Monday, December 1, 2008

தமிழர் அரட்டை தளம் மற்றும் இலவச விளம்பரதளம்

உலகத்தமிழர்களே தமிழர்களுடன் உரையாட அரட்டை அடிக்க வாருங்கள் http://addboxsl.com/chat.html


தமிழர்களாய் இணைவோம் தமிழர்களின் அரட்டை அறையில்.

Monday, November 24, 2008

இலவச விளம்பர இணையதளம்

வலையில் உலாவும் பொழுது ஒரு விளம்பர தளத்தினை காண நேர்ந்தது. அது தமிழரால் நடத்தப்படும் தமிழர்களுக்கான இலவச விளம்பர தளம். இத்தளத்தில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பினையும் இலவசமாக கொடுத்துள்ளனர். மற்றும் பொழுதுபோக்குக்கு அரட்டை , விவாதத்துக்கு விவாதக்களம் , பொது அறிவு களஞ்சியம் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

பல தளங்களில் தொலைக்காட்சியினை இணையத்தில் காண கட்டணம் உண்டு. ஆனால் இத்தளத்தில் கட்டணமின்றி பல வகை பயனுள்ள தகவல்களை நமக்கு அளிக்கின்றனர்.

அத்தளத்தின் பெயர் www.addboxsl.com

இத்தளமானது நாம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று நான் எண்ணுகிறேன். நீங்களும் பார்த்துவிட்டு கருத்தினை சொல்லுங்கள்.

Saturday, November 8, 2008

ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தீக்கதிர்-துக்ளக்-தினமலர்-தி இந்து

தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் சாக்கடை எதுவென்றும் அதில் ஊறிய மட்டை எதுவென்றும்.

மேற்கண்ட மூன்று இதழ்களும் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமானவை என்று உங்களுக்குத்தெரிந்திருக்கும். மேற்கண்ட கழிசடைகளில் ஒரு நாளும் தமிழ் , தமிழர் , தமிழக நலன் பற்றிய செய்திகள் வந்தது இல்லை. தமிழகம்தான் வந்தேறிகளின் வேட்டைக்காடாகிற்றே. இப்பார்ப்பன பத்திரிக்கைகளில் உண்மைக்குப்புறம்பான தமிழர் நலனுக்கு எதிரானசெய்திகள் மட்டுமே வரும்.

பார்ப்பான் அனைத்து முகமூடிகளையும் அணிவான். எம்முகமூடி அணிந்தாலும் அவனது பார்ப்பனிய தமிழர் விரோத தன்மை மாறாது என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே சொன்னதை உண்மை என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

ஓட்டுப்பொறுக்கிகள் சாக்கடையில் இறங்காமல் தன்னலம் கருதாமல் தங்களால் முடிந்த மக்கள் நல செயல்களை பல பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் பொது நலத்தோடு செயல்படும் பெரியார் திராவிடர்கழகத்தினர் காட்டுமிராண்டிகளாம் சமூக விரோதிகளாம்.. இதை யார் கூறுகிறார் என்று பாருங்கள் உண்மை என்னவென்று தெரியும் :


இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம் சென்னை, அக். 19 -

இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.


துக்ளக் சோ :

கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?

ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.


கூறிவிட்டார்கள் சமூகத்துக்காக உழைப்பவர்கள்(!?)

தமிழ்நாட்டுக்கு கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டுமென்று தமிழக அமைச்சர்கள் முயற்சித்த பொழுது,
வேண்டாம் வேண்டாம் தமிழ்நாட்டுக்கு
கடல்சார் பலகலைக்கழகம்
வேண்டாம் வேண்டாம்

இதைக் கூறியவர்கள் வேறு மாநிலத்தவர்கள் யாருமில்லை மதுரையைச் சேர்ந்த மக்களுக்காக பாடுபடும்(!?)
CPI(M) கட்சியின் MP.
மேலும் தகவலுக்கு என் முந்திய பதிவைக்காணவும்...

தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு

சோவை பற்றிக்கூறத்தேவையில்லை. உங்களுக்குத்தெரியும்........



Saturday, November 1, 2008

நடிகர் சரத் தின் ஈழத்தமிழர் ஆதரவு உரை

இன்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட ஒளிக்காட்சியை கூகிளில் தேடிய பொழுது கிடைத்த வீடியோக்கள் :

காண சொடுக்கவும்

நடிகர் சரத் குமார் உரை

Thursday, October 30, 2008

ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்

ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்

அன்புள்ள மாமா அறிவது நான் நலம், நீங்கள் சுகமாய் இருக்க இறைவன் அருள் புரிவாராக,

மேலும்,

மாமா கண்ணி வெடியில இல்லாம போன உங்களின் கால் எப்படி இருக்கு?.... மருந்து செய்யிறீங்களா?... உங்கள பாக்கிறக்கும் யாரும் இல்லை. எப்படி மாமா இருக்கிறீங்கள்? உங்களை நினைச்சு அம்மம்மாக்கு ஒரே வருத்தம். மாமா நான் இப்ப அம்மம்மாக்களோட தான் இருக்கிறன். அப்பாவும் அம்மாவும் இடம்பெயர்ந்து வேற எங்கயோ இருக்கினம்.

மாமா என்னால இங்க இருக்கேலாது. பள்ளிக்கூடம் போறேல்ல. எனக்கு படித்து பெரிய ஆளா வரணும் என்று ஆசையா இருக்கு. நாங்கள் ஒரு கிழமையா பதுங்கு குழிக்குள்ள தான் இருக்கிறம். சாப்பிட்டு ஜஞ்சு ஆறு நாள் ஆகுது மாமா. கடைக்கு போகேலாது அதுக்குள்ள கிபிர் வந்திரும். எனக்கு தங்கச்சியை பாக்கணும் போல இருக்கு.

கிபிர் வருது மாமா எங்க அடிக்கிறாங்களோ தெரியாது! இப்ப கிபிர் போடுற குண்டு எங்கட பதுங்கு குழிக்குள்ள வந்து வெடிக்குமாம். அதில பட்டா நாங்கள் எல்லாரும் எரிஞ்சு தான் சாவமாம். எனக்கு நினைக்கவே பயமா இருக்கு மாமா. இப்பவே என்னை வந்து கூட்டிகொண்டு போங்கோ. நீங்க இப்ப வராட்டி, நீங்க வரேக்க நான் உயிருடன் இருப்பனோ தெரியாது.

மாமா நீங்கள் வரும் வரை நான் பதுங்கு குழிக்குள்ள சாப்பிடாம இருப்பன். கெதியா வாங்கோ வரேக்க சாப்பாடு கட்டி வாங்கோ..

இப்படிக்கு மருமகன்
சர்மிளன்

நான் படித்த இடம் : http://www.mgr.mywebdunia.com/2008/10/30/1225364820000.html

எது உண்மை உங்களுக்கு தெரியுமா?

இதை சொடுக்கவும் காண...

முரசொலியா? thatstamil ...ஆ?

முரசொலி செய்தி உண்மையா ? thatstamil செய்தி உண்மையா?

முரசொலி செய்தி :

வானூர் ஒன்றியச் செயலாளர் இரா.தங்க மனோகரன் மறைவு
முதல்வர் கலைஞர் - நிதியமைச்சர் பேராசிரியர் ஆர்க்காடு வீராசாமி - மு.க.ஸ்டாலின் இரங்கல்
-சென்னை, அக.30

வானூர் ஒன்றியச் செயலாளர் இரா.தங்க மனோகரன் (வயது 50) நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென இயற்கை யெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவலறிந்து அன்னாரது துணைவியார் திருமதி சாந்தி மனோகரனுக்கு, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து முதல்வர் கலைஞர், நிதியமைச்சர் பேராசிரியர், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் தந்தி அனுப்பியுள்ளனர்.

ஆதாரம் : http://www.murasoli.in/Content.aspx?type=PartyNews&id=200810301559291801



thatstamil செய்தி :

இலங்கை-நிதி திரட்டுகையில் திமுக செயலர் மரணம்
வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008
RSS thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts இலவச நியூஸ் லெட்டர் பெற  thatsTamil Bookmarks


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றிய திமுக செயலாளர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி நிரட்டும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய செயலாளராக இருந்தவர் தங்க மனோகரன் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரை அருள்மிகு வக்கிர காளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தார்.

வழக்கம் போல் இன்றும் இலங்கை தமிழர்களுக்கு நிதி நிரட்டிக் கொண்டிருந்த போது காலை 10.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

ஈழ நிதி: திருச்சி ரூ. 10 லட்சம் வசூல்:

இதற்கிடையே இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்டம் இதுவரை ரூ. 10 லட்சம் பணத்தை வசூலித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செளன்டய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ. 50, 000 நிதியை அளித்துள்ளார்.

மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, செளந்தரபாண்டியன் ஆகியோர் தலா ரூ. 25,000 நிதியளித்துள்ளனர்.

மாவட்ட நலக் கமிட்டியின் பொருளாளர் கோவிந்தராஜு ரூ. 1 லட்சம் நிதியளித்துள்ளார்.

சேவை என்கிற தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள கோவிந்தராஜு அந்த அமைப்பின் சார்பில் ரூ. 25,000 நிதியை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆதாரம் : http://thatstamil.oneindia.in/news/2008/10/30/tn-dmk-secretary-dies-while-collecting-fund-for-lankan-tamil.html

நண்பர்களே நாம் அனைவரும் செய்திகளை இணையத்தில் பார்க்க thatstamil தளத்தினை பயன்படுத்தி வந்தோம். இப்பொழுது அதில் வருவது நம்பிக்கைக்கு உரியதா என்று எண்ணத்தோன்றுகிறது.....

அல்லது முரசொலி செய்தி...யா?

எது இதில் உண்மை ?

உங்களில் யாருக்கேனும் தெரியுமா?

தெரிந்தால் என் சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் நண்பர்களே..




Sunday, October 26, 2008

உலகமெங்கும் தமிழின விரோதிகளின் படங்களை திரையிட தடை




படத்தில் இருப்பது : மலையாள பார்ப்பனன்
நன்றி : http://www.lankasriads.com

ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 12:29.02 PM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே பல விதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் 22 ஓக்டோபர் 2008 அன்று வெளிவந்த செய்தி இதழில் இருந்து ஒரு சிறிய பகுதியை இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.




ஆதாரங்கள் : ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு

தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு

நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அரசியல்வாதி என்பவன் குண்டர் படை வைத்துக்கொண்டோ அல்லது ஒரு நபரின் பிச்சைக்காசுக்காக தன்னை ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களை கண்டுகொள்ளாமல் அந்த ஒரு சில முதலாளித்துவ நபருக்கு நாயாக கிடப்பார்கள் என்று பல படங்களில் வரும்.

தன்னை நம்பி ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்த மக்களுக்கு எதிராக செயல்படும் சுயநலவாதிகள் இங்கு மார்க்சிச போர்வையில் பதுங்கி உள்ளனர் என்பது அவ்வப்பொழுது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதுரையிலே மதுரை மக்கள் தங்களுக்கு இவர் நன்மை செய்வார் என்று நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மார்க்சிய வேடத்தில் இருக்கும் ஒரு தமிழின விரோதி தமிழ்நாட்டில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக செயல்பட்டுள்ளான்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள் நாங்கள் என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்கள் அந்த கட்சியினர்.
எந்த ஒரு நாட்டிலோ இப்படிப்பட்ட ஒரு தேசபக்தனை பார்க்க இயலுமா?

இவர்கள் பேசும் தேசியம் இதுதானா?

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருக்கும் ஒரு நபரே இப்படியென்றால் அவர் தலைமைகள் எப்படி இருக்கும் என்று சொல்லவே கூசுகிறது.

பெட் ரோல் விலையை எதிர்த்து போராட்டம் அந்த விலைவாசி உயர்வைக்கண்டித்து போராட்டம் ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் என்று அப்பாவி உழைக்கும் மக்களே ஏமாற்றும் மார்க்சிசுடுகளே...

உங்களுக்கு சிறு கேள்விகள் அல்லது எனது வேண்டுகோள்:

தேர்தலின் பொழுது நீங்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில்தானே
இருந்தீர்கள்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கும் பொழுது உங்கள் கட்சிக்கு எந்த துறை வேண்டும் என்று கேட்டு வாங்கவேண்டியதுதானே?

பெட் ரோல் விலையேற்றம் போராட்டம் சொல்லும் மார்க்சிசுடுகளே அந்த துறையினை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்ரோல் விலையைக்குறைக்கபாருங்களேன்...?

....................ஏன் மவுனம்?

கலைஞர் அவர்கள் உங்களிடம் கேட்டார்தானே உங்களுக்கு எந்த துறை வேண்டுமென்று அப்பொழுதே எனக்கு இந்த துறை தாருங்கள் நாங்கள் சிறப்பாக செய்கிறோ என்று சொல்லலாமல்லவா?

எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லமாட்டீர்கள். பார்ப்பனர்கள் அலுங்காமல் குலுங்காமல் மக்களை ஏமாற்றுபவன் தமிழினத்தை ஒழிக்க வேண்டுமென்பது உங்கள் கொள்கை எனபது எங்களுக்கு தெரியும்.

நீங்கள் தமிழ்தாய்தந்தைக்கு பிறக்கவில்லை என்பது.

அதனால்தான் நீங்கள் தொடர்ந்து தமிழின விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் என்பது. தமிழருக்கு பிறந்தவன் தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கமாட்டான்.

உங்களுக்கு மேற்கு வங்காளம் வளர்ந்தால் போதும். அதனால்தான் கடல்சார் பல்கலைக்கழகத்தை மேற்கு வங்காளத்தில் அமைக்க கூறுகிறீர்கள். பின்பு எதுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். உங்கள் மூட்டைமுடிச்சுகளை கட்டிக்கொண்டு நிம்மதியாக மே.வ. போய்ச்சேருங்கள்.

நீங்கள் தமிழ்நாட்டில் செய்வதை கருநாடகத்தில் செய்திருந்தால் என்ன நடந்திருக்குமென்று எண்ணிப்பாருங்கள்....

என்ன உடம்பில் உதறல் எடுக்கிறதா....?

இங்குள்ள தமிழ்நாய்களுக்கு சூடும் இல்லை சுரணையும் இல்லை. உங்களை சொல்லி எந்த தவறும் இல்லை. எல்லாம் சூடு சுரணையற்ற எச்சில் துண்டுகளுக்கு அலையும் இந்த தமிழ்நாய்களை சொல்லவேண்டும்.

திரையிலே இயக்குநர்களிடம் சாவி இயக்கத்துக்கு செயல்படும் பொம்மைகளை தல , தலைவன், வாழும் கடவுள் என்கிறான்.

தான் வாழ்வதற்கு தமிழனின் பணம் வேண்டும் ஆனால் தமிழன் வாழ நான் ஏன் வரவேண்டும் என்று கேட்கிறான் ஒரு மலையாள பார்ப்பான்.

தமிழ்நாட்டில் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தமிழ்நாட்டிற்கு பயன்படக்கூடாதென்று மற்ற இடங்களில் தொழில் நிறுவனங்கள் கட்டுகிறான். சரி அது உன் தாய்நாட்டுப்பற்று. ஆனால் உணட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது நியாயம்தானா?

சரி சரி அவர்கள் படத்தில்தான் நடிகர்கள் ஆனால் இங்குள்ள மார்க்சிசுகள் உண்மையான நடிகர்கள் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.

என் தமிழ் உறவுகளே என்றுதான் நீங்கள் தாய்நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று கொள்ளப்போகிறீர்கள்......?

அதற்குண்டான விடைதான் எனக்கு இன்னும் தெரியவில்லை...........

அவ்விடைக்காக காத்திருக்கும் ஒரு கடைக்கோடி நெய்தல் நில தமிழன்................................................



என்றுதான் தலைநிமிர்வானோ இந்த தமிழன்......?

நன்றி :

ஆதாரம் : www.thatstamil.com

மே.வங்கத்துக்கு கொடி பிடித்த தமிழக எம்பி!

Saturday, October 25, 2008

தீபாவளி கண்டிக்கப்படவேண்டும்! - தந்தை பெரியார்

இந்து கடவுள்கள், அவற்றின் புராணக்கதைகள் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கற்பனைகள்?
20 ஆம் நூற்றாண்டில் அவைகளை நடப்பு மூலம் செய்து காட்டுவது என்பது மேலும் எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் என்று கேட்கிறேன். ஒரு மனிதன் (அசுரன்) பூமியைப் பாயாகச் சுருட்டித் தூக்கி எடுத்துக் கொண்டு போய் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்றால், எழுதினவன் எவ்வளவு மடையன் என்றால், அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனும், காட்டுமிராண்டித் தன்மை கொண்ட அயோக்கியனுமாய் இருக்க வேண்டும்?

பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பற்றி பார்ப்பனர்கள் நெருப்பில் நிற்பவர்களைப் போல துடிக்கிறார்கள், பதறுகிறார்கள். கடவுளை, மதத்தை நிந்தனை செய்கிறார்கள் என்றால் இந்தக் கடவுள்களையும், இந்தக் கதைகளைக் கொண்ட மதத்தையும் நிந்தனை செய்வது தப்பிதமா? நிந்தனை செய்து அழித்து ஒழிக்காமல் இருப்பது தப்பிதமா?

அப்பனும் மகளும் கணவன் மனைவியான கடவுள் கதை
தாய் என்றும் மகள் என்றும் பேதத்தை உணர்ந்த மனிதர்களைக் கேட்கிறேன். பத்து நாட்களுக்கு முன் அப்பனும் மகளும் கணவன் மனைவியாக வாழும் கடவுள்களின் கதையை, பண்டிகையாகக் கொண்டாடினார்கள். அதே முட்டாள்கள் பூமியைப் பாயாகச் சுருட்டிய கதையையும், அதே கதையை பூமிதேவி என்னும் கடவுளை பன்றி என்ற கடவுளை பன்றி உருவத்தில் கலவி செய்து ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையையே விஷ்ணு என்னும் கடவுளும் அதன் பெண்டாட்டியும் (அப்பிள்ளையின் தாயாரும்) சேர்ந்து கொன்றார்கள். அப்படி கொன்ற நாளை மகிழ்ச்சி நாளாக பண்டிகை கொண்டாடப்போகிறோம் என்றால் இந்தக் கொண்டாட்டக்காரர்கள் மனிதர்களா? மனிதப் பிறவிகளா என்று கேட்கிறேன்?

கடவுளின் பெயரால் நம் பெண்கள் தாசி ஆவதா?
கடவுள், மதம், கடவுள் கதைகள் (புராணங்கள்) என்னும் பெயரால் மனிதன் எக்காத்திற்கும் மடையனாய், முட்டாளாய், அயோக்கியனாய் காட்டுமிராண்டியாகவே இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனிதன் தன்னை ஏன் மனிதன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? மனிதன் பகுத்தறிவுவாதி என்றாலும் அந்தப் பகுத்தறிவின் மூலமே நாளுக்கு நாள், சகலதுறைகளிலும் மாற்றம் அடைந்து, வளர்ச்சி அடைந்து கொண்டு வரும்போது காட்டுமிராண்டி காலத்து அயோக்கிய கற்பனைகளைப் பற்றி கூட சிந்திப்பது அக்கிரமம் என்றால் இப்படிச் சொல்லும் கூட்டத்தினிடம் ஆட்சி இருக்குமானால் நம் கதி என்ன ஆவது?

இந்தக் கடவுளையும், மதத்தையும், மதக்கதைகளையும் சாக்காகக் காட்டி தமிழ் மக்களை இனியும் எத்தனை நாளைக்கு மடையர்களாக மானங்கெட்ட இழிமக்களாக ஆக்கி அதன் மூலம் வயிறு பிழைக்கலாம் உயர்வாழ்வு வாழலாம் என்றும் அயோக்கியர்கள் கருதி இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை!

இந்த நரகாசுரனைக் கொன்ற நாள் எனும் பெயரால் தீபாவளி எனும் பண்டிகை வரப்போகிறது. இதற்கு அரசாங்கத்தார் விடுமுறை விடுவது என்பது நீண்டநாளாய் நடந்து வருகிறது. இந்தப் பண்டிகையால் மக்களுக்கு எவ்வளவு மானக்கேடு, இழிவு, மெனக்கேடு, பணச்செலவு முதலியவை இருந்தாலும் மக்களின் அறிவு எவ்வளவு தூரம் பாழாக்கப்பட்டு, மக்கள் மடையர்கள் ஆகிறார்கள் என்பதும் பின் சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் எவ்வளவு தூரம் அறிவு கெட்டு மூடநம்பிக்கைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் பற்றி சிந்தித்தால் மனம் பதறுகிறது.

இது மாத்திரமா? இச்செய்கையை நம்மால் நிறுத்த முடிய வில்லை. என்றால் நாம் எவ்வளவு தூரம் சமுதாயத்திலும் அரசியலிலும் அடிமைகளாக இருக்கிறோம் என்பது புலனாகிறது. தீபாவளி கண்டன நாள் பொதுக்கூட்டம் நடத்துங்கள்! பி.ஏ., எம்.ஏ., பொது அறிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இந்த மடைமையான காட்டுமிராண்டிச் செயலுக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள் என்றால் இன்றையக் கல்வி எவ்வளவு தூரம் அறிவை, மானத்தை உண்டாக்க முடியாத, அறிவுக்குப் பயனற்ற கல்வியாக இருக்கிறது என்பதைக் கருதி வேதனைப் படுகிறோம். அரசாங்கமும் இன்றைய கல்விக்கு “தகுதி, திறமை” இல்லை என்றுதான் கவலைப்படுகிறதே தவிர, கல்வியினால் அறிவு ஏற்படவில்லையே என்று எந்த அரசாங்கமுமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே இதன் மூலம் நமது இயக்கத் தோழர்களை, கூடுமானால் பகுத்தறிவு இயக்கத் தோழர்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். என்னவென்றால் தமிழ்நாட்டில் ஆங்காங்கு உள்ள கழக, பகுத்தறிவு இயக்கத் தோழர்கள் வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி கண்டன நாள் என்று ஒரு நாள் ஏற்படுத்திக்கொண்டு அன்று பொதுக்கூட்டம் கூட்டியும் வீடு வீடாகச் சென்றும் தீபாவளிப் பண்டிகை என்னும் முட்டாள்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை விளக்கிச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

-தந்தை பெரியார்

Tuesday, October 21, 2008

தமிழ்மணம் மற்றும் தமிழ்மண பார்வையாளர்களுக்கு நன்றி

எனது வலைப்பூவில் நான் இன்று எழுதிய கட்டுரையை தமிழ்மண உறுப்பினர் ஒருவர் www.tamilwin.com என்ற இணையதளத்திற்கு அனுப்பி அதில் வெளியிட்டுள்ளார். எனது அக்கட்டுரை அத்தளத்திற்கு அனுப்பிய தமிழ்மணம் நண்பருக்கு எனது நன்றிகள்.

தமிழ் வின் தளத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்....

தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - இந்திய மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சி

நன்றி

Monday, October 20, 2008

தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - CPI(M)



பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம்.

நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும் இணைக்கும் கைக்கூலி பார்ப்பான் சிறீலங்கா இரத்னா விருது பெற்ற இந்து இராம்.

தந்தை பெரியார் அன்றே சொன்னார் கன்னியாகுமரியில் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் காசுமீர் பார்ப்பானுக்கு வலிக்கும் என்று.
அதைப்போல் இங்குள்ள தமிழின எதிரி பார்ப்பான் CPI ( M) கட்சியின் இந்து இராமை கண்டித்தால் சிங்களவனுக்கும் இங்குள்ள போலி கம்யூனிசு CPI(M) க்கும் வலிக்கிறது.

என்னவொரு ஒற்றுமை இலங்கையிலே சிங்களவர்கள் என்றால் தமிழ்நாட்டிலே நாங்கள் இருக்கிறோம் என்று பார்ப்பன இந்திய மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சி வெளிப்படுத்திவருகிறது.

சிங்கள JVP மற்றும் அனைத்து சிங்கள் பார்ப்பனிய அமைப்புகளே நீங்கள் கவலைப்படாதீர்கள் தமிழகத்திலே உங்களுக்கு நாங்கள் துணை இருக்கிறோம் இங்குள்ள cpi(m) கட்சி கொக்கரிக்கிறது.

தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறை , காவிரி நீர், முல்லைப்பெரியாறு, பாலாறு போன்றவைகளும் ஏனைய துறைகளும் வாழ்வாதரங்களும் தமிழர்களுக்கு கிடைக்காதவண்ணம் தடுத்து நாங்கள் தமிழர்களை பட்டினியாலும் பசியாலும் வேலையின்மையாலும் கொன்று குவிக்கிறோம். நீங்கள் ஆயுதங்களாலும், அணு ஆயுதங்களாலும் தமிழர்களை கொல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு மறைமுகமாக உதவுகிறோம். நாங்கள் இங்கு தமிழர்களை சிந்திக்கவிடாமல் கம்யூனிசத்தால் குழப்பிவிட்டு இவர்களை நாங்கள் கொல்லுகிறோம்.

--இதுவே இங்குள்ள CPI(M) மற்றும் CPI-ML(SOC) யின் மனசாட்சி.

தீக்கதிரில் வந்த கட்டுரை :

இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம் சென்னை, அக். 19 -

இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.

எனது கட்டுரையை வெளியிட்ட தமிழ்வின் தளத்துக்கு நன்றி

Tuesday, October 14, 2008

கம்யூனிச தோல் போர்த்திய பார்ப்பனர்கள்(BJPயின் நிழல் அமைப்பு)

இன்று காலை மஞ்சள் பத்திரிக்கையான தினமலர் நாளிதழ் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு தலைப்பு எனது கண்ணில் தனியாக தென்பட்டது. என்னவென்று பார்த்தால் "சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"...

மார்க்சிடு கம்யூனிசுடு கட்சிகளைத்தான் நாம் பூணூல் போட்ட பார்ப்பான் என்று கூறிவந்தோம். இப்பொழுது CPI போன்றவைகளும் நாங்களும் மார்க்சுடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை நிரூபித்து பார்ப்பனியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உலகமக்கள் அனைவருக்குமே தெரியும் இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்று. இந்தியப்பிரதமர் பார்ப்பனரான நேரு அவர்கள் கூட தனது மகள் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "இராமாயணம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்த ஆரியர்கள் எழுதிய ஆரிய-திராவிடர் போராட்டத்தின் கற்பனைக்கதையே" என்றுக்கூறியுள்ளார்.

சரி மார்க்சியக்கோட்பாட்டின்படி பார்த்தால் இராமாயணம் என்பதை எப்படி கூறுவது?

சக்தி பூஜையில் குதிரையின் மூலம் பிறந்தவந்தான் இராமன் என்று தொடக்கமே ஆபாசமாகவும் அறிவுக்கும் ஒவ்வாததுமாக இருக்கிறது. மார்க்க்சியம் என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து உண்மையை அறி என்பது . கருத்து முதல்வாதம் , பொருள்முதல்வாதம் என்று மக்களை குழப்பும் கம்யூனிசுடு கட்சிகளே முதலில் உங்களுக்கு கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் பற்றித்தெரியுமா?

தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி பேசமாட்டீர்கள்.

தினமலர் நாளிதழில் வந்த செய்தி:

"சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"

கோவை:அரசு அலுவலகங்களின் செயலற்ற, லஞ்ச நிர்வாகங்களால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதிகளின் கையிலும், 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.


கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட வக்கீல் சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் கனகராஜ், பொருளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் கோவை எம்,பி., சுப்பராயன் பேசியதாவது: உலகப் பெருங்காவியங்களில் சிறந்த, போற்றத்தக்க காவியம் ராமாயணம். இதை இயற்றிய வால்மீகி, தன் சிஷ்யர்களிடம், "மிகச்சிறந்த, தனக்கு பிடித்த தவம் சகிப்பு' என்றார். இது தான் இன்றைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாராம்சம். எந்த மதத்தினருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் சட்ட வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்திய அரசியல் அமைப்பில், சட்டம் இயற்றும் குழு, நீதி பரிபாலனம், நிர்வாகம் ஆகியன ஜனநாயகத்தில மூன்று முக்கிய தூண்கள். ஆனால், இந்த மூன்றும், இந்தியாவில் இப்போது அழுகிக் கொண்டிருக்கின்றன.


பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாநில அரசில், சமீபத்தில் பதவியேற்ற அமைச்சர்களில் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என, 40 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தான் சட்டம் இயற்றும் மேதைகளாக, சட்ட அங்கம் வகிக்கின்றனர்.ஒரு எம்.பி., தனது 10 கைவிரல்களிலும் தங்க மோதிரம் போட்டு வருகிறார். இன்னொருவர் கீழே குனியும் போது அவர் கழுத்திலிருந்து, கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் "வடக்கயிறு' வடிவத்தில் தங்கச் செயின் கீழே விழுகிறது. மக்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் மதிக்கப்படுகின்றனர்.


இப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொது மக்களின் பெட்டிஷன்களை யாரும் படிப்பதில்லை. இதனால், புதியவர்கள் சொல்லும் கருத்துக்களை மக்கள் கூர்த்து கவனிக்கின்றனர். நிர்வாக திறமையற்ற தன்மையால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதத்தின் கையில் உள்ளன. அதேபோல 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு காரணம், மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் சிதறிக் கிடக்கின்றனர். பொதுமக்கள் ஒன்று பட்டால் மட்டுமே நாட்டின் அவலங்களுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்."

நன்றி : தினமலர்

http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Coimbatore&ncat_ta=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#88900

Friday, October 10, 2008

உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக....

உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தன் நாட்டு அரசுத் தொலைக்காட்சியை நட்டத்தில் மூழ்கடித்த பெருமை மாறன் குடும்பத்தினரையே சாரும். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அரசுத்தொலைக்காட்சி என்பதை மறக்கச்செய்த பெருமை முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சருக்கே.

எந்த ஒரு நாட்டைப்பார்த்தாலும் அந்நாட்டின் அரசுத்தொலைக்காட்சிக்கும் அரசு வானொலிகளுக்கும்தான் அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இங்கோ அப்படி ஒன்று இருக்கின்றதா என்று மக்களை கேட்க வைத்துவிட்டார்கள் அந்த சுயநலவாதிகள்.

தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிபரப்பு என்று பீற்றிக்கொள்ளும் மாறன்களே. உங்கள் தொலைக்காட்ட்சியினால் மக்களுக்கு செய்த பயன்கள்தான் என்ன?
உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக....

1 ) தமிழர்களை இழிவுபடுத்தும் மகாபாரதம் என்ற புரட்டை ஞாயிறு காலை 10 மணியன்று போட்டு தமிழக மக்களை ஆரியத்திற்கு அடிமைப்படுத்தினீர்.

2) அதன் பின்பு இராமாயணம் என்ற ஒரு ஆரிய ஆபாசப்புரட்டை போட்டு கம்பனை விட பல மடங்கு நாங்கள் தமிழினத்துரோகத்தில் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்தீர்கள்.

3) பின்பு அறிவுக்கு ஒவ்வாத சவுபர்ணிகா போன்ற பேய் பிசாசு போன்றக்கதைகளைப் போட்டு வீரத்தோடு வளர்க்க வேண்டிய குழந்தைகளை பயப்படும்படி ஆக்கினீர்கள்.

4) பின்பு இரண்டு பெண்டாட்டி கதை , இரண்டு கணவன் கதை , மனைவியின் தங்கையுடன், மனைவியின் தோழியுடன் குடும்பம் நடத்துவது... இன்னும் சொல்ல இயலாத பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஆபாசக்கதைகளைப்போட்டீர்கள்.

5) பெண்களை வீரத்துடன் காண்பிப்பேன் என்று ஆபாசக்கதைகளையும், குடும்ப உறவை பண்பாட்டைச் சிதைக்கும் பார்ப்பன புராணங்களை இக்காலகட்டத்தில் புதிய கம்பனாக நீங்கள் மாறி எழுதியுள்ளீர்கள்.

6 ) தமிழர்களுக்கு எதிரான ஆரியப்பார்ப்பனர்களை மட்டும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் காண்பித்தீர்கள்.

சீர்கேடுகள்:

ist of serials

(நன்றி : விக்கிபீடியா)

இப்பொழுதும் காண்பித்துக்கொணுதான் உள்ளீர்கள்.

என்னமோ ஆங்கிலேயர்கள்தான் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தமிழ் நாட்டில் தமிழ் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப்பெயர். கேட்டால் தமிழ் மாலை என்பீர்கள். செருப்பு மாலை கூட உங்களுக்கு போட இயலாது. செருப்பானது மக்களுக்கு இரண்டாம் கால் போன்றது மக்களுக்கு பயன் உள்ளது. ஆனால் உங்களால் யாருக்குதான் பயன்....?

உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.......

1) தமிழ்நாட்டில் தமிழ் மொழியினைச்சிதைத்தது

2)தமிழ் தமிழ்பண்பாட்டினைச்சீரழித்தது

3) பெண்களை போகப்பொருளாக ஆக்கியது...

4) வீரப்பெண் என்றுக்கூறி பெண்களை ஆபாசப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தியது.

5) இப்பொழுது பண்பலைகளில் தமிழ்மொழியினைச்சிதைத்து வருவது...


தனது சொந்த நிறுவனங்களை வளர்ப்பதை மக்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக தன்னைவிளம்பரப்படுத்தும் செயல்களை மட்டும் செய்து கொண்டு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு தகவல் தொடர்பு துறையினை தான் தான் கொண்டுவந்தேன் என்று பீற்றிக்கொண்ட முன்னாள் அமைச்சரே...


1 ) தொலைக்காட்சி & வானொலி என்று ஒன்று தகவல் தொடர்பு துறையில் வராதா?

பீற்றிக்கொள்ளும் பார்ப்பானே அருகிலிருக்கும் சிறு நாடான இலங்கை யினை பார்....

இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாகிணி உங்கள் சன் கம்பெனி வருவதற்கு முன்பே DIGITAL STEREO ஒளி ஓலிபரப்பில் சிறப்பாக தமிழிலும் ஒளிபரப்பிவருகிறார்கள்.சாதாரண ANTENNA மூலமாகவே அவர்கள் சிறந்த தொலைக்காட்சிகளை நடத்திவருகின்றனர்.

தூயதமிழிலே ஆபாசமற்ற பல நிகழ்ச்சிகளை சிறப்பாக அங்கு நடத்திவருகிறார்கள்.

2) நீங்கள் ஆரம்பித்துள்ள suryan fm க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையிலே சூரியன் பண்பலை என்று சிறப்பான பண்பலை வானொலியினை நடத்திவருகின்றனர். மேலும் சிறப்பாக தமிழில் சிற்றலைவரிசைவானொலியினையும் நடத்தினார்கள்.

இலங்கை அரசின் வானொலிகளான இலங்கை வர்த்தக சேவை மற்றும் அரசால் நடத்தப்படும் அனைத்து வானொலிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே digital stero தொழில்நுட்பத்தில் நடத்திவருகின்றனர்.

3) தொலைத்தொடர்புத்துறையில் இலங்கையில் எப்பொழுதோ 3G ( ஒலி ஒளி) செல்வழிப்பேசி வசதிகளும் அகண்ட அலைவரிசை இணையதள வரிசையும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. வாழ்நாள் validity உள்ள தொலைபேசிகளும் செல்பேசிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே இருக்கின்றது.

கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் பொழுதும் கடற்கரையில் ஓய்வெடுக்கும்பொழுதும் இனிமையாக எம்மக்கள் கேட்டு இரசித்த சூரியன் பண்பலை அலைவரிசை க்கு நடுவில் சென்னை இரங்கநாதன் தெரு இரச்சலைப்போல suryan fm என்பதை புகுத்தி எங்களின் இன்பத்தினையும் கெடுத்துவிட்டீர்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக இருந்து அவர் நாட்டுக்கு(?!) செய்தவை..

Suryan FM - Chennai - 93.5 MHz SFM - Kozhikode - 93.5 MHz SFM - Nasik - 93.5 MHz
Suryan FM - Coimbatore - 93.5 MHz SFM - Indore - 93.5 MHzSFM - Vadodara - 93.5 MHz
Suryan FM - Tirunelveli - 93.5 MHz SFM - Vijayawada - 93.5 MHz SFM - Rajkot - 93.5 MHz
Suryan FM - Madurai - 93.5 MHz SFM - Varanasi - 93.5 MHz SFM - Aurangabad - 93.5 MHz
Suryan FM - Tuticorin - 93.5 MHz SFM - Rajahmundry - 93.5 MHz SFM - Ahmedabad - 93.5 MHz
Suryan FM - Pondicherry - 93.5 MHz SFM - Kanpur - 93.5 MHz SFM - Warangal - 93.5 MHz
Suryan FM - Tiruchy - 93.5 MHz SFM - Thiruvananthapuram - 93.5 MHzSFM - Nagpur - 93.5 MHz
SFM - Vishakapatinam - 93.5 MHz SFM - Thrissur - 93.5 MHz SFM - Kochi - 93.5 MHz
SFM - Bangalore - 93.5 MHz SFM - Mangalore - 93.5 MHzSFM - Gulbarga - 93.5 MHz
SFM - Hyderabad - 93.5 MHz SFM - Kannur - 93.5 MHzSFM - Asansol - 93.5 MHz
SFM - Jaipur - 93.5 MHzSFM - Allahabad - 93.5 MHz
SFM - Bhubaneshwar - 93.5 MHzSFM - Jabalpur - 93.5 MHz
SFM - Tirupati - 93.5 MHzSFM - Mysore - 93.5 MHz
SFM - Lucknow - 93.5 MHz SFM - Guwahati - 93.5 MHz
SFM - Bhopal - 93.5 MHzSFM - Jamshedpur - 93.5 MHz
SunTV, KTV, Sun Music, Sun News, Chutti TV, SuryaTV, KiranTV, GeminiTV, TejaTV, AdithyaTV, Teja News, Gemini News, Gemini Music, Gemini Cable Vision, UdayaTV, UsheTV, Udaya2, Udaya Movies, Udaya Varthegalu & Udaya News.



கோட்டு சூட்டும் கோதுமை ரொட்டியும் AC அறையில் உட்கார்ந்து கொண்டு இப்படித் தின்ற உங்களுக்கு தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை எவ்வித விளம்பரமும் பகட்டும் இல்லாமல் வேட்டி சட்டையும் உப்புப்போட்ட கஞ்சி குடிக்கும் தமிழன் ஆ.இராசா வை குறை சொல்லுவதற்கு யோக்கியதை இருக்கிறதா? அல்லது ஆதாரம்தான் இருக்கின்றதா?

ஆதாரம் இல்லாமல் பார்ப்பானுக்கு நிகராக MASS MEDIA வை உங்கள் கையில் வைத்திருப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? ம்ம்ம் இப்பொழுதுதான் பார்ப்பனர்களின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே.

உம்மைப்போல சுய நல நரித்தன பார்ப்பன சிந்தனை கொண்டவர் இல்லை எங்கள் தமிழர் ஆ.இராசா.

பெரியாரின் பகுத்தறிவு பொதுநல சிந்தைகொண்டவர் நடுவண் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா.

ஆரியர்களின் சூழ்ச்சியை திராவிடர் ஆ.இராசா முறியடிப்பார் முழுதாக.

Thursday, October 9, 2008

தமிழ் பெண்கள் எழுச்சி நாள்

மனதில் நிற்க வேண்டியவை:
  1. அவ்வையார்
  2. பெண்போராளி ரோசா லுக்சம்பர்க் 05/03/1871 - 18/01/1919
  3. விண்வெளியைச்சுற்றிய முதல் பெண் வாலண்ட்டினா பிறப்பு 07/03/1937
  4. போராளி சாவித்திரிபாய் பூலே இறப்பு 10/033/1897
  5. ருசியாவில் பெண்களுக்கு சமஉரிமை அமல் 02/04/1917
  6. அனைத்து உலக விலைமாதர் உரிமை நாள் ஏப்ரல் 03
  7. போராளி சோன் ஆஃப் ஆர்ர்க் பிறப்பு 06/04/1412
  8. ஈழ அன்னை பூபதி இறப்பு 19/04/1988
  9. பிளாரன்சு நைட்டிங்கேல் பிறப்பு 12/05/1820
  10. ஈழப்போராளி இராதா வீரமரணம் 20/05/1987
  11. அன்னை நாகம்மையார்( பெரியாரின் துணைவியார்) இறப்பு 21/05/1933
  12. போராளி சோன் ஆஃப் எரித்துக் கொலை 30/05/1431
  13. கிரன்பேடி பிறப்பு 09/06/1941
  14. ஜான்சி இராணி இலக்குமிபாய் பிறப்பு 17/06/1835
  15. வீரத்தாய் வேலுநாச்சியார் அரசியல் வாழ்வு தொடக்கம் 25/06/1772
  16. முதல் பெண்மருத்துவர் முத்துலக்குகி இறப்பு 222/07
  17. பூலான்தேவி படுகொலல 25/07/22001
  18. பெண் மருத்துவர்கள் நாள் சூலை 30
  19. செஞ்சோலை பெண் குழந்தைகள் நினைவு நாள் 14/08/2006
  20. போராளி அங்கயற்கன்னி வீரமரணம் 16/08/1994
  21. அன்னை தெரசா பிறப்பு 26/08/1910
  22. அன்னை தெரசா இறப்பு 05/09/1997
  23. சிப்கோ பெண்கள் இயக்கம் 16/09/1974
  24. போராளி மாலதி( நினைவு நாள் 10.10.1987)
  25. போராளி கிளாராஜெட்கின்
  26. போராளி ஜென்னி
  27. போராளி குரூப்சிகயா
  28. போராளி சோதியா
  29. போராளி அறிவுமலர்
  30. போராளி திருமகள்
  31. மேரி கியூரி பிறப்பு 07/11/1933
  32. தமிழ் மொழிப்போரில் முதல்முறையாக பெண்கள் தளைப்படுத்தல் 13/11/1938
  33. வீரத்தாய் வேலுநாச்சியார் நினைவு 25/12/1796
  34. சாவித்திரிபாய் பூலே பிறப்பு 03/01/1831
  35. இரண்டாம் உலகப்போர் பாலியல் வன்முறைக்கு சப்பான் கொரியப்பெண்களிடம் பொறுத்தருள வேண்டல் 13/01/1992

எனக்குத் தெரிந்த பெண்களை பற்றிய தகவல்களை இதில் அளித்துள்ளேன். மேலும் உங்களிடம் இருந்தும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்

Wednesday, October 8, 2008

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்- தந்தை பெரியார்


(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை" 9.10.1957)

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

 - தந்தை பெரியார்
(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)

Tuesday, October 7, 2008

சரஸ்வதி பூஜை அறிவுக்கு சிறிதும் ஒவ்வாததே - தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர் மட்டும் படித்து பெரிய படிப்பாளிகளாக ஆகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


முதலாவது சரஸ்வதியென்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.அதாவது சரஸ்வதி என்கிற பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு இந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவர் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி உடன்படாமல் பெண்மான் உருவெடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஓர் ஆண்மான் உருவெடுத்து தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து மானைக் கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பித்த செயலும், பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!


சரஸ்வதியின் உற்பவத்தைக் குறித்த மற்றொரு கதையின் படி, சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறாள். அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி - மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் பார்ப்பனர் புராணப்படியே மிக்க ஆபாசமும், ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.நிற்க,


இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமென்றும், வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு சரஸ்வதி பூஜையென்றும், ஆயுதபூஜையென்றும் ஒரு நாளை குறித்து வைத்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் அடுக்கி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.

இந்தப் பூஜையில் அரசன் தனது போர் ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரசாலைக்காரர்கள் இயந்திரங்களையும் மாணவர்கள் பாடபுத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கக் சேலை ரவிக்கைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் உழவர்கள் மண்வெட்டி, ஏர் முதலிய உழவுக் கருவிகளையும் மற்றும் இது போன்ற ஒவ்வொருவரும் அவரவர் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களையும் வைத்துப் பூஜை செய்கிறார்கள்.இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று, அதனால் வரக்கூடிய வரும்படிகளும் போய், பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பாகத்தைச் செலவு செய்து போதாவிடில் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட, இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கிறது.


ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்தே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா?சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ; தப்பு நிறை நிறுத்தாமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அது போலவே கைத்தொழில் செய்பவர்களும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாகத் தொழில் கிடைக்கின்றது என்றாலும் சொல்வதற்கு இல்லாமல்தானே இருக்கிறார்கள்!அது போலவே புத்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதப் குப்பைகளையும் வைத்து சந்தப் பொட்டு இட்டு, பூஜை செய்கிறார்களே அல்லாமல் காலோ கையோ பட்டு விட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டுப் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகின்றார்கள்.


இவ்வளவு ஆயுதபூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன?நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்துக்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்.என்னைப் பொறுத்த வகையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது கருத்து.


வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கிற பேச்சோ கல்வி தெய்வம் என்ற எண்ணமோ அறவே இல்லை. அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதி தெய்வமாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிட்டு வருகிறோம்! இருந்தாலும் நமக்குக் கல்வியில்லை!ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதை கழிக்கப் போனால் அந்த ஏட்டை (சரஸ்வதியை)க் கொண்டே மலம் துடைத்துங் கூட அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண்கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால், பூஜை செய்பவர்களைத் தற்குறிக ளாகவும், மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதையே சிந்தித்துப் பாருங்கள்.


யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வத்தின் அம்சமாயிருக்குமானால் அதைப் பூஜை செய்யும் நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்குமா?சரஸ்வதியைக் கனவிலும் கருதாமல் சரஸ்வதி பூஜை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.


இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது; நேரச் செலவாவது; அறிவைப் பறி கொடுப்பது. பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேளவாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பானுக்கு தட்சணை சமாராதணை ஊர்விட்டு போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்நாட் டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானமாகும் என்று கணக்குப் பார்த்தாலே மற்ற பண்டிகைகள், உற்சவங்கள், புண்ணிய தினங்கள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? நாட்கள் என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை எவ்வளவு அதிகம் என்பது சுலபத்தில் விளங்கிவிடுமே! இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணரும் கணக்குப் பார்த்ததே இல்லையே!


(விடுதலை - 12-10-1969)

சக்தி பூஜை - உண்மைவிளக்கம்

பார்ப்பன (பிராமண) ஆண்கள் , பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களின் மனைவி, சகோதரி , மகன் & மகள் ஆகியோருடன் ஒன்றுகூடி சோமபானம்( சாராயம், ரம், பிராந்தி ) குடித்து , ஒரு பார்ப்பான( பிராமண) பெண்ணை நிர்வாணப்படுத்தி , அவள் மர்மக்குறியை துர்க்காதேவியாகப் பாவித்துப் பூசை செய்தல் துர்க்கா பூசையாகும். ஒரு பார்ப்பன(பிராமண) ஆணை நிர்வாணப்படுத்தி அவன் குறியைப்பூசை செய்தல் லிங்க பூசை.

பூசை முடிந்ததும் , பூஜைக்கு வந்துள்ள பார்ப்பன(பிராமண) பெண்களின் ரவிக்கைகளை எல்லாம் ஒன்று சேர்த்து , ஒரு மண் குடத்தில் போட்டுக் குலுக்கி பார்ப்பன ஆண்களை எடுக்கச்சொல்வது.

எந்த இரவிக்கையை எந்த ஆண் எடுக்கிறானோ அந்த இரவிக்கை தன் சகோதரியாகவும் வேறு யாராக இருந்தாலும் சரியே, அந்த இரவிக்கைக்குரியவளைப் புணர்ந்து , காம இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளுதலே சக்தி பூஜையாம்!

ஆதாரம் : நாத்திரீக ஆதாரம்.

("பெரியாரின் இந்து மதப்பண்டிகைகள்" நூலிலிருந்து)

பார்ப்பனியத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழர்களே இந்த உண்மையை ஒரு முறையாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

புறக்கணியுங்கள் இக்கேடுகட்ட ஆபாசமான பார்ப்பன விழாக்களை, பார்ப்பானின் பண்பாட்டுப்போரை அழித்தொழிப்போம்.

திராவிடப் பண்பாட்டை பின்பற்றுவோம்.

Monday, October 6, 2008

ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா? - பெண்விடுதலைப் போராளி பெரியார்

எல்லாத் துறைகளிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனமில்லை. பெண்கள், சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமேயல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்களென்பேன்.

நாமும் அவர்களை சிசு, குழந்தைப் பருவம் முதல் ஓடி ஆடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்தும் பேத உணர்ச்சியற்று ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரம் அல்லாமல், அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை, அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாகச் செய்து கொண்டு, அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணாக அமைவது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு கருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்! இந்த இழிநிலையில் பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.

நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழைஅடித்துப் பாடமந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பற்றுப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழப்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல் மருந்து) போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து, அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும்.

நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள்; பெருமையடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பொம்மைகளாக (பதுமைகளாக) ஆக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

நம் பெண்கள் நாட்டுக்கு சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களையும், சினிமா நட்சத்திரங்களையும் பார்த்து தினம் ஒரு ‘பேஷன்' நகை, துணிக்கட்டு, வெட்டு சாயல் ஏற்பட்டதுவே என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? இவை எல்லாவற்றையும் நம்குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றால் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகின்றேன்.

எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாகவும் ஆக்க வேண்டும். பெண்ணும், தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

- தந்தை பெரியார்

‘வாழ்க்கைத் துணை நலம்' நூலிலிருந்து. (1958 ஆம் ஆண்டுப் பதிப்பு)

Saturday, October 4, 2008

தமிழினத்துரோகிகள்

இராமேசுவரப்பகுதியில் சிங்கள அரச பயங்கரவாதிகளோடு இந்திய அரசானது இணைந்து கூட்டு ரோந்து என்ற ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அனைத்து மக்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இந்து மீ.கி. வீரமணி அவர்களின் ஒரு பேட்டியை தினத்தந்தி நாளிதழில் காண நேர்ந்தது. ஆளும்கட்சியினை துதி பாடுவதையே தொழிலாகக் கொண்ட அவர் "இராமேசுவரம் பகுதியில் இந்திய இலங்கை இராணுவ கூட்டு ரோந்து வரவேற்கத்தக்கது " என்று பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடைக்கோடித்தமிழனுக்கும் இக்கூட்டு ரோந்தினால் எப்படிப்பட்ட தீமை என்பது தெளிவாக தெரியும். தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட இவருக்கு இதைப்பற்றிய உண்மைகள் தெரியாதா....?


தெரிந்தாலும்தான் என்ன சொல்லபோகிறார் நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்று கூறிவிடுவார் இன்னும் தன்னை இந்து என்று பதிவு செய்துகொண்டிருக்கும் இந்து மீ.கி.வீரமணி அவர்கள்.

இவர் மட்டுமல்ல இவருக்கு ஜால்ரா போட இவரது பெயரை தனது பிள்ளைகளுக்கு பெயராக சூட்டிய வீரமணி பற்றாளர்களும்(ஜால்ராக்களும்) அப்பெயரை கொண்டவர்களும் அவரைப்போலவே ஜால்ராக்களாகவும் பெரியாரை விளம்பரத்துக்காக பயன்படுத்துபவர்களாகவுமே உள்ளனர். சங்கராச்சாரியாரை விடக்கேவலமாக பேசிக்கொண்டு பெரியாரிய பெண்ணிய வேடமிட்டுக்கொண்டு பல தமிழின துரோகிகள் உள்ளனர். இவர்களையெல்லாம் களையெடுக்காமல் நமது போராட்டம் முற்றுப்பெறாது.

ஈழப்பிரச்சினையில் தமிழக மார்க்சிசுடுகளின் பார்ப்பனியம்

1) நம்மைப்பொறுத்த வரை CPI என்பது பூணூல் போடாத பார்ப்பான், CPI ( M) என்பது பூணூல் போட்ட பார்ப்பான்.

என்ன ஆனாலும் தன் பார்ப்பனியத்தை பார்ப்பான் விட்டுவிடமாட்டான் என்பதற்கு இங்குள்ள இப்படிப்பட்ட போலி மார்க்சிசுடுகளே உதாரணமாக கூறலாம்.

CPI பார்ப்பனர்க்களுக்காவது மனதில் ஈரம் இருக்கிறது. ஆனால் CPI(M) என்பது மார்க்சிய வேடமிட்ட பார்ப்பான் என்பதை பலமுறை நிரூபித்துவருகிறது.

உதாரணமாக கோவையில் நடைபெற்ற சேலம் தொடர்வண்டி கோட்ட பிரச்சினையில் தி.மு.க, அ.தி.மு.க., இ.பொ.க,, பா.ம.க, வி.சி... மற்றும் அனைத்து பார்ப்பனரல்லாத கட்சிகளும் பெரியார் திராவிடர்கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கட்சி பேதமின்றி அனைவரும் தமிழர் என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆனால் இங்குள்ள CPI(M) ஆனது கேரள பார்ப்பனர்களோடு இணைந்து இவர்களின் போராட்டத்தை எதிர்த்தது. மேலும் காவிரி நீர் பிரச்சினை , முல்லைபெரியாறு பிரச்சினை , பாலாறு பிரச்சினை போன்ற தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களைப்பற்றி இது வரை CPI(M) என்ற மார்க்சிய முகமூடி அணிந்த பார்ப்பனர்கள் இதுவரை பேசியதில்லை.

மேலும் ஆண்டுதோறும் CPI(M) நடத்தும் கட்சி மாநாடுகளில் ஈழமக்களை வேட்டையாடும் மிருகமான சிங்கள பார்ப்பனக்கட்சியான JVP க்கு தவறாமல் அழைப்பு உண்டு. தவறாமல் கலந்துகொள்வார்கள் சிங்களப்பார்ப்பனர்களும் இவர்களின் மாநாடுகளில்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக தனது நாளிதழ்களில் சிங்கள அரச பயங்கரவாததிற்கு ஆதரவாக எழுதிவரும் இந்து இராம் ..ஐ மிகவும் தூக்கிப்பிடிப்பார்கள் இப்பார்ப்பன CPI(M) கட்சியினர். அவர்களின் மாணவரணியான இந்திய மாணவர் சங்கத்தில் தலைவராக இந்து இராம் இருந்த காலம் தொட்டே தனது பார்ப்பனியத்தினை தவறாமல் கடைப்பிடித்துவருவதால்.

சில கிழமைகளுக்கு முன்பு ஒரு கிழமை இதழில் " மார்க்சிசுடு கம்யூனிசுட் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் சிங்கள JVP யுடன் இணைந்து செயல்படலாம் " என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று வந்துள்ளது.

சிங்கள பார்ப்பனர்களுக்கும் இங்குள்ள பார்ப்பன CPI(M) க்கும் தூதராக செயல்படுவது சிங்கள இரத்தினா என்ற விருது பெற்ற இந்து இராம்.


செஞ்சோலையிலே குழந்தைகளை சிங்கள அரசபயங்கரவாதிகள் கொன்ற பொழுதும் CPI(M) சிங்களர்களுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.

ஆனால் இ.பொ.க. வின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சிங்கள அரசைக்கண்டித்து சென்னை சிங்கள உளவுப்பிரிவு அலுவலம் (தூதரகம்) முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்திகைதானார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள இ.பொ.க.(CPI) ஆனது சிறிதளவாவது மனதில் ஈரமிருக்கிறது ஆனால் CPI(M) மோ தன் பார்ப்பனியத்திமிரை சிறிதளவும் கைவிடாமல் தான் ஒரு பார்ப்பான் என்பதை வெளிக்காட்டிவருகின்றனர்.

2) CPI மற்றும் CPI(M) போன்ற இரண்டுக்கட்சிகளையும் போலி கம்யூனிசுடுகள் என்றுக்கூறி தான் தான் உண்மையான கம்யூனிசுடு என்று பீற்றிக்கொள்ளும் CPI(ML)(SOC) என்ற பார்ப்பனிய அமைப்பானது பிராச்ன்சில் வசிக்கும் ஈழத்துரோகி பி.இராயகரன் என்பவருடன் இணைந்து கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் CPI(M) பார்ப்பனர்களுக்கும் ஒருபடி மேலாக சென்று அங்குள்ள போராளிகள் ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகூலிகள் கடற்கொள்ளைக்காரர்கள் பாசிசுடுகள் என்றும் ஒரு மக்களின் விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

"தமிழீழமக்கள் அமெரிக்காவில் நடத்திய விளையாட்டுப்போட்டி மைதானத்தில் அவர்களின் கொடியினை விட பெரியதாக சிவப்பாக கோகோ கோலாவின் விளம்பரம்தான் கண்ணுக்கு தெரிகிறது, அவர்கள் அமெரிக்காவின் கைகூலிகள்" என்று பி.இராயகரன் எழுதுகிறார் அதை இவர்களின் புதிய கலாச்சாரம் , புதிய ஜனநாயகம் வெளியிடுகிறது.

போலிப்பார்ப்பனர்களே நீங்கள் கூடத்தான் உங்கள் நிகழ்ச்சிகளை கடவுளர் படங்களும் பெப்சி கோகோ கோலா படங்களும் மாட்டப்பட்ட அரங்குகளில் நடத்துகிறீர்கள்.

அவர்கள் விளையாட்டுப்போட்டி நடத்திய மைதானம் அமெரிக்காவில் , அந்த மைதான உரிமையாளர் அவர் விருப்பப்படி கோகோ கோலாவோ பெப்சியோ யாரிடமும் விளம்பரம் வாங்கிபோடலாம்.
அந்த அரங்கில் வாடகைக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துபவர்கள் ஈழமக்கள், உரிமையாளர் அமெரிக்கர் என்ற ஒரு சிறு அறிவு கூட இல்லாதவர்களா நீங்கள்?

ஆயுதப்போராட்டமே தீர்வு என்று வாய் கிழியக்கத்தியும் மதில்களில் எழுதியும் வரும் பார்ப்பனர்களே இது வரை ஒருமுறையாவது ஈழமக்களின் விடுதலைக்கு என்ன தீர்வென்று பேசியுள்ளீர்களா?

நீங்கள் பேச மாட்டீர்கள் ஏனென்றால் உங்கள் தலைவர் மருதையன் என்ற அய்யங்காரன் ஒரு பார்ப்பான் தானே.


குறிப்பு:

CPI(ML)(SOC) என்பது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பதன் உண்மையான பெயர். COMMUNIST PARTY OF INDIA (MARXIST LENINIST)(STATE ORGANISATAION COMMITTEE)
ம.க.இ.க.வின் தலைவர் மருதையன் என்பது ஒரு புனைப்பெயர்தான். அவர் ஒரு பார்ப்பனர்தான். அவரின் உண்மையான பெயர் ஒரு பார்ப்பனபெயர்தான்.

தொடரும்....

Saturday, September 27, 2008

இராச்(RAJ) தொ.கா. செய்தி சேகரிக்கும் தன்மை

இன்று சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி கிடைத்ததும். தொ.கா. செய்திகளை பார்ப்பதற்காக SUN NEWS & RAJ NEWS போன்ற செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதில் SUN NEWS இல் செய்திகளை தெளிவாக தெரிவித்தனர்.

ஆனால் RAJ செய்தியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திராவிடர்கழகம் என்றும் அதன் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்தது : பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் : கொளத்தூர் தா.செ மணி.

இந்த உண்மைகள் ராச் செய்தியாளர்களுக்கு தெரியவில்லையா?

அல்லது

தோழர் கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் பெரியார் திராவிடர்கழகம்தான் உண்மையான திராவிடர்கழகம் சென்று சொல்லவருகின்றனரா?

எனக்குப்புரியவில்லை என்ன சொல்லுகின்றார்கள் என்று. உங்களுக்குத்தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் தி.க. வின் செயல்பாடுகளை தி.க செயல்பாடு என்று திரித்து இங்குள்ள வியாபார நோக்கிலான பல தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Saturday, September 20, 2008

இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!-தமிழச்சி


பாரீஸ்,
16.09.2008

27.07.2008 - அன்று ஈழத்தில் நடைப்பெற்ற ஜீலை படுகொலைகள் நினைவாகப் பிரான்சில் நடத்தப்பட்ட 'நெடுங்குருதி' நிகழ்வின் ஏற்பாட்டாளர் திரு. குகன் அவர்கள் நிகழ்வு நடைப்பெறுவதற்கு முன்தினம் பிரான்ஸ் நாட்டு போலீசாரால் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை அனுபவித்தவர். மேலும் இவர் மீது பிரான்ஸ் போலீசில் பல வழக்குகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் குற்றப்பிரிவில் இவர் பெயர் நிரந்தரமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுங்குருதி நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மார்க்ஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். திரு. குகன் கைதுக்கு பிறகும் திரு. சோபா சக்தி அவர்கள் பொறுப்பேற்று நிகழ்த்தினார். பெரும்பான்மை மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர்களில் சிலரும் நிகழ்ச்சியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்றார்.

08.09.2008 அன்று கனடாவில் நடைப்பெற்ற 27 - ஆம் வருட பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இலக்கியவாதிகள் (நாகரீகம் கருதி பிரசுகரிப்பது தவீர்க்கப்படுகின்றது) அரசியல் சூழ்ச்சிக்கு தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றனர்.

பெண்கள் சந்திப்பு, தலீத் மகாநாடு, இலக்கிய சந்திப்பு அல்லது நிகழ்வுகள் என்ற பெயரில் பின்னணியில் இயங்குவது தீவிரவாத ஈழ அரசியல் மட்டுமே. இப்படி திரைமறைவுக்கு பின்னே இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாத அரசியலை இணையத்தில் 'தேசம் நெற்' இணையம் மற்றும் சில தனிநபர்கள் துணிந்து வெளிப்படுத்திய போது மறைமுகமாகவும், பகீரங்கமாகவும் மிரட்டப்படுகிறார்கள்.

ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் வன்முறை காட்டும் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற நெடுங்குருதி நிகழ்வும், பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் சாட்சியங்களுடன் அம்பலப்பட்ட நேரத்தில் கூட்டறிக்கை என்ற பெயரால் 74 பேர்களின் கையெப்பத்தில் ஜனநாயகம் பேசுகிறார்கள். எங்கேயிருந்து வருகிறது பொறுக்கித்தனம்?

தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதற்கு மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது ஏன்? அரசு அங்கீகாரம் பெறாத இவர்களின் அமைப்பும் கூட்டம் வராத மாநாட்டுக்கும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளை வரவழித்து அரசியல் செய்வது ஏன்? வன்முறையாளர்கள் ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் பொய் முகங்களுடன் வன்முறை அரசியல் செய்யும் இவர்கள் கூட்டங்களில் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளையும் திசைதிருப்பும் முயற்சி தமிழ்நாட்டிற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர 'பெரியார் விழிப்புணர்வு' இயக்கத்தினரும், உலக தமிழர்களும் இணையம் வழியாக தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டம் மூலமாக அறிவிக்கின்றோம்.

கருத்துக்ளையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அறிக்கைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
http://thesamnet.co.uk/?p=2630
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3974:2008-09-13-11-46-45&catid=74:2008
http://www.thenee.com/html/130908-2.html
http://inioru.com/?p=911
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2316:-1983-2008-q-&catid=74:2008&Itemid=76
http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html
http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=56
http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf


நன்றி

தொடர்புகளுக்கு: periyar.europe@gmail.com

பெரியார் விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள்.
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா
பிரான்ஸ் நாட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.
பதிவு எண்கள் : 0772014997

*****

பின்குறிப்பு : 01.10.2008 அன்று தமிழக முதல்வர் அவர்களிடம் 'பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின்' இக்கோரிக்கை அறிக்கையின் இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப இருப்பதால் சமூக ஆவலர்களும், தோழர்களும், பொது மக்களும் தங்களுடைய கருத்துக்களை பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா வலைப்பூவின் அறிக்கையில் பின்னூட்டம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வறிக்கையை சமூகவாதிகளும், தோழர்களும், இணையத்தளங்களும், நாளிதழ்களும், விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

ஈழத்துப்பெண்ணின் வாழ்க்கை

பிறப்பு முதல் இறப்பு வரை குறுந்தொடர், மனித உரிமைகள் மறந்து கிடக்கும் இலங்கை தீவினிலே மனித உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஈழதேசத்தில் என்றும் அழகுடன் காட்சியளிக்கும் புளியங்குளம் கிராமத்தின் ஆற்று நீரின் சலசல ஓசையும் குருவிகளின் கீச்சிடலும் ஓயாது கானம் இசைக்கும் வன்ப்பகுதியினால் சூழப்பட்ட ஓர் ஓலைக்குடிசையில் பிறந்த ஈழத் தமிழ் பெண்......... தாயின் கருவறையின் சுகத்தினை உணராது உலகத்தின் சுதந்திரத்தை அனுபவிக்க 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளினால் வைத்தியசாலைக்கு போக வழியில்லாது தவிக்கும் என் தாயின் ஏக்கம் சிறிதேனும் புரியாது இவ்உலகைப் பார்ப்பதற்கு தாயை துன்பப்படுத்தி துடிதுடித்தேன்.துன்பம் தங்கமுடியாத தாயும் தை 26ம் திகதி என்னை பிரசவித்தாள். குண்டு மழைக்கும் குருதி வெள்ளத்திற்கும் மத்தியில் ஆண்டுகள் ஓடின வயது மூன்று ஆகியது.கல்வி எனும் கடலின் கரையை அடைவதற்கு என் வீட்டின் பக்கத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலே கல்வியை ஆரம்பித்தேன்.மழலை மாறாத எங்களின் திறமையை திறம்பட சிற்பமாக்க முனைந்த முதல் சிற்பி என் அன்பு ஆசான் இந்திராணி................................தொடரும் இதோ என் வாழ்கை தொடர்கிறது. இந்திராணி ஆசிரியரின் வழிகாட்டலுடன் எனது பாடசாலை கல்வியை முல்லைத்தீவு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பயில தொடங்கினேன்.எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய பாடசாலை. அத்துடன் இன்றைய எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அண்ணா படித்த பாடசாலையும் இது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எனக்கு கஜன் அண்ணாவைத்தான் தெரியும் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு காணவில்லை.எமது பாடசாலையில் கல்விகற்ற தேசப்பற்றுக்கொண்ட மாணவர்களில் நான் மட்டும் விதிவிலக்கில்லை.எனது கல்வி 5ம் ஆண்டு வரை அப் பாடசாலையில் தொடர்ந்தது. தீ்டீரென என் வாழ்க்கை திசை திருப்பப்பட்டது.எனது அப்பா ஈழத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஏன்?...
மேலும் படிக்க
www.eelam.mywebdunia.com

Sunday, September 14, 2008

தமிழர் மீதான பண்பாட்டு போர் (cultural war)

வணக்கம் தோழர்களே

இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தமிழர்களும் உலகவாழ் தமிழர்களும் தங்கள் துணைவற விழாக்களில் ஆரியப் பார்ப்பானை வைத்து ஆரிய வழியில் துணைவற விழாவினை நடத்துகின்றனர்.

ஆரியப்பார்ப்பானை வைத்து துணைவற விழாவினை நடத்துவது தங்கள் குடும்ப கவுரமாக கருதுகின்றனர் இக்கால படித்த முட்டாள்கள். சென்னையில் நான் கண்ட பல விழாக்களில் நடுத்தரவர்க்க மக்களும் ஆரியப்பார்ப்பானை வைத்துதான் அதிகப்படியாக நடத்துகின்றனர். ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களைவிட இருபடி மேலே சென்று பார்ப்பான் இல்லாமல் துணைவற விழா இல்லை என்ற மூடத்தனமான எண்ணத்தில் இருக்கின்றனர்.

பார்ப்பான் வைத்து நடைபெறும் விழாக்களில் அவன் சொல்லும் நமக்கு புரியாத மொழி வார்த்தைகளை கேட்டுக்கொண்டு நாம் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம். அதன் தமிழாக்கத்தை அப்பார்ப்பானால் சொல்ல இயலாது. மீறி அவன் அதன் தமிழாக்கத்தினை சொன்னால் அங்கேயே அவன் உயிர் அவன் உடலை விட்டு நீக்கப்படும் சூடு சுரணையுள்ள தமிழர்களால்.

பார்ப்பானிம் துணைவற விழாவில் சொல்லப்படும் வேற்றுமொழி வார்த்தைகளில் பார்ப்பான் சொல்ல கேட்டு மணமகன் மணமகளிடம் சொல்லும் ஒரு கேவலமான வார்த்தைகள்...

ஸோமஹ: ப்ரதமோ
விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ;
த்ருதீயோ அக்னிஷ்டே
பதிஸதுரீயஸ்தே
மநுஷ்யஜாஹ..


இதன் தமிழாக்கம்:

தேவனாகிய சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்:

கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான் ;

அக்னிதேவன் உன்னை மூன்றவதாக அடைந்தான்;

மனித வகுப்பைச்சார்ந்த நான் உனக்கு நான்காவது நாயகன்

தமிழர்களே இப்படிப்பட்ட ஒரு கேவலமான வார்த்தைகளால் உங்கள் வருங்கால துணைவியை சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா...?

ஈழத்துத்தமிழர்களே தமிழர்களுக்கு எதிரான போர் வகைகள் பல்வகை உண்டு
அவற்றில் ஒன்று பண்பாட்டு போர். ஆய்தப்போர் மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகாது உங்களை அறியாமலே நீங்கள் பண்பாட்டுச்சீரழிவில் அடிமைப்பட்டுள்ளீர்கள். தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க ஆரியப்பார்ப்பனர்களுக்கு எதிரான பண்பாட்டுப்போரையும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து விழாக்களையும் சுயமைரியாதையுடன் தமிழர்பண்பாட்டு முறையில் நடத்துவோம்.

ஆரிய விழாக்கள் அனைத்தும் தமிழர்களின் கருப்பு நாள். புறக்கணிப்போம் ஆரியர்களின் கேவலமான விழாக்களை.

தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம். ஆரியப்பார்ப்பன பண்பாட்டுப்போரை அழித்தொழிப்போம்.

Thursday, September 11, 2008

விரைவில் பழைய விடுதலை இதழ்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-டம்லர் டலைவர்


தோழர்களே இந்த தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் பழைய பச்சை அட்டை குடியரசை விடுதலையில் விளம்பரபடுத்தி அனைத்தையும்தான் எப்பொழுதோ வாங்கிவிட்டார் டம்லர் டலைவர்.
பார்ப்பன நடிகையின் ஆட்சியில் உண்மைக்குப்புறம்பாகவும் பெரியாரியத்துக்கு எதிராகவும் அவர் எழுதிய இரட்டை நாவுடன் பேசிய செயல்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பழைய விடுதலையில் உள்ளன.

"சமூக நீதி காத்த வீராங்கனை"
"பெரியாரை பெண் உருவில் காண்கிறேன்" - டம்ளர் டலைவர் ( பார்ப்பன நடிகையின் ஆட்சியில் பார்ப்பன நடிகையை புகழ்ந்தார்)

தி.க. கொடியினை வடிவமைத்தது கலைஞர் அல்ல ஈரோடை சேர்ந்த ஒருவர்தான் வடிவமைத்தார்- டம்ளர் டலைவர் (பார்ப்பன நடிகையின் ஆட்சியில்)

இதைப்போன்று டம்லர் டலைவரின் பல புரட்டல்களை பார்ப்பன நடிகையின் ஆட்சியில் வந்த விடுதலை நாளிதழில் காணலாம்.

திராவிடர்கழக கொடியினை வடிவமைத்தது கலைஞர்தான் - டம்ளர் டலைவர் ( உலகப்பெரியார் என்ற நூலில்) (கலைஞர் ஆட்சியில்)

கலைஞரை ஆதரிப்பது மிகப்பெரிய குற்றம் என்றால் அதை நான் திரும்ப திரும்ப செய்வேன் - டம்லர் டலைவர் ( கலைஞர் ஆட்சியில்)

ஆனால் கலைஞரை இரவில் பார்ப்பன ஆட்சியில் கைது செய்தபொழுது படு கேவலமாக பேட்டி கொடுத்தார் இதழ்களுக்கு 2001 ஆம் ஆண்டில் ( நந்தன் இதழில் விரிவாக காணலாம் )

கலைஞரை கைது செய்தபொழுது தமிழக மக்களின் நெஞ்சம் கொதித்தபொழுது மனதில் ஈரமில்லா அறிக்கைகள் டம்லர் டலைவரிடமிருந்து.

இந்த இரட்டை நாக்கு கருப்புச்சட்டை அணிந்த பார்ப்பானின் புரட்டல்களை உலகத்தமிழர்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக www.viduthalai.com என்ற இணையதளத்தில் இருந்த பழைய விடுதலை இதழ்கள் நீக்கப்பட்டுவிட்டன.

யாருக்கேனும் விடுதலை இதழ்கள் தேவைப்பட்டால் தேவைப்படுபவர் டம்லர் டலிவரை புகழ வேண்டும் வேண்டுபவர் டம்லர் டலைவரின் அடிமையாக இருக்க வேண்டும் அதிகப்படியான கையூட்டுகளை கொடுக்க வேண்டும்.

இவற்றை செய்யாத பொது மக்களுக்கும் மற்ற உண்மையான பெரியாரிய அமைப்புகளுக்கும் விடுதலை இதழ்கள் தரப்படமாட்டாது.

இந்த உண்மைகளை டம்லர் டலிவரால் வெளிப்படையாக கூற இயலாது என்பதால்தான்

இந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான மேற்கண்ட அறிக்கை.

தி.க.வின் இணையதளங்களை(www.periyar.org.in , www.viduthalai.com,...) mobilevedha என்ற நிறுவன்ம்தான் நிர்வகித்து வருகிறது. உண்மைகளை அறிய அந்த நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம்.

Contact Us
Mobile Veda Solutions,
Technology Business Incubator,
VIT University Campus,
Vellore - 632014.
Email Id: info@mobileveda.com

Personal Contact
K.R. Ganesh Ram,
Mobile Veda Solutions,
Mobile: +91 93622 11117.
Email Id: ganesh@mobileveda.com

இனி பழைய விடுதலை இதழ்களை நாம் படிக்க தளத்தில் வைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

பழைய இதழ்களை இணையத்தில் வெளியிட்டு(வெளியிடுவார்களா?!) எனது இந்த கட்டுரையை பொய்யாக்கினால் எனக்கும் உலகத்தமிழர்களுக்கும் மகிழ்ச்சிதான் என்பதை இறுதியாகக்கூறிக்கொள்கிறேன்.

Saturday, September 6, 2008

கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழனின் ஒரு மனம் திறந்த மடல்

தமிழகத்தமிழரின் கடைசி கையிருப்பாகிய கலைஞர் அய்யா அவர்களே..

பார்ப்பன நடிகையின் ஆட்சியில் நடிகையுடன் திரிந்த ஒரு துணை அரசியல்வாதியும் பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனக்குத்தானே தமிழர்தலைவர் என்று பெயர் சூட்டிக்கொண்டு தமிழின எதிரி பார்ப்பன நடிகைக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டத்தை அளித்து தந்தை பெரியாரை பெண் உருவில் காண்கிறேன் என்று பார்ப்பனத்தியின் காலில் கிடந்த ஒரு இரட்டை நாக்கு தமிழின துரோகியிடம் இருந்து அந்த துரோகியின் பெயரிலான பட்டத்தினை விருதினை தாங்கள் வாங்குவது தமிழர்களாகிய எங்களின் கண்களில் அரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.

பார்ப்பன ஆட்சியில் உங்கள் படுக்கையறையில் புகுந்து உங்களை கைது செய்தபொழுது....

"கலைஞருக்கு 24 அகவை தயாளு அம்மையாருக்கு 18 அகவை...." என்று உங்களை கிண்டல் செய்ததை நீங்கள் மறந்துவிட்டீரா?...

தமிழர் வரலாற்றில் தமிழின துரோகியாக பதிவு செய்த பல புதிர்களை தனது புன்சிரிப்பின் பின்னால் வைத்திருக்கும் ஒரு வியாபாரியிடமிருந்து நீங்கள் விருது வாங்குவது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்கள் அனைவருக்கும் இழுக்குதான்.

தமிழரின் கடைசி கையிருப்பாகிய உங்களிடம் கடைக்கோடித்தமிழனின் அன்பு வேண்டுகோள் இது.

பெரியாரிய துரோகிகளையும் தோற்கடிப்போம் பெரியாரியம் வெல்வோம்

Tuesday, September 2, 2008

விரைவில் கருப்புச்சட்டை அணிய தடை

பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் இருட்டில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்த கருப்புச்சட்டை அணிவதை தந்தை பெரியார் அவர்கள் அறிமுகம் செய்தார். பெரியாரின் புத்தகங்களும் , பேச்சுகளும், ஒலிநாடாக்களும் ஏற்கனவே தனியார் ஒருவருக்கு உடைமையானது என்று ஒருவர் உரிமை கொண்டாடி நெறியாளுகை மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

விரைவில் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட கருப்புச்சட்டை அணிவதும் இனிமேல் தனியாருக்கு உடைமையானது மற்றவர்கள் அணிய வேண்டுமென்றால் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று அறிக்கை வந்தாலும் அதிர்ச்சியடைவதற்கில்லை.
(ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் கருப்புச்சட்டை அணிந்துவிட்டதால் தடை செய்ய இயலாது.)

Friday, August 29, 2008

எச்சரிக்கை: பொதுமக்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும்,அமைப்புக்களுக்கும் & பத்திரிக்கைகளுக்கும்

உலகமக்களே தந்தை பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கருத்துக்களும் தனியாருக்கு உடைமையானது. எனவே அனைத்து மக்களும் அமைப்புகளும் இயக்கங்களும் தந்தை பெரியார் என்ற பெயரையும் அவரது சிந்தனைகளையும் நீங்கள் உங்கள் மனதில் நினைக்கவோ எண்ணவோ கூடாது.

மேலும் அவரது ஒலி நாடாக்களை கேட்பதும் தடை செய்யப்படுகிறது. தந்தை பெரியாரின் படங்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது.
தந்தை பெரியாரின் படங்களும், ஒலிநாடாக்களும் புத்தகங்களும், அவரின் சிலைகளும் பெரியார் என்ற பெயரும் பெரியாரால் அமைக்கப்பட்ட அமைப்புக்கே உடைமையானது.
எனவே இந்த எச்சரிக்கையை மீறி யாரும் மேற்கண்டவனற்றை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் அவர்களின் மேல் வழக்கு தொடரப்படும்.
இப்படிக்கு
ஆயுட்கால செயலாளர்
பெரியார் கருத்துக்களை தடைசெய்யும் நிறுவனம்
டம்ளர் டலைவர்

Monday, August 25, 2008

பாரீர் திடல் அடிமைகளின் விசுவாசம்

நேற்று பத்திரிக்கையில் டம்ளர் டலைவரின் அடிமையின் கட்டுரையை காண நேர்ந்தது. அவர் இதுவரை பெரியாரின் இயக்கத்துக்கு 50 காசு கூட செலவு செய்திருப்பாரா என்று வெளிப்படையாக கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்..

அவர் எப்படி சொல்லுவார்... அவருக்கு திடலில் 10000 முதல் 12000 வரை திங்கள் தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எப்படி அவர் தன் சொந்தக்கருத்தை எழுத இயலும். முதலாளியின் கருத்தைதானே எழுத இயலும்.
தன் சொந்தக்கருத்தை எழுதினால் யார் அவருக்கு சம்பளம் தருவார்கள்.

பெரியார் சொன்னார் பொது வாழ்க்கைக்கு வருபவன் அவன் வீட்டு சோற்றை தின்றுவிட்டு மற்றவன் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும் என்று.


இதெல்லாம் அவர்களுக்கு எதுக்கு மக்களுக்காக வாழ்பவன் என்றால் இந்தக்கருத்துக்கள் மனதில் இருக்கும்.

குத்தூசியாரின் ஜாமீன் கட்டுரைகளுக்கு வந்த பணத்தில் வளர்ந்ததுதான் அந்த பத்திரிக்கையும் திடலும்... ஆனால் திடலில் இருப்பவர்களுக்கு குத்தூசி குருசாமி யார் என்றாலே இப்பொழுது தெரியாது.


மக்களுக்கு உழைத்த அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் இருட்டடிப்புச்செய்த இவர்களால் வேறு என்ன செய்ய இயலும். அவர்கள் சோறு திங்க இந்த வியாபாரம் தானே வேண்டும்.

மாதக்கூலி வாங்குபவர்கள் தன் வீட்டை அடமானம் வைத்து பெரியார் கொள்கைகளை விடுதலை செய்பவர்களை பார்த்து சொல்கிறார். பெரியாரிய வியாபாரி என்று.

சிரிக்கத்தான் தோன்றுகிறது. உங்கள் கட்டு....உரைகளைப்பார்த்து.

சரி சரி நாங்கள் சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் ஆயிற்றே நீங்கள். யார் பெரியார் கருத்தினை செயல்படுத்துகிறார் யார் பெரியாரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தமிழகக்காவல்துறையினரிடமே கேட்டுப்பாருங்கள்(Q). ஆதாரங்கள் அவர்களிடமே உள்ளது.

சூடு சுரணை உள்ள ஒருவன் திடலில் அதாவது டம்ளர் டலைவரின் பின்னால் இருந்தால் யார் பெரியாரியக்க தலைவரோ அவருடன் தோளோடு
தோள் கொடுக்க செல்லுங்கள். இங்கு நீங்கள் பின்னால் நிற்க தேவையில்லை. தலைவருக்கு நிகராகவே நீங்கள் நிற்கலாம்.

நல்ல தொண்டனே நல்ல தலைவன்.

நல்ல தலைவன் என்பவன் தொண்டனின் தோளோடு தோள் சேர்த்து நிற்பவனே.

வாருங்கள் தோழர்களே சாதியற்ற மதமற்ற பெரியாரிய பொதுவுடைமைச்சமுதாயம் படைப்போம் நல்ல தலைவன் துணையோடு .

Sunday, August 24, 2008

தமிழர் தலைவர்-யார்?

"ஒரு நல்ல தொண்டனே ஒரு நல்ல தலைவன்"

தமிழர்களின் விடுதலையை கடைசி வரை முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரை தமிழக மக்கள் தமிழர்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

தமிழர்தலைவர் தந்தை பெரியார் என்பது அனைத்து மக்களும் தெரியும். அவர் இறந்த பின்பு அவர் பட்டத்தை தனதாக்கிக்கொண்டவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருப்பான் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.

தமிழர் தலைவர் இருவர் மட்டுமே...

ஒருவர் தந்தை பெரியார்

அவர் இறந்துவிட்டார்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழினத்தை தலை நிமிர வைத்தவர் உலக முழுவதும் தமிழர்களாலும் அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் முப்படை கண்ட எங்கள் தம்பி மட்டுமே.

தமிழர்தலைவர்....

வீணாக உலகத்தமிழர்களிடம் அடிபடாதீர்கள்...

தமிழ்நாட்டுத்தமிழன் பேசமட்டும்தான் செய்வான். கிழக்கிலிருக்கும் தமிழன் அப்படியில்லை.. நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்