இன்று காலை மஞ்சள் பத்திரிக்கையான தினமலர் நாளிதழ் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு தலைப்பு எனது கண்ணில் தனியாக தென்பட்டது. என்னவென்று பார்த்தால் "சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"...
மார்க்சிடு கம்யூனிசுடு கட்சிகளைத்தான் நாம் பூணூல் போட்ட பார்ப்பான் என்று கூறிவந்தோம். இப்பொழுது CPI போன்றவைகளும் நாங்களும் மார்க்சுடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை நிரூபித்து பார்ப்பனியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உலகமக்கள் அனைவருக்குமே தெரியும் இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்று. இந்தியப்பிரதமர் பார்ப்பனரான நேரு அவர்கள் கூட தனது மகள் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "இராமாயணம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்த ஆரியர்கள் எழுதிய ஆரிய-திராவிடர் போராட்டத்தின் கற்பனைக்கதையே" என்றுக்கூறியுள்ளார்.
சரி மார்க்சியக்கோட்பாட்டின்படி பார்த்தால் இராமாயணம் என்பதை எப்படி கூறுவது?
சக்தி பூஜையில் குதிரையின் மூலம் பிறந்தவந்தான் இராமன் என்று தொடக்கமே ஆபாசமாகவும் அறிவுக்கும் ஒவ்வாததுமாக இருக்கிறது. மார்க்க்சியம் என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து உண்மையை அறி என்பது . கருத்து முதல்வாதம் , பொருள்முதல்வாதம் என்று மக்களை குழப்பும் கம்யூனிசுடு கட்சிகளே முதலில் உங்களுக்கு கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் பற்றித்தெரியுமா?
தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி பேசமாட்டீர்கள்.
தினமலர் நாளிதழில் வந்த செய்தி:
"சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"
கோவை:அரசு அலுவலகங்களின் செயலற்ற, லஞ்ச நிர்வாகங்களால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதிகளின் கையிலும், 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.
கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட வக்கீல் சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் கனகராஜ், பொருளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோவை எம்,பி., சுப்பராயன் பேசியதாவது: உலகப் பெருங்காவியங்களில் சிறந்த, போற்றத்தக்க காவியம் ராமாயணம். இதை இயற்றிய வால்மீகி, தன் சிஷ்யர்களிடம், "மிகச்சிறந்த, தனக்கு பிடித்த தவம் சகிப்பு' என்றார். இது தான் இன்றைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாராம்சம். எந்த மதத்தினருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் சட்ட வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்திய அரசியல் அமைப்பில், சட்டம் இயற்றும் குழு, நீதி பரிபாலனம், நிர்வாகம் ஆகியன ஜனநாயகத்தில மூன்று முக்கிய தூண்கள். ஆனால், இந்த மூன்றும், இந்தியாவில் இப்போது அழுகிக் கொண்டிருக்கின்றன.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாநில அரசில், சமீபத்தில் பதவியேற்ற அமைச்சர்களில் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என, 40 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தான் சட்டம் இயற்றும் மேதைகளாக, சட்ட அங்கம் வகிக்கின்றனர்.ஒரு எம்.பி., தனது 10 கைவிரல்களிலும் தங்க மோதிரம் போட்டு வருகிறார். இன்னொருவர் கீழே குனியும் போது அவர் கழுத்திலிருந்து, கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் "வடக்கயிறு' வடிவத்தில் தங்கச் செயின் கீழே விழுகிறது. மக்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் மதிக்கப்படுகின்றனர்.
இப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொது மக்களின் பெட்டிஷன்களை யாரும் படிப்பதில்லை. இதனால், புதியவர்கள் சொல்லும் கருத்துக்களை மக்கள் கூர்த்து கவனிக்கின்றனர். நிர்வாக திறமையற்ற தன்மையால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதத்தின் கையில் உள்ளன. அதேபோல 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு காரணம், மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் சிதறிக் கிடக்கின்றனர். பொதுமக்கள் ஒன்று பட்டால் மட்டுமே நாட்டின் அவலங்களுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்."
நன்றி : தினமலர்
http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Coimbatore&ncat_ta=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#88900
3 comments:
//***
இராமாயணம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்த ஆரியர்கள் எழுதிய ஆரிய-திராவிடர் போராட்டத்தின் கற்பனைக்கதையே
***//
இது தெரிந்தும் வடிகெட்டின முட்டாள் தமிழ் மக்கள் இராமன்(வாலியை புறமுதுகில் கொன்ற கோழை), அனுமன் போன்றவர்களை வணங்குகிறார்களே
hi,
visit my blog.
this is a big list. keep exposing. best wishes
Post a Comment