ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய விடுதலை வீரர்கள் பகத்சிங், லோகியா , ராசகுரு & சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் 23 மார்ச் 1931. நாத்திகரான பகத்சிங்--கின் உண்மை வரலாற்றினை பார்ப்பனிய அரசாங்கம் மூடிமறைக்கிறது. அவரின் நான் ஏன் நாத்திகன்? என்ற புத்தகம் வரலாற்று சிறப்புமிக்கது.
தூக்கில் தொங்குவது இழுக்கென்றும் தன்னை துவக்கினால் சுட்டுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தூக்கில்தான் போடுவேன் என்றது ஆங்கிலேய அரசு.
அதை போல் தூக்கில் போட்டது ஆங்கில அரசு. அந்நேரத்தில் தூக்கில் போட்டு பகத்சிங் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாக இல்லை. சில திங்கள்களுக்கு முன்பு ஒரு இதழில் பகத்சிங் மரணம் பற்றிய ஒரு ஆங்கில புத்தகத்தைப் பற்றிய கட்டுரையை படித்தேன். அதை எழுதியவர் பகத்சிங்-ன் மரணம் வரை உடன் இருந்த ஒரு ஆங்கில காவல் அதிகாரியின் பெயரன்.
அந்த புத்தகத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டுக்கொல்லப்படவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஆண்டர்சன் என்பவரை பகத்சிங் & நண்பர்கள் கொன்றனர். எனவே ஆண்டர்சனின் துணைவியார் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டர்சனின் துணைவியாரின் கையால் துவக்கினால் (GUN) பகத்சிங் சுட்டுக்கொள்ளப்பட்டார். இது மக்களுக்கு தெரிந்தால் கலகம் பெரிதாக வரும் என்பதால் பகத்சிங்-கின் உடலினை மக்களுக்கு தராமல் நதிக்கரையின் ஓரத்தில் வைத்து எரித்து சாம்பல் ஆக்கிவிட்டனர். என்ற தகவல்கள் அந்த நூலில் உள்ளதாக அக்கட்டுரையில் வருகிறது.
3 comments:
இதுவரையிலும் கேள்விப்படாத புதிய தகவலாக இருக்கிறதே..?
பை தி பை.. வலையுலகத்திற்கு அறிமுகமாயிருக்கும் உங்களை வரவேற்கிறேன்.. வாழ்த்துகிறேன்..
பட்டாசா ஆரம்பிச்சிருக்கீங்க, கலக்குங்க
ஆஹா ஆரம்பமே அதிரடியா இருக்கே மாமா.
வலையுலகத்திற்கு நல்வரவு.
இந்த வேர்டு வெரிபிகேசனை தூக்கிப்போடுங்கள்
Post a Comment