Thursday, October 30, 2008

ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்

ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்

அன்புள்ள மாமா அறிவது நான் நலம், நீங்கள் சுகமாய் இருக்க இறைவன் அருள் புரிவாராக,

மேலும்,

மாமா கண்ணி வெடியில இல்லாம போன உங்களின் கால் எப்படி இருக்கு?.... மருந்து செய்யிறீங்களா?... உங்கள பாக்கிறக்கும் யாரும் இல்லை. எப்படி மாமா இருக்கிறீங்கள்? உங்களை நினைச்சு அம்மம்மாக்கு ஒரே வருத்தம். மாமா நான் இப்ப அம்மம்மாக்களோட தான் இருக்கிறன். அப்பாவும் அம்மாவும் இடம்பெயர்ந்து வேற எங்கயோ இருக்கினம்.

மாமா என்னால இங்க இருக்கேலாது. பள்ளிக்கூடம் போறேல்ல. எனக்கு படித்து பெரிய ஆளா வரணும் என்று ஆசையா இருக்கு. நாங்கள் ஒரு கிழமையா பதுங்கு குழிக்குள்ள தான் இருக்கிறம். சாப்பிட்டு ஜஞ்சு ஆறு நாள் ஆகுது மாமா. கடைக்கு போகேலாது அதுக்குள்ள கிபிர் வந்திரும். எனக்கு தங்கச்சியை பாக்கணும் போல இருக்கு.

கிபிர் வருது மாமா எங்க அடிக்கிறாங்களோ தெரியாது! இப்ப கிபிர் போடுற குண்டு எங்கட பதுங்கு குழிக்குள்ள வந்து வெடிக்குமாம். அதில பட்டா நாங்கள் எல்லாரும் எரிஞ்சு தான் சாவமாம். எனக்கு நினைக்கவே பயமா இருக்கு மாமா. இப்பவே என்னை வந்து கூட்டிகொண்டு போங்கோ. நீங்க இப்ப வராட்டி, நீங்க வரேக்க நான் உயிருடன் இருப்பனோ தெரியாது.

மாமா நீங்கள் வரும் வரை நான் பதுங்கு குழிக்குள்ள சாப்பிடாம இருப்பன். கெதியா வாங்கோ வரேக்க சாப்பாடு கட்டி வாங்கோ..

இப்படிக்கு மருமகன்
சர்மிளன்

நான் படித்த இடம் : http://www.mgr.mywebdunia.com/2008/10/30/1225364820000.html

No comments: