Saturday, October 4, 2008

ஈழப்பிரச்சினையில் தமிழக மார்க்சிசுடுகளின் பார்ப்பனியம்

1) நம்மைப்பொறுத்த வரை CPI என்பது பூணூல் போடாத பார்ப்பான், CPI ( M) என்பது பூணூல் போட்ட பார்ப்பான்.

என்ன ஆனாலும் தன் பார்ப்பனியத்தை பார்ப்பான் விட்டுவிடமாட்டான் என்பதற்கு இங்குள்ள இப்படிப்பட்ட போலி மார்க்சிசுடுகளே உதாரணமாக கூறலாம்.

CPI பார்ப்பனர்க்களுக்காவது மனதில் ஈரம் இருக்கிறது. ஆனால் CPI(M) என்பது மார்க்சிய வேடமிட்ட பார்ப்பான் என்பதை பலமுறை நிரூபித்துவருகிறது.

உதாரணமாக கோவையில் நடைபெற்ற சேலம் தொடர்வண்டி கோட்ட பிரச்சினையில் தி.மு.க, அ.தி.மு.க., இ.பொ.க,, பா.ம.க, வி.சி... மற்றும் அனைத்து பார்ப்பனரல்லாத கட்சிகளும் பெரியார் திராவிடர்கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கட்சி பேதமின்றி அனைவரும் தமிழர் என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆனால் இங்குள்ள CPI(M) ஆனது கேரள பார்ப்பனர்களோடு இணைந்து இவர்களின் போராட்டத்தை எதிர்த்தது. மேலும் காவிரி நீர் பிரச்சினை , முல்லைபெரியாறு பிரச்சினை , பாலாறு பிரச்சினை போன்ற தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களைப்பற்றி இது வரை CPI(M) என்ற மார்க்சிய முகமூடி அணிந்த பார்ப்பனர்கள் இதுவரை பேசியதில்லை.

மேலும் ஆண்டுதோறும் CPI(M) நடத்தும் கட்சி மாநாடுகளில் ஈழமக்களை வேட்டையாடும் மிருகமான சிங்கள பார்ப்பனக்கட்சியான JVP க்கு தவறாமல் அழைப்பு உண்டு. தவறாமல் கலந்துகொள்வார்கள் சிங்களப்பார்ப்பனர்களும் இவர்களின் மாநாடுகளில்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக தனது நாளிதழ்களில் சிங்கள அரச பயங்கரவாததிற்கு ஆதரவாக எழுதிவரும் இந்து இராம் ..ஐ மிகவும் தூக்கிப்பிடிப்பார்கள் இப்பார்ப்பன CPI(M) கட்சியினர். அவர்களின் மாணவரணியான இந்திய மாணவர் சங்கத்தில் தலைவராக இந்து இராம் இருந்த காலம் தொட்டே தனது பார்ப்பனியத்தினை தவறாமல் கடைப்பிடித்துவருவதால்.

சில கிழமைகளுக்கு முன்பு ஒரு கிழமை இதழில் " மார்க்சிசுடு கம்யூனிசுட் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் சிங்கள JVP யுடன் இணைந்து செயல்படலாம் " என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று வந்துள்ளது.

சிங்கள பார்ப்பனர்களுக்கும் இங்குள்ள பார்ப்பன CPI(M) க்கும் தூதராக செயல்படுவது சிங்கள இரத்தினா என்ற விருது பெற்ற இந்து இராம்.


செஞ்சோலையிலே குழந்தைகளை சிங்கள அரசபயங்கரவாதிகள் கொன்ற பொழுதும் CPI(M) சிங்களர்களுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.

ஆனால் இ.பொ.க. வின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சிங்கள அரசைக்கண்டித்து சென்னை சிங்கள உளவுப்பிரிவு அலுவலம் (தூதரகம்) முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்திகைதானார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள இ.பொ.க.(CPI) ஆனது சிறிதளவாவது மனதில் ஈரமிருக்கிறது ஆனால் CPI(M) மோ தன் பார்ப்பனியத்திமிரை சிறிதளவும் கைவிடாமல் தான் ஒரு பார்ப்பான் என்பதை வெளிக்காட்டிவருகின்றனர்.

2) CPI மற்றும் CPI(M) போன்ற இரண்டுக்கட்சிகளையும் போலி கம்யூனிசுடுகள் என்றுக்கூறி தான் தான் உண்மையான கம்யூனிசுடு என்று பீற்றிக்கொள்ளும் CPI(ML)(SOC) என்ற பார்ப்பனிய அமைப்பானது பிராச்ன்சில் வசிக்கும் ஈழத்துரோகி பி.இராயகரன் என்பவருடன் இணைந்து கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் CPI(M) பார்ப்பனர்களுக்கும் ஒருபடி மேலாக சென்று அங்குள்ள போராளிகள் ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகூலிகள் கடற்கொள்ளைக்காரர்கள் பாசிசுடுகள் என்றும் ஒரு மக்களின் விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

"தமிழீழமக்கள் அமெரிக்காவில் நடத்திய விளையாட்டுப்போட்டி மைதானத்தில் அவர்களின் கொடியினை விட பெரியதாக சிவப்பாக கோகோ கோலாவின் விளம்பரம்தான் கண்ணுக்கு தெரிகிறது, அவர்கள் அமெரிக்காவின் கைகூலிகள்" என்று பி.இராயகரன் எழுதுகிறார் அதை இவர்களின் புதிய கலாச்சாரம் , புதிய ஜனநாயகம் வெளியிடுகிறது.

போலிப்பார்ப்பனர்களே நீங்கள் கூடத்தான் உங்கள் நிகழ்ச்சிகளை கடவுளர் படங்களும் பெப்சி கோகோ கோலா படங்களும் மாட்டப்பட்ட அரங்குகளில் நடத்துகிறீர்கள்.

அவர்கள் விளையாட்டுப்போட்டி நடத்திய மைதானம் அமெரிக்காவில் , அந்த மைதான உரிமையாளர் அவர் விருப்பப்படி கோகோ கோலாவோ பெப்சியோ யாரிடமும் விளம்பரம் வாங்கிபோடலாம்.
அந்த அரங்கில் வாடகைக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துபவர்கள் ஈழமக்கள், உரிமையாளர் அமெரிக்கர் என்ற ஒரு சிறு அறிவு கூட இல்லாதவர்களா நீங்கள்?

ஆயுதப்போராட்டமே தீர்வு என்று வாய் கிழியக்கத்தியும் மதில்களில் எழுதியும் வரும் பார்ப்பனர்களே இது வரை ஒருமுறையாவது ஈழமக்களின் விடுதலைக்கு என்ன தீர்வென்று பேசியுள்ளீர்களா?

நீங்கள் பேச மாட்டீர்கள் ஏனென்றால் உங்கள் தலைவர் மருதையன் என்ற அய்யங்காரன் ஒரு பார்ப்பான் தானே.


குறிப்பு:

CPI(ML)(SOC) என்பது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பதன் உண்மையான பெயர். COMMUNIST PARTY OF INDIA (MARXIST LENINIST)(STATE ORGANISATAION COMMITTEE)
ம.க.இ.க.வின் தலைவர் மருதையன் என்பது ஒரு புனைப்பெயர்தான். அவர் ஒரு பார்ப்பனர்தான். அவரின் உண்மையான பெயர் ஒரு பார்ப்பனபெயர்தான்.

தொடரும்....

6 comments:

கலை said...

//"தமிழீழமக்கள் அமெரிக்காவில் நடத்திய விளையாட்டுப்போட்டி மைதானத்தில் அவர்களின் கொடியினை விட பெரியதாக சிவப்பாக கோகோ கோலாவின் விளம்பரம்தான் கண்ணுக்கு தெரிகிறது, அவர்கள் அமெரிக்காவின் கைகூலிகள்" என்று பி.இராயகரன் எழுதுகிறார் அதை இவர்களின் புதிய கலாச்சாரம் , புதிய ஜனநாயகம் வெளியிடுகிறது.//

இந்த இராயகரன் யார்? இவர் கூட்டாளி சிறிரங்கன் யார்? இவர்கள் தான் ஈழத்தின் மேட்டுக்குடிகள், அசல் வெள்ளாள திமிரின் வெளிப்பாடுகள். இந்தியாவில் பார்பனர்கள் எவ்வகையில் உயர்ந்த சாதியோ அதே போல் ஈழத்தில் வெள்ளாளன் உயர்ந்தவன். ஆதிக்கம் செலுத்துபவன். பர்பனனுக்கு பூனூலும் பூஜா பண்ணுவதும் ஆயுதம் என்றால் ஈழத்து வெள்ளாள கொம்புகளுக்கு வாய்ப்பேச்சும் வசைபாடுதலும் ஆயுதம். இந்த வசைபாடுதல் என்பது இரயாகரனிடம் குறைவில்லாத சொத்தாக இருக்கின்றது.

ஈழத்தில் ஏழை மக்கள், பாட்டாளிகள் வெள்ளாள ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் போராட வேண்டியிருந்தது. இது தான் யதார்த்தம். நேரடியாக சொல்வதென்றால் இந்த இரயாகரன் கும்பலுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. இவரே பொதுவுடமை பேசினால் யாருக்கு எதிராக யாரு போராடுவது?

வெள்ளாளக் குணம் என்பது மற்றவனை வாயாடல் வசைபாடலால் தாழ்த்துவது. அப்போது தான் அவனுக்கு தன்னை மேலானவன் என்று நிறுவ முடியும். பார்பனனைபோல் நீண்ட மூக்கும் பூணூலும் வெள்ளைத்தோற்றமும் இவர்களுக்கு இல்லை. எனவே வசைபாடுதல், தராம் தாழ்த்தி பேசுதல், நய்யப்புடைத்தல், எப்போதும் அடுத்தவனில் குறைகாணுதல் எல்லாம் இவர்களின் பலம்மிக்க ஆயுதங்கள். இராயாகரனின் கட்டுரைகளில் இந்த தன்மை அற்ற ஒரு கட்டுரையை எடுத்துக்காட்ட முடியாது. சிங்கள அரசின் கொடுமைகளை தவிர்த்து தமிழர் தரப்பில் குறைகாணுவதை தொழிலாக ஆன்ம இயக்கமாக கொண்டுள்ள இந்த கூட்டத்தின் அடித்துடிப்பு வெள்ளாள ஆதிக்க துடிப்பின் வெளிப்பாடே அன்றி வேறெதுவும் இல்லை. புதிய ஜனநாயகமும் சரி, புதிய கலாச்சாரம், மகஇக இவர்களுக்கு ஈழத்தின் உண்மையான ஆதிக்கம் அதன் செயற்பாடுகள் என்ன என்பது குறித்த தெளிவில்லை என்பதாலே இராயாகரன் போன்றவர்களுக்கு ஜால்ரா போடுகின்றார்கள்.

தேவன் said...

ஆழமான பார்வையின் வெளிப்பாடு உங்கள் பதிவு பாராட்டுக்கள் நண்பரே!

ஆழிக்கரைமுத்து said...

தோழர் கலைவாணியே எவன் ஒருவன் சாதி இருக்கிறது என்று எண்ணுகிறானோ அவனெல்லாம் பார்ப்பனியவாதியே. பார்ப்பானின் காலை நக்கிப்பிழைக்கும் பார்ப்பனியர்கள் இவர்கள். பார்ப்பானும் பார்ப்பனியனும் தமிழருக்கு எதிரிகளே.

நீங்கள் கூறுவது போல் இங்குள்ள CPI(ML)(SOC) புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்றவைகளும் இராயகரன் பற்றியும் ஈழம் பற்றியும் தெரியாமல் ஜால்ரா போடவில்லை தெரிந்துதான் ஜால்ரா போடுகிறார்கள். அவர்களின் கட்சித்திட்டத்தில் இந்தியா என்பது 85 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு புனிதமான நாடு என்று உள்ளது. மார்க்சியத்தின்படி பார்த்தால் புனிதம் என்ற வார்த்தையே தவறானது. உலகில் உள்ள அனைத்துமே மாறுதல் தன்மையுடையது. புனிதம் என்று எதுவுமே இல்லை என்பதுதான் மார்க்சிய கோட்பாடு. ஆனால் இவர்களின் கட்சி திட்டமே இப்படி பார்ப்பனியத்தனமாக உள்ளது. மேலும் இந்து என்ற ஒரு வார்த்தையே 1788 ஆண்டு காலத்தில் MC MULLER என்ற ஆங்கிலேயன் வைத்த பெயர்தான். அதற்கு முன்பு இந்து , இந்தி , இந்தியா என்று ஒரு சொல் கூட இங்கு இல்லை. இதை பார்ப்பனர்களின் லோககுருவான முன்னாள் காஞ்சி சங்கராச்சியார் தனது "தெய்வத்தின் குரல்" என்ற நூலில் எழுதி ஒத்துக்கொண்டார்.

bala said...

//மேலும் இந்து என்ற ஒரு வார்த்தையே 1788 ஆண்டு காலத்தில் MC MULLER என்ற ஆங்கிலேயன் வைத்த பெயர்தான். அதற்கு முன்பு இந்து , இந்தி , இந்தியா என்று ஒரு சொல் கூட //

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கய் ஆழிக்கரை முத்து அய்யா,

ஆ அப்படியா?திராவிட நாடு என்று இருந்ததா?தமிழ் நாடு என்று ஒன்று இருந்ததா?முண்டம் முண்டம்.என்னமோ கண்டுபிடிசிட்ட மாறி உளறாதே கருப்பு சட்டை வெங்காய பன்னியே.

பாலா

ஆழிக்கரைமுத்து said...

நன்றி பாலா அவர்களே இந்து மதம் என்று எதுவும் இங்கில்லை என்று ஒத்துக்கொண்டமைக்கு.

தமிழன் said...

பாலா கருத்தை நான்கு பேர் படிப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதுங்கள். தகாத வார்த்தை தங்கள் தரத்தை குறைத்து மதிப்பிட வைக்கிறது.