Sunday, March 2, 2008

"பிள்ளையார் சுழி" - ஆழிக்கரைமுத்து

ஆதி காலத்தில் நமது முன்னோர்கள் எழுதுவதற்கு ஓலைச்சுவடிகளை பயன்படுத்தினார்கள்.பனை ஓலையை வெட்டி காய வைத்து கோர்த்து பயன்படுத்தினார்கள். பனை ஓலையை எழுதுவதற்கு ஏற்றதுபோல் பதப்படுத்தினார்கள். இப்படி பதப்படுத்திய ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றதா இல்லை ஓலை தாறுமாறாக கிழிந்துவிடுமா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் எழுதுவது வீணாகிவிடும்.
நாம் எழுதுவதை நல்லபடியாக எழுதி முடிக்க தொடக்கத்தில் ஓலையின் தன்மையை சோதிக்க வேண்டும். "உ" என்று ஓலையில் எழுதும்பொழுது ஓலை கிழிந்தால் அந்த ஓலை பயனற்றது என எளிதில் தெரிந்துக்கொள்ளலலம். "உ" என்ற எழுத்தில் அனைத்துக்கோணங்களும் அமைவதால்( வளைவுகள், நேர்கோடு) இந்த எழுத்தினை ஓலையில் எழுதினால் ஓலையின் தரமானது என்ன என்பதையும் தொடங்கிய எழுத்தினை நல்லபடியாக முடிக்கமுடியுமா என்று அறிய முடியும் என்ற அறிவின் கண்ணோட்டத்தில் நம் முன்னோர்கள் "உ"(பிள்ளையார் சுழி) எனப்தை பயன்படுத்தினார்கள்.
ஆனால் பகுத்தறிவற்ற நம் மக்கள் இன்னும் இந்த காலத்திலும் பயன்படுத்திவருகின்றனர். ஆரிய தாக்கத்தினால் "பிள்ளையார் சுழி" என்ற பெயரும் வந்துவிட்டது. ஓலைச்சுவடிகளை அருங்காட்சியகத்தில் பாருங்கள் உண்மை புரியும்.. பகுத்தறிவின் கண்கொண்டு காண்போம் இந்த உலகத்தை.

2 comments:

Unknown said...

வாங்க வாங்க...

பகிர்வுக்கு நன்றி

நாம் எழுதுவதை நல்லபடியாக எழுதி முடிக்க தொடக்கத்தில் ஓலையின் தன்மையை சோதிக்க வேண்டும். "உ" என்று ஓலையில் எழுதும்பொழுது ஓலை கிழிந்தால் அந்த ஓலை பயனற்றது என எளிதில் தெரிந்துக்கொள்ளலலம்

கருப்பன் (A) Sundar said...

எங்கோ படித்த கதை...

ஒரு முனிவர் தவம் செய்யும் போது அவரது வளர்ப்பு பூனை அடிக்கடி தொந்தரவு செய்யுமாம். அதனால் தவம் செய்வதற்கு முன் அந்த பூனையை பக்கத்திலிருக்கும் தூணில் கட்டிப்போட்டுவிடுவாரம். அவர் இறந்தபிறகு அவரது சிஷ்யர்கள் தவம் செய்வதற்கு முன்பு ஒரு பூனையை அருகில் கட்டிப்போடுவது சாஸ்திரம் என்று நினைத்து, தவம் செய்வதற்கு முன் ஒரு பூனையை பிடித்துவந்து தூணில் கட்டுவார்களாம்!!

நாம் பின்பற்றும் பல சாஸ்திரங்கள் இவ்வாறு உருவானவைதாம்!!