைஞர் அணி : இந்திய சனநாயக வாலிபர் சங்கம்
DEMOCRATIC YOUTH FEDERATION OF INDIA (DYFI)

மாணவர் அணி : இந்திய மாணவர் சங்கம்
STUDENTS FEDERATION OF INDIA (SFI)

மகளிர் பிரிவு : அனைத்திந்திய மாதர் சங்கம் (AIDWA)

கலைபிரிவு : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (த.மு.எ.ச)

3. சி.பி.ஐ.( எம்.எல்)(லிபரேசன்) CPI(ML)

4. சி.பி.ஐ.( எம்.எல்.) மா.அ.குழு
CPI (ML) SOC
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில அமைப்புக்குழு
COMMUNIST PARTY OF INDIA (MARXIST LENINIST) STATE ORGANISATION COMMITTEE

கலைப்பிரிவு : மக்கள் கலை இலக்கிய கழகம்

மாணவர் அணி : புரட்சிகர மாணவர் இளைஞர் அணி (RSYF)

மனித உரிமை பாதுகாப்பு நடுவம் (HRPC)

Saturday, March 8, 2008

வரதட்சணை அல்லது பிச்சையெடுத்தல்

என்னிடம் அய்ம்பது பைசா வாங்கியவரின்

பெயர் பிச்சைக்காரன்

என்னிடம் அய்ம்பதாயிரம் வாங்கியவரின்

பெயரோ மாப்பிள்ளை

................................................பெண்

Friday, March 7, 2008

நினைவில் வைக்க வேண்டிய பெண்களும் நாட்களும்- ஆழிக்கரைமுத்து

நினைவில் வைக்க வேண்டியவை:
  1. அவ்வையார்
  2. பெண்போராளி ரோசா லுக்சம்பர்க் 05/03/1871 - 18/01/1919
  3. விண்வெளியைச்சுற்றிய முதல் பெண் வாலண்ட்டினா பிறப்பு 07/03/1937
  4. போராளி சாவித்திரிபாய் பூலே இறப்பு 10/033/1897
  5. ருசியாவில் பெண்களுக்கு சமஉரிமை அமல் 02/04/1917
  6. அனைத்து உலக விலைமாதர் உரிமை நாள் ஏப்ரல் 03
  7. போராளி சோன் ஆஃப் ஆர்ர்க் பிறப்பு 06/04/1412
  8. ஈழ அன்னை பூபதி இறப்பு 19/04/1988
  9. பிளாரன்சு நைட்டிங்கேல் பிறப்பு 12/05/1820
  10. ஈழப்போராளி இராதா வீரமரணம் 20/05/1987
  11. அன்னை நாகம்மையார்( பெரியாரின் துணைவியார்) இறப்பு 21/05/1933
  12. போராளி சோன் ஆஃப் எரித்துக் கொலை 30/05/1431
  13. கிரன்பேடி பிறப்பு 09/06/1941
  14. ஜான்சி இராணி இலக்குமிபாய் பிறப்பு 17/06/1835
  15. வீரத்தாய் வேலுநாச்சியார் அரசியல் வாழ்வு தொடக்கம் 25/06/1772
  16. முதல் பெண்மருத்துவர் முத்துலக்குகி இறப்பு 222/07
  17. பூலான்தேவி படுகொலல 25/07/22001
  18. பெண் மருத்துவர்கள் நாள் சூலை 30
  19. செஞ்சோலை பெண் குழந்தைகள் நினைவு நாள் 14/08/2006
  20. போராளி அங்கயற்கன்னி வீரமரணம் 16/08/1994
  21. அன்னை தெரசா பிறப்பு 26/08/1910
  22. அன்னை தெரசா இறப்பு 05/09/1997
  23. சிப்கோ பெண்கள் இயக்கம் 16/09/1974
  24. போராளி மாலதி
  25. போராளி கிளாராஜெட்கின்
  26. போராளி ஜென்னி
  27. போராளி குரூப்சிகயா
  28. போராளி சோதியா
  29. போராளி அறிவுமலர்
  30. போராளி திருமகள்
  31. மேரி கியூரி பிறப்பு 07/11/1933
  32. தமிழ் மொழிப்போரில் முதல்முறையாக பெண்கள் தளைப்படுத்தல் 13/11/1938
  33. வீரத்தாய் வேலுநாச்சியார் நினைவு 25/12/1796
  34. சாவித்திரிபாய் பூலே பிறப்பு 03/01/1831
  35. இரண்டாம் உலகப்போர் பாலியல் வன்முறைக்கு சப்பான் கொரியப்பெண்களிடம் பொறுத்தருள வேண்டல் 13/01/1992

எனக்குத் தெரிந்த பெண்களை பற்றிய தகவல்களை இதில் அளித்துள்ளேன்.

திருவள்ளுவர் - ஒரு நாத்திகர்- ஆழிக்கரைமுத்து

மனுதர்மம் - கடவுள் ஸ்ரீவிஷ்ணு அருளியது.

பைபிள் - கடவுள் யெகோவா அருளியது.

குரான் - அல்லாஅருளியது.

ஆனால் திருக்குறள் மனிதர் மனிதருக்காக அருளியது. எனவேதான் திருக்குறள் மக்களிடம் பரவவில்லை. திருவள்ளுவரும் திருக்குறளை கடவுள் அருளியது என்று சொல்லியிருந்தால் திருக்குறளும் ஒரு மதத்தின் வியாபாரமாக பரவியிருக்கலாம்.

நாம் வாழும் பூமியானது கதிரவனிடத்தில் இருந்து வந்தது என்பது உலகறிந்த உண்மை.

பைபிளில் உலகம் தட்டையானது என்று உள்ளது. உலகம் உருண்டை என்ற உண்மையைக்கூறியதால் அறிஞர் கலிலியோவை இந்த உலகம் அடித்துக்கொன்றது.

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"
இதில் பகவன் என்பது கதிரவன் என்ற அர்த்தத்தை உடையது.

திருக்குறளில் மறைமுகமாக வள்ளுவர் அவர்கள் இவ்வுலகம் தோன்றிய உண்மையை கூறியுள்ளார். இக்காலகட்டத்திலேயே நாம் ஒரு உண்மையைக்கூறினால் நமக்கு எற்படும் பாதிப்புகள் ஏராளம். அப்படியென்றால் பார்ப்பனியம் தலைவிரித்தாடிய 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

திருக்குறளை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் மனதில் அன்பும், பண்பும் , அறிவும் வளரும்.

எ.கா: தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக்கூலி தரும்.

இதில் கடவுளை நினைத்து நடக்கவில்லையென்றாலும் நீ உண்மையில் முயற்சிசெய்தால் நீ கண்டிப்பாக வெற்றிபெறுவாய் என்று வஞ்சிப்புகழ்ச்சி அணிபோல் மறைமுகமாக கடவுள்மறுப்பை நிலைநாட்டுகிறார் வள்ளுவர்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்..... 666

அசைவிலா மனத்தன்மை படைத்தவராக கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் நீ எண்ணிய செயலில் கண்டிப்பாக வெற்றி அடைவாய் என்று மனித இன முன்னேற்றத்தை மட்டுமே வள்ளுவம் வலியுறுத்தி வருகிறது.
-ஆழிக்கரைமுத்து

கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா..? - ஆழிக்கரைமுத்து

நமது மக்கள் இந்தக் கேள்வியை விடையில்லா கேள்வி என்பார்கள்..... பகுத்தறிவுக்கண்கொண்டு கண்டால் இவ்வுலகில் விடை இல்லாதது எதுவுமே இல்லை.
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் படிப்படியாகத் தோன்றின. இந்த பூமிப்பந்தானது கதிரவனிடம் இருந்து வந்தபொழுது கதிரவனைப்போல் மிகவும் வெப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு புவியின் மேல் பகுதி குளிர்ந்தது. உட்பகுதி வெப்பமாகவே இருந்தது. அந்த வெப்பமும் குளிரும் சேரும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகிறது. அதுவே முதல் உயிரின செல். இரண்டு எதிரெதிர் ஆற்றல்கள் இணையும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகும் என்பது உண்மை. ( (+ve) +(-ve) = energy). காலநிலை சுற்றுப்புற மாற்றங்களால் வெவ்வேறான உயிரினங்கள் தோன்றின.

அதில் ஒரு உயிரினம்தான் கோழியும். கோழியிலிருந்துதான் முட்டை வரமுடியும். கோழி ஒரு பெண் இனம். பெண் இனத்துக்கே படைக்கும் ஆற்றல் உண்டு.

உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் பெண் இனமே. பெண்களே இவ்வுலகை படைத்தவர்கள். ஆனால் நமது சமுதாயம் பெண்களை ஒடுக்கியே வருகின்றது. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அனைத்து மதங்களும் முன்னிலையில் நிற்கின்றன.

பெண்களும் அம்மதங்களில் மயங்கியே வாழ்ந்தூவருகின்றனர்.
பைபிளில் ஆதாமின் எலும்பிலிருந்து பெண்ணை கடவுள் படைத்தார் என்று அறிவிற்கு ஒவ்வாத கற்பனை கதை உள்ளது. பெண்களை அடிமைப்படுத்தவே அனைத்து மதங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. குரானிலும், பைபிளிலும் மற்றும் இந்து மத மனுதர்மத்திலும் பெண்ணை இழிவான பிறவியாகவே குறிக்கின்றன. இந்த உண்மையை அறியாதவரை பெண்கள் தங்கள் விடுதலையை அடையமுடியாது.

கடவுள் மத மூடத்தனங்களை என்று நம் பெண்கள் எதிர்த்துவெளியேறுகிறார்களோ அன்றுதான் பெண்கள் தங்கள் விடுதலையின் முதல்படியில் காலெடுத்து வைக்க இயலும்.

வரும் காலத்தில் ஆணின் உதவியில்லாமல் பெண்ணின் மேற்புறத்தோலில் இருந்தே ஆண் கருவை உருவாக்கி பெண்கருவுடன் இணைத்து குழந்தையை உருவாக்க இயலும் என்ற உண்மையை பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர்.

ஆண்களைவிட பெண்களே வலிமையுள்ளவர்கள் என்பதை உலகத்தின் பல பகுதிகளில் பெண்கள் நிரூபித்துவருகின்றனர். அதிலும் சிறப்பாக தமிழ் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துவருகின்றனர். ஆனால் நம் ஆணாதிக்க மதவாத மக்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

பெண்களே உங்கள் விடுதலை உங்கள் கைகளில்தான். உங்கள் விடுதலைக்கு நீங்கள்தான் போராட வேண்டும் எங்களால் உதவ மட்டுமே முடியும்.

பெண்கள் இட்ட பிச்சைதான் ஆண்கள்.

ஆதிபகவன் முதற்றே உலகு என்பது போல் பெண் முதற்றே இவ்வுலகு என்பதை விளங்கச்செய்வோம் இவ்வுலகுக்கு.
" ஒடுக்குமுறைகளை தகர்ப்போம் பெண்விடுதலையை வெல்வோம்"

Thursday, March 6, 2008

தமிழ் நீச பாசை-தமிழன் தீண்டத் தகாதவன்-தமிழகம் நீச நாடு-ஆழிக்கரைமுத்து

கோவிலுக்குள் தமிழுக்குத்தடை

தமிழனுக்கும் தடை

ஏனென்றால் தமிழ் நீச பாசை

சமசுகிருதம் தேவ பாசை


தமிழன் தீண்டத் தகாதவன்

பார்ப்பனன்(தீட்சிதன்) கடவுளுக்கும் மேலானவன்


ஆனால் கோவில் இருப்பதோ தமிழ்நாட்டில்.

கோவிலில் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் தேவகுற்றம்.


ஆனால் அதை விட பெரிய குற்றம்

இந்த நீச தமிழ்நாட்டில் கோவில் இருப்பதும்

தேவபார்ப்பனர்கள் இருப்பதும்.


சிந்திப்பீர் பார்ப்பனர்களே இந்த நீச நாட்டில் நீங்கள் இருப்பதும் கோவில் இருப்பதும் மிகப்பெரிய தேவகுற்றம் எனவே கோவில்களை இடித்துவிட்டு இந்த நீச தமிழ் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் விரைவில். நீங்கள் வெளியேறுவதற்குண்டான உதவிகளை இந்த நீச தமிழ்நாட்டின் எங்கள் முதல்வர் கலைஞர் அய்யா அவர்கள் செய்வார் நீங்கள் விரும்பினால்.

Sunday, March 2, 2008

மாவீரர் பகத்சிங்-கின் மர்ம மரணம் - ஆழிக்கரைமுத்து

ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய விடுதலை வீரர்கள் பகத்சிங், லோகியா , ராசகுரு & சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் 23 மார்ச் 1931. நாத்திகரான பகத்சிங்--கின் உண்மை வரலாற்றினை பார்ப்பனிய அரசாங்கம் மூடிமறைக்கிறது. அவரின் நான் ஏன் நாத்திகன்? என்ற புத்தகம் வரலாற்று சிறப்புமிக்கது.

தூக்கில் தொங்குவது இழுக்கென்றும் தன்னை துவக்கினால் சுட்டுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தூக்கில்தான் போடுவேன் என்றது ஆங்கிலேய அரசு.

அதை போல் தூக்கில் போட்டது ஆங்கில அரசு. அந்நேரத்தில் தூக்கில் போட்டு பகத்சிங் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாக இல்லை. சில திங்கள்களுக்கு முன்பு ஒரு இதழில் பகத்சிங் மரணம் பற்றிய ஒரு ஆங்கில புத்தகத்தைப் பற்றிய கட்டுரையை படித்தேன். அதை எழுதியவர் பகத்சிங்-ன் மரணம் வரை உடன் இருந்த ஒரு ஆங்கில காவல் அதிகாரியின் பெயரன்.

அந்த புத்தகத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டுக்கொல்லப்படவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஆண்டர்சன் என்பவரை பகத்சிங் & நண்பர்கள் கொன்றனர். எனவே ஆண்டர்சனின் துணைவியார் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டர்சனின் துணைவியாரின் கையால் துவக்கினால் (GUN) பகத்சிங் சுட்டுக்கொள்ளப்பட்டார். இது மக்களுக்கு தெரிந்தால் கலகம் பெரிதாக வரும் என்பதால் பகத்சிங்-கின் உடலினை மக்களுக்கு தராமல் நதிக்கரையின் ஓரத்தில் வைத்து எரித்து சாம்பல் ஆக்கிவிட்டனர். என்ற தகவல்கள் அந்த நூலில் உள்ளதாக அக்கட்டுரையில் வருகிறது.

"பிள்ளையார் சுழி" - ஆழிக்கரைமுத்து

ஆதி காலத்தில் நமது முன்னோர்கள் எழுதுவதற்கு ஓலைச்சுவடிகளை பயன்படுத்தினார்கள்.பனை ஓலையை வெட்டி காய வைத்து கோர்த்து பயன்படுத்தினார்கள். பனை ஓலையை எழுதுவதற்கு ஏற்றதுபோல் பதப்படுத்தினார்கள். இப்படி பதப்படுத்திய ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றதா இல்லை ஓலை தாறுமாறாக கிழிந்துவிடுமா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் எழுதுவது வீணாகிவிடும்.
நாம் எழுதுவதை நல்லபடியாக எழுதி முடிக்க தொடக்கத்தில் ஓலையின் தன்மையை சோதிக்க வேண்டும். "உ" என்று ஓலையில் எழுதும்பொழுது ஓலை கிழிந்தால் அந்த ஓலை பயனற்றது என எளிதில் தெரிந்துக்கொள்ளலலம். "உ" என்ற எழுத்தில் அனைத்துக்கோணங்களும் அமைவதால்( வளைவுகள், நேர்கோடு) இந்த எழுத்தினை ஓலையில் எழுதினால் ஓலையின் தரமானது என்ன என்பதையும் தொடங்கிய எழுத்தினை நல்லபடியாக முடிக்கமுடியுமா என்று அறிய முடியும் என்ற அறிவின் கண்ணோட்டத்தில் நம் முன்னோர்கள் "உ"(பிள்ளையார் சுழி) எனப்தை பயன்படுத்தினார்கள்.
ஆனால் பகுத்தறிவற்ற நம் மக்கள் இன்னும் இந்த காலத்திலும் பயன்படுத்திவருகின்றனர். ஆரிய தாக்கத்தினால் "பிள்ளையார் சுழி" என்ற பெயரும் வந்துவிட்டது. ஓலைச்சுவடிகளை அருங்காட்சியகத்தில் பாருங்கள் உண்மை புரியும்.. பகுத்தறிவின் கண்கொண்டு காண்போம் இந்த உலகத்தை.

எனது முதல் வலைப்பூ -ஆழிக்கரைமுத்து

வணக்கம் நண்பர்களே,

பல எழுத்தாளர்கள் இருக்கும் இந்த வலைப்பூக்களில் நானும் எழுதலாம் என இதை உருவாக்கியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்தைக்கூறவும்.

எனக்கு எழுதி பழக்கமில்லை படித்துதான் பழக்கம். எனவே ஏதேனும் எனது எழுத்துக்களில் தவறிருந்தால் பொருத்தருளவும்.

இது எனது முதல் வலைப்பூ. எனவே "பிள்ளையார் சுழி" போட்டு ஆரம்பிக்கிறேன்.

காகிதத்தில் எழுதும்பொழுது நமது மக்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்கள். இந்தக் கணினி காலத்திலும் இது தொடருகிறது. "உ" ஏன் போடுகிறார்கள் என கேட்டால். எழுதுவது நல்லபடியாக அமைய "உ" என்பர்.

"உ" போட்டு ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்ற தேடலில் நான் அறிந்தை இங்கு முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.