நமது மக்கள் இந்தக் கேள்வியை விடையில்லா கேள்வி என்பார்கள்..... பகுத்தறிவுக்கண்கொண்டு கண்டால் இவ்வுலகில் விடை இல்லாதது எதுவுமே இல்லை.
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் படிப்படியாகத் தோன்றின. இந்த பூமிப்பந்தானது கதிரவனிடம் இருந்து வந்தபொழுது கதிரவனைப்போல் மிகவும் வெப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு புவியின் மேல் பகுதி குளிர்ந்தது. உட்பகுதி வெப்பமாகவே இருந்தது. அந்த வெப்பமும் குளிரும் சேரும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகிறது. அதுவே முதல் உயிரின செல். இரண்டு எதிரெதிர் ஆற்றல்கள் இணையும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகும் என்பது உண்மை. ( (+ve) +(-ve) = energy). காலநிலை சுற்றுப்புற மாற்றங்களால் வெவ்வேறான உயிரினங்கள் தோன்றின.
அதில் ஒரு உயிரினம்தான் கோழியும். கோழியிலிருந்துதான் முட்டை வரமுடியும். கோழி ஒரு பெண் இனம். பெண் இனத்துக்கே படைக்கும் ஆற்றல் உண்டு.
உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் பெண் இனமே. பெண்களே இவ்வுலகை படைத்தவர்கள். ஆனால் நமது சமுதாயம் பெண்களை ஒடுக்கியே வருகின்றது. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அனைத்து மதங்களும் முன்னிலையில் நிற்கின்றன.
பெண்களும் அம்மதங்களில் மயங்கியே வாழ்ந்தூவருகின்றனர்.
பைபிளில் ஆதாமின் எலும்பிலிருந்து பெண்ணை கடவுள் படைத்தார் என்று அறிவிற்கு ஒவ்வாத கற்பனை கதை உள்ளது. பெண்களை அடிமைப்படுத்தவே அனைத்து மதங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. குரானிலும், பைபிளிலும் மற்றும் இந்து மத மனுதர்மத்திலும் பெண்ணை இழிவான பிறவியாகவே குறிக்கின்றன. இந்த உண்மையை அறியாதவரை பெண்கள் தங்கள் விடுதலையை அடையமுடியாது.
கடவுள் மத மூடத்தனங்களை என்று நம் பெண்கள் எதிர்த்துவெளியேறுகிறார்களோ அன்றுதான் பெண்கள் தங்கள் விடுதலையின் முதல்படியில் காலெடுத்து வைக்க இயலும்.
வரும் காலத்தில் ஆணின் உதவியில்லாமல் பெண்ணின் மேற்புறத்தோலில் இருந்தே ஆண் கருவை உருவாக்கி பெண்கருவுடன் இணைத்து குழந்தையை உருவாக்க இயலும் என்ற உண்மையை பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர்.
ஆண்களைவிட பெண்களே வலிமையுள்ளவர்கள் என்பதை உலகத்தின் பல பகுதிகளில் பெண்கள் நிரூபித்துவருகின்றனர். அதிலும் சிறப்பாக தமிழ் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துவருகின்றனர். ஆனால் நம் ஆணாதிக்க மதவாத மக்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.
பெண்களே உங்கள் விடுதலை உங்கள் கைகளில்தான். உங்கள் விடுதலைக்கு நீங்கள்தான் போராட வேண்டும் எங்களால் உதவ மட்டுமே முடியும்.
பெண்கள் இட்ட பிச்சைதான் ஆண்கள்.
ஆதிபகவன் முதற்றே உலகு என்பது போல் பெண் முதற்றே இவ்வுலகு என்பதை விளங்கச்செய்வோம் இவ்வுலகுக்கு.
" ஒடுக்குமுறைகளை தகர்ப்போம் பெண்விடுதலையை வெல்வோம்"
1 comment:
யார் சொன்னது? கோழியா? முட்டையா? எது முதலிலை வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று?
கொஞ்சம் அறிவியல் ரீதியாக சிந்திக்கவேண்டும்.
இந்த கேள்வியே அடிப்படையில் பிழையென்பது உங்களுக்கு தெரியுமா?
கோழி முட்டை உருவாகும்போதே கோழியில் ஆரம்பம் தொடங்கிவிட்டது.
கோழியில் வாழ்க்கைவட்டத்தில் கோழி முட்டை உருவாக்கமே ஆரம்பம்.
ஏதோ கோழியா முட்டையா என்று கேட்டுவிட்டு இரு வேறு பொருட்களாக கருத முடியாது.
கோழியிலிருந்து முட்டை வருகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லையே.
முட்டை தானே கோழியாக மாறுகின்றது.
இதை இலகுவாக விளங்கிக்கொள்ளவேண்டுமாயின் உயிரியல் பரிணாமத்தை படியுங்கள்.
உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதாயின். முட்டை தான் முதலிலே வந்தது. ஆனால் அடிப்படையில், கேள்வி பிழை.
Post a Comment