Monday, October 20, 2008

தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - CPI(M)



பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம்.

நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும் இணைக்கும் கைக்கூலி பார்ப்பான் சிறீலங்கா இரத்னா விருது பெற்ற இந்து இராம்.

தந்தை பெரியார் அன்றே சொன்னார் கன்னியாகுமரியில் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் காசுமீர் பார்ப்பானுக்கு வலிக்கும் என்று.
அதைப்போல் இங்குள்ள தமிழின எதிரி பார்ப்பான் CPI ( M) கட்சியின் இந்து இராமை கண்டித்தால் சிங்களவனுக்கும் இங்குள்ள போலி கம்யூனிசு CPI(M) க்கும் வலிக்கிறது.

என்னவொரு ஒற்றுமை இலங்கையிலே சிங்களவர்கள் என்றால் தமிழ்நாட்டிலே நாங்கள் இருக்கிறோம் என்று பார்ப்பன இந்திய மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சி வெளிப்படுத்திவருகிறது.

சிங்கள JVP மற்றும் அனைத்து சிங்கள் பார்ப்பனிய அமைப்புகளே நீங்கள் கவலைப்படாதீர்கள் தமிழகத்திலே உங்களுக்கு நாங்கள் துணை இருக்கிறோம் இங்குள்ள cpi(m) கட்சி கொக்கரிக்கிறது.

தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறை , காவிரி நீர், முல்லைப்பெரியாறு, பாலாறு போன்றவைகளும் ஏனைய துறைகளும் வாழ்வாதரங்களும் தமிழர்களுக்கு கிடைக்காதவண்ணம் தடுத்து நாங்கள் தமிழர்களை பட்டினியாலும் பசியாலும் வேலையின்மையாலும் கொன்று குவிக்கிறோம். நீங்கள் ஆயுதங்களாலும், அணு ஆயுதங்களாலும் தமிழர்களை கொல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு மறைமுகமாக உதவுகிறோம். நாங்கள் இங்கு தமிழர்களை சிந்திக்கவிடாமல் கம்யூனிசத்தால் குழப்பிவிட்டு இவர்களை நாங்கள் கொல்லுகிறோம்.

--இதுவே இங்குள்ள CPI(M) மற்றும் CPI-ML(SOC) யின் மனசாட்சி.

தீக்கதிரில் வந்த கட்டுரை :

இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம் சென்னை, அக். 19 -

இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.

எனது கட்டுரையை வெளியிட்ட தமிழ்வின் தளத்துக்கு நன்றி

No comments: