Saturday, October 4, 2008

தமிழினத்துரோகிகள்

இராமேசுவரப்பகுதியில் சிங்கள அரச பயங்கரவாதிகளோடு இந்திய அரசானது இணைந்து கூட்டு ரோந்து என்ற ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அனைத்து மக்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இந்து மீ.கி. வீரமணி அவர்களின் ஒரு பேட்டியை தினத்தந்தி நாளிதழில் காண நேர்ந்தது. ஆளும்கட்சியினை துதி பாடுவதையே தொழிலாகக் கொண்ட அவர் "இராமேசுவரம் பகுதியில் இந்திய இலங்கை இராணுவ கூட்டு ரோந்து வரவேற்கத்தக்கது " என்று பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடைக்கோடித்தமிழனுக்கும் இக்கூட்டு ரோந்தினால் எப்படிப்பட்ட தீமை என்பது தெளிவாக தெரியும். தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட இவருக்கு இதைப்பற்றிய உண்மைகள் தெரியாதா....?


தெரிந்தாலும்தான் என்ன சொல்லபோகிறார் நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்று கூறிவிடுவார் இன்னும் தன்னை இந்து என்று பதிவு செய்துகொண்டிருக்கும் இந்து மீ.கி.வீரமணி அவர்கள்.

இவர் மட்டுமல்ல இவருக்கு ஜால்ரா போட இவரது பெயரை தனது பிள்ளைகளுக்கு பெயராக சூட்டிய வீரமணி பற்றாளர்களும்(ஜால்ராக்களும்) அப்பெயரை கொண்டவர்களும் அவரைப்போலவே ஜால்ராக்களாகவும் பெரியாரை விளம்பரத்துக்காக பயன்படுத்துபவர்களாகவுமே உள்ளனர். சங்கராச்சாரியாரை விடக்கேவலமாக பேசிக்கொண்டு பெரியாரிய பெண்ணிய வேடமிட்டுக்கொண்டு பல தமிழின துரோகிகள் உள்ளனர். இவர்களையெல்லாம் களையெடுக்காமல் நமது போராட்டம் முற்றுப்பெறாது.

1 comment:

sharan said...

உங்கள் ஆதங்கம் மிகச் சரியானதே.மற்றும்
ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளையும்,

என்னமோ தமிழில் திரைப்படங்களே இல்லாதது போல், ஆங்கில படத்தை தமிழில் மாற்றி விடுவதையும்,

அறிவையும்,அறனையும் விட்டு விட்டு, ஆபாசத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு நடத்தும் நிகழ்ச்சிகளையும்,

கண்டிக்க தவறிவிட்டீர்களே!!!

நன்றி.